பாகுபலி :THE CONCLUSION படத்தின் ட்ரைலரை யூ-டியூபில் பார்த்துக்கொண்டிருந்தேன், அப்போது recommended-இல் இந்த படம் என் பார்வை முன் வந்தது!!! எவ்வளவோ  எதிர்பார்ப்புகளுடனும் நம்மீது உள்ள நம்பிக்கையினாலும்  வெளிவந்த இப்படம் ஒருசேர மக்களாலும் விமர்சகர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டது!!!

எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன!!!! படம் நீளம் என்றார்கள், சோழர்கள் தவறாக சித்தர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்கள் , இரண்டாம் பாதியில் பேசப்படும் தமிழ் புரியவில்லை என்றார்கள், அருவருப்பு மிக்க காட்சிகள் அதிகம் என்றார்கள்!!!!!. ஆனால் உண்மையில் இது தான் காரணங்களா  இல்லை இந்த படத்தின் மீதான நம் புரிதலில் தவறா?

ஆங்கிலத்தில் இது போல Fantasy பாணி திரைப்படங்களின் வரவு அதிகம். இப்போது கூட இங்கே INDIANA ஜோன்ஸ் திரைப்படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகம்!!!. ஆனால் தமிழில் இது போன்ற முயற்சிகள் மிகமிக சொற்பமே!!!. அப்படியே நீங்கள் பார்த்திருந்தால் கூட மேலோட்டமாக தான் இந்த fantasy genre-ல் பயணத்திருக்குமே தவிர முற்றிலுமாக இல்லை . இவை எல்லாத்தையும் விட மிக பெரிய பொருட்செலவில் தத்ரூபமாக மிகவும் யோசித்து யோசித்து செதுக்கிய  திரைக்கதையுடன் வந்த  படம் என்றால் அது இதுவாகவே இருக்கும். யோசித்து…யோசித்து என ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா, பின் வரும் பகுதியில் விளக்கமளிக்கிறேன் !!!!!!!!

இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் முழுக்க முழுக்க இந்த படத்தின் மேலுள்ள காதலும் மற்றும் செல்வாவின் மேலும் உள்ள அசராத நம்பிக்கையும் மட்டுமே!!! நானொன்றும் ஆயிரத்தில் ஒருவனை நாம் தூக்கிப்பிடித்துக் கொண்டாடியிருக்க வேண்டும் என்று பேசப்போவதில்லை ஆனால் நாம் வெறுத்து  ஒதுக்கியிருக்க வேண்டாமே என என்றுதான் கூறவிழைகிறேன்!!!!

சற்றே யோசித்துப் பாருங்கள் தென்மேற்கு பருவக்காற்று , அன்பே சிவம், இருவர், ஆரண்ய காண்டம் போன்ற படங்களையெல்லாம் வெளிவந்தபோது கொண்டாடாமல் விட்டுவிட்டு ஒரு தேசியவிருதோ இல்ல உலக திரைப்பட விழாக்களில் கொண்டாடப்படும் போதோ தான் அதன் அருமை அறிந்து தேடித்தேடிப் பார்க்கிறறோம்!!! ஒரு சில படங்களுக்கு அது கூட நடப்பதில்லை!!!!

முதலில் இந்த படத்தின் கதை (படம் பார்க்காதவர்களுக்கு), சோழர்களின் சரித்திர நிகழ்வை ஒரு தெருக்கூத்திலிருந்து அப்படியே நிஜமாய் அந்த நூற்றாண்டிருக்கே பயணிக்கும் காட்சியோடு ஆரம்பிக்கிறது  இந்த படம். கி.பி 1279 இல்  பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையேயான போரில் பாண்டியரின் கை  ஓங்குகிறது. இதனால் சோழ ராஜா அவரது வாரிசை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுமாறு ராஜகுருவிடம் ஒப்படைக்கிறார். கூடவே பாண்டியர்களின் குலதெய்வ சிலையை கொடுத்து தூதுவன் வந்து தஞ்சைக்கு அழைத்து செல்லும் வரை அவர்களை அங்கேயே மறைந்து வாழவும் சொல்லுகிறார் .பாண்டியர்கள் போரில் ஜெயித்தாலும் அவர்களால் எவ்வளவு முயன்றும் சோழர்களின் வாரிசையும் இவர்களது குலதெய்வ சிலையையும் கண்டறிய முடியவில்லை. இது காலாகாலமாக தொடர்கிறது.

நிகழ்காலத்தில் இது பற்றி ஆராயச் சென்ற ஆண்ட்ரியாவின்(லாவண்யா) தந்தை பிரதாப் போத்தனும் மாயமாகிப் போகிறார். இவரை கண்டறிய தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி ரீமாசென் (அனிதா பாண்டியன்), ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் (ரவிசேகரன்) , ஆண்ட்ரியா  மற்றும் எடுபுடி வேலைகளுக்காக கார்த்தி (முத்து) மற்றும் அவரது சகாக்களுடன் ஒரு குழு வியட்நாமை நோக்கி புறப்படுகிறது.

அதன்பின் அவர்கள் எப்படி சோழ அரசை கண்டறிகிறார்கள் !! அந்த பயணத்தின் போது ஏற்படும் சாகசங்கள், இழப்புகள் என படம் இடைவேளை வரை விரிவடைகிறது. சோழ வம்சத்தை கண்டறிந்தபின் அங்கே நடக்கும் துரோகம், அதன் வலி என அனைத்தையும் தொட்டு ஆயிரத்தில் ஒருவன் யாரென்ற பதிலுடன் படம் முடிவடைகிறது.

முதலில் படத்தின் உழைத்திருக்கும் நாயகர்களை பார்ப்பதற்கு முன் இந்தப்படத்தின் மீதான என் புரிதலை சொல்லிவிட ஆசைப்படுகிறேன்!!! இது இப்படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட பல கேள்விக்கான பதில்கள்!! இதில் சில உங்களுக்கும் தோன்றிருக்கலாம்!!!

செல்வா சோழர்களை காட்சிப்படுத்தியிருந்த விதமே அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் உருவாக காரணமாயிருந்தது!!!! எனக்கு சேர-சோழ-பாண்டிய அரசர்களின் வரலாறு அவ்வளவு தெரியாது!!! நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தது நடிகர் திலகத்தின் “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்திலிருந்தே!!! அதன் பின் புத்தகங்கள் மற்றும் விக்கிப்பீடியா மூலமாக சிலவற்றை அறிந்துகொண்டேன்!! நான் தெரிந்துகொண்ட வரலாற்றின் படி, கி.பி. 1246-1279 வரை சோழ அரசை ஆட்சி செய்து வந்தது மூன்றாம் ராஜேந்திர சோழன்!!! அப்போதுதான் பாண்டிய மன்னன் ” சடையவர்மன் சுந்தர பாண்டியன்” பெரும்படையுடன் போருக்கு வந்தான்!!! அவனது வீரத்திற்கு பயந்து, பணிந்து பாண்டியருக்கு கப்பம் காட்டும் சிற்றரசன் ஆனான் மூன்றாம் ராஜேந்திர சோழன் என்பது வரலாற்று உண்மை (உபயம் விக்கிப்பீடியா)!!!.

இதை அப்படியே சம்பந்தப்படுத்தி தன் கற்பனை கொண்டு இதன் கதையை அமைத்திருந்தார் செல்வா!!! ஆம், முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டுலுடன் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் முதற்க்காட்சியில் சோழ அரசு பாண்டியர்களால் வீழ்த்தப்படுகிறது!!! கதை நடக்கும் ஆண்டு கி பி 1279.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் ஒரு பிரபலமான வசனம் “ஒரு பொய் சொன்னா!!, அதுல உண்மையும் கலந்திருக்கணும்!!!! அப்போதான் அது பொய்னு தெரியாது!!!” அந்த வசனம் இந்தப்படதோடு நுறு சதவீதம் பொருந்தி போகிறது!!!      

படம் ஆரம்பிக்கும் போது வரும் ” இவை அனைத்தும் கற்பனையே” என்பதன் அர்த்தம் புரிந்து  நம் சரித்திர அறிவிற்கு விடுப்பு கொடுத்து படத்தை கவனித்திருந்தால் நம்மால் இப்படத்தோடே ஒன்றியிருக்க முடியும் என்பது என் கருத்து!!!

அடுத்ததாக செல்வா சோழர்களை   பச்சை மாமிசம் தின்பவர்களாகவும், சோற்றுக்கு வழியில்லாமல் திரியும் பணாதிகளாவும், நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டியாகவும் காட்சிப்படுத்தியிருந்ததாக பலராலும் விமர்சிக்கப்பட்டார்!!!!

அவர்களையெல்லாம் நான் மறுபடியும் படத்தை முதலிலிருந்து பார்க்கச்சொல்வேன்!!! ஏனென்றால் இந்த படத்தின் கதையை கொஞ்சம் கூர்ந்து  நோக்குங்கள், இது ஒரு பாதிக்குமேல் நின்று போன வாழக்கையை வாழும் ஒரு கூட்டத்திற்கும் நவீனத்துவமான வாழக்கையை வாழும் கூட்டத்திற்கும் உண்டான் மோதலே ஆகும்!!! நான் ஏன் நின்று போன வாழ்க்கை என்கிறேனென்றால், அவர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக எந்த வித வெளியுலக  தொடர்பகளும் இல்லாமல் ஒரு குகைக்குள்ளேயே இருக்கின்றது!!! (அதேபோல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் செல்வா அவர்களை எங்கேயும் முட்டாளாக காண்பிக்கவில்லை!!!! தங்கள் இருப்பிடத்தை தேடி வருவோரை தடுக்க இவர்கள் வைத்திருக்கும் அந்த ஏழு தடங்கல்களே போதும்  போதும் இவர்களின் புத்திசாலித்தனம் சொல்ல!!!!)

இன்னமும் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் எலிக்கறி உண்டு வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!!! பசி, ஏமாற்றம், வலி என்ன என்பதை டெல்லியில் கேட்க நாதியில்லாமல் போராடும் நம் விவசாய சொந்தங்களை கேட்டல் தான் தெரியும்!!! என்னை பொருத்தவரையில் வலி என்பது புரிந்து கொள்ளகூடிய விஷயம் அல்ல!!! அது உணரக்குடியது!!!! அது உணர்ந்தோருக்கு புரியும்!!!

நாம் எவ்வளவோ படத்தில் எவ்வளவோ காட்சியில் என்னென்னவோ வசனங்களில் மூலம் பசியின் கொடுமை கையாண்டிருப்பதை பார்த்திருப்போம்!!!! ஆனால் இந்த படத்தில் ஒரு வரி வசனம் இல்லாது அதன் வலியை அருமையாக சொல்லியிருப்பார் செல்வா!!!, ஒரு தாயின் மார்பிலிருந்து சுரக்கும் ரத்தத்தில்!!!

சோழர்கள் பேசும் தமிழ், படம் பார்த்துட்டு வெளிலவந்த அனைவரும் சொன்னது, “அவுங்க பேசுனது சுத்தமா புரில”!!!

என்னைப் பொறுத்தவரையில், இது முழுக்க முழுக்க செல்வாவின் தவறே என்று சொல்வேன்!!! நாம் இதுநாள்வரை எதற்கு பழக்கப்பட்டு வந்திருக்கிறோம் என்று சற்று யோசித்துப்பாருங்கள்!!!!, “இந்தப்படத்தில் காட்சிகள் அல்லது படத்தின் களம் பம்பாயில் நடைபெறுவதால் உங்களின் புரிதலுக்கேட்ப தமிழில் பேசுவதாக காண்பிக்கப்படுகிறது”‘

இதற்குத்தானே நாம் பழக்கப்பட்டது!!! செல்வாவும் இதே மாதிரி ஒரு ஸ்லைடு போட்டிருந்தா நாமளும் படிச்சு தெரிஞ்சிருப்போம்!!! ஆனா என்ன பண்ண!! அவரு இதுவும் தமிழ் தானே இதுக்கு எதுக்கு SUBTITLE-னு விட்ருப்பாரு போல!!!!!!!!!

12-ஆம் நூற்றாண்டில் பேசப்பட்ட தமிழ்தான் நமக்கு தெரியுமா??? செல்வா இதைத்தெரிந்துகொள்ள மேற்கொண்ட உழைப்பு நமக்குத்தெரியுமா??? 12-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் தான் நம்மிடம் உள்ளதா?? இவை அனைத்திற்கும் ஒரே பதில் இல்லை …இல்லை..இல்லை என்பதே!!!!

நம்மிடம் எஞ்சியுள்ள ஒரு சில ஓலைச் சுவடிகளை கொண்டும் வரலாற்று அறிஞர்களின் உதவியாலும் இப்படித்தான் பேசியிருப்பார்கள் என முடிவு செய்து பயன்படுத்திருந்த செல்வா செய்தது தவறுதான்!!!! ஆனால் நாம் இதை பற்றி ஒன்றுமே தெரியாது “புரியல” என்ற ஒற்றை வார்த்தையில் படத்தை தோற்கடித்துவிட்டோம்!!!

அடுத்ததாக சோழர்கள்  தஞ்சை செல்லுமுன் நிகழும் அந்த கிழவரின் நரபலி!!! இது அந்நாளில் என்னவோ நடக்காத மாதிரி செல்வா சோழர்களை அரக்கர்களாக காட்டிவிட்டார் என வெகுண்டெழுந்தனர் சிலர்!!! அவர்களுக்கெல்லாம் எனது பதில், பிரிட்டிஷ்காரர்கள் வந்து சட்டம் இயற்றாதவரை நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.. (இவ்வளவு ஏன் இப்போது கூட அடிக்கடி நரபலி பற்றிய செய்திகள் வருவதில்லையா???) ராஜா ராம் மோகன் ராவ் போராடி சட்டம் கொண்டுவராதவரை உடன்கட்டை பழக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது!!!  

இது எங்கே இருந்து தொடங்கியது, சோழர்களிடமும் இப்பழக்கங்கள் இருந்தனவா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை!!! நடைமுறையில் இருந்த விஷயத்தை செல்வா தன் கற்பனை கொண்டு இந்தப்படத்தில் இணைத்திருந்தார்!!!! அவ்வளவே!!!!!!!

அடுத்தது, கார்த்தி கல் கொண்டு எரியும் ஒருமனிதனுடன் அரங்கத்தில் சண்டையிடும் காட்சி!!! ஒருசேர அனைவரும் இது கிளாடியேட்டர் படத்தோட தழுவல் என பேசிக்கொண்டனர்!!!!

ஹாலிவுட்டில் இம்மாதிரியான படங்கள் வெளிவந்து கொண்டேதானிருக்கும்!! சமீபத்தில் கூட இம்மாதிரி சண்டை காட்சிகள் கொண்ட “BENHUR” படம் வெளிவந்தது!!! நம்மில் பலருக்கும், ஹாலிவுட்டில் தான் முதலில் இம்மாதிரியான சண்டை காட்சிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதாலும், அடிக்கடி இதே மாதிரியான படங்கள் அங்கே வெளிவந்து கொண்டே இருப்பதாலும் இதை தழுவல் என்று முடிவுசெய்கிறோம்!!!

சற்றே யோசித்து பாருங்கள் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எவ்வளவோ சினிமாவில் பார்த்திருப்போம்!!! எம்.ஜி.ஆர் முதற்கொண்டு ரஜினி, கமல் வரை அனைவரும் ஏதாவது ஒரு படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியில் நடித்திருப்பார்கள்!!! அதுவும் ஒரு திறந்தவெளி அரங்கில் நடைபெறும் சாகச விளையாட்டு தான்!!!! அப்போதெல்லாம் நாம் இது இந்தப்படத்தின் தழுவல் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையே!!!! இப்போது மட்டும் ஏன்???

ஏனெனில் நமக்கெல்லாம் ஜல்லிக்கட்டு யாட்டு பற்றியும் அதன் விளையாட்டு முறை பற்றியும் ஆரம்பம் முதலே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தது!!!!! அது நம்முடைய விளையாட்டு என்ற கர்வம் இருந்தது!!! இதனால் மற்ற விளையாட்டை நாம் அந்நியமாக பார்க்க  ஆரம்பித்ததோம்!!! அதுவே வேறெந்த விளையாட்டை பார்க்கும் போதெல்லாம்  இது எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று எண்ணவைத்து அதன் மூலத்தை ஆராயவைத்தது!!! ஒருவன் முதலில் அதை செய்கிறானென்றால் அது அவனுடையதாகாது!!! இல்லை அவன் இதை ஏற்கனவே செய்துவிட்டான் நாம் செய்யக்கூடாது என்று நினைத்திருந்தால் நாம் இவ்வளவு நாகரீக  வளர்ச்சி அடைந்திருக்ககவும் முடியாது!!! வளர்ச்சி என்பது எப்போதோ நின்றுபோயிருக்கும்!!!!! (நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் கபடி விளையாட்டின் முன்னோர்கள் நாமென்று!!!!)

அப்டினா ஆயிரத்தில் ஒருவனில் கூட ஜல்லிக்கட்டை வைத்திருக்கலாமே!! நீங்க புதுசா யோசிக்கிறேன் இந்த சண்டையை வெச்சதுனால தான நாங்க காப்பிங்கிறோம் அப்டினு நெறைய பேருக்கு தோணலாம்!!! சோத்துக்கே வழியில்லாம இருக்கிறவங்க கிட்ட மாடு எங்க?? காளை எங்கே?? னு எப்படி கேட்க முடியும்!!!!!

பலர் என்னிடம் கேட்ட கேள்வி, தஞ்சையில் வாழ்ந்த சோழர்கள் எப்படி வியட்நாம் வரை போனாங்கனு  தான்!!!! அவங்களுக்கெல்லாம் வரலாறு ஒன்றை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்!!! இந்திய அரசர்களுள் கப்பற்படை வைத்திருந்தவர்களில் முதன்மையானவர்கள் சோழர்கள் மட்டுமே!!! நேரம் கிடைத்தால் ராஜா ராஜ சோழன் வரலாற்றை விக்கிப்பீடியாவில் படித்துப்பாருங்கள் அவர்களது கப்பற்படையின் வீரம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வீர்கள்!!!

இவ்வளவு ஏன் அந்த காலத்திலேயே சீனாவுடன் கடல்வழி வணீகத்தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் பல கொட்டிக்கிடக்கின்றன!!! சீனாவிலும் மற்ற  நாடுகளிலும்  நம் இந்திய அரசர்களின் மாளிகை மற்றும் ஹிந்து கோவில்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியவில்லையா??? இல்லை இவை அனைத்தையும் நாம் தான் மறந்துவிட்டோமா விமர்சனம் எனும் போதையில்!!!!  

அடுத்தது, ஓவியத்தில் உள்ளது போல புலிமுத்திரை, மழை, எழ்ச்சி என அனைத்தும் ஒரு சேர நடைபெறும் நேரத்தில்தான் தூதுவன் யாரென அறியமுடியும். ஆனால் பார்த்திபன் ரீமா சென் தன் உடலில்  புலிமுத்திரையை வரவழைத்தவுடன் நம்புவது ஏன் என பலரும் கேட்கின்றனர்!!!

பல நூற்றாண்டுகளாக தூதுவன் வருவான் தஞ்சை செல்லலாம் என்ற  நம்பிக்கையில் குகைக்குள்ளே வாழ்ந்துமடியும் மக்களுக்கு ரீமா சென் மூலம் சிறு நம்பிக்கை நிகழ்கிறது!!! பசியோடு இருப்பவன் விருந்தை எதிர்பார்க்கமாட்டான்!!! அதே போல தான் இங்கும் பார்த்திபன் அவளை நம்புகிறார்!!! வரைந்து வைக்கப்பட்ட ஓவியங்கள் தவறோ என்ற முடிவு செய்கிறார்!!! அதுமட்டுமில்லாமல் ஊர் திரும்பிவிடலாம் என்ற ஆசையும் அவரது கண்ணை மறைக்கிறது!!! இவை அனைத்தும் தவறு என்ற ஒரு சேர தான் ரீமாவால் (பாண்டிய வாரிசுகளால்) ஏமாற்றப்பட்டோம் என்ற தெரிந்து வெதும்பும்போதுதான் உண்மை தூதுவன் கார்த்தி என்று அறிந்து கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது!!!!!

அடுத்ததாக அனைவராலும் அருவருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட படத்தின் இரண்டாம்பகுதியில் வரும் காட்சிகளைப் பற்றியும் எனது கருத்து !!!

சோழர்கள் போரில் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் கொடுமைகளையும் அவலங்களையும் இவ்வளவு மோசமாக (தத்ரூபமாக) சித்தரித்திருக்க கூடாது என்பது பலரது கருத்தாக இருந்தாலும் உண்மை இதை விட மோசமாக இருப்பதாக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது !!!

இங்கே நாம் கவனிக்கப்பட வேண்டியது, புலிக்கொடி ஏந்திய சோழர்கள் துரோகத்தால் போரில் தோற்கடிக்கப்படுகின்றனர்!!! அவர்களின் அரசன், அவனது மனைவி, மகள், மக்கள், தங்களை காப்பாற்றுவான் என்று நம்பியிருந்த தூதுவன்  என அனைவரும் சிறை பிடிக்கப்படுகின்றனர்!!

அங்கே ராஜாவின்  மகள் ராணுவத்தால் நிர்வாணமாக்கப்பட்டு நடனமாட வைக்கப்படுகிறாள்!!!! அவனது மனைவி கற்பழிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறாள்!!!! அவனோ அவர்களால் அடித்தே சாவின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறான்!!!

ஊர் செல்ல கப்பல் வருவதாக தோன்றும் அவன் கற்பனையினுடே, நம்பவைக்கப்பட்டு ஏமாந்தோமே என்ற வலியில் அவன் உயிர் பிரிகிறது!!! அவனது உயிரற்ற உடலை ஏந்திக்கொண்டு எஞ்சியிருக்கும் அவனது மக்கள் “போய்வாருங்கள் ஏந்தளே!!!” என்ற கூப்பாடுடன் கடலில் சமாதி அடைகிறார்கள்!!! இவை நடப்பதாக கட்டப்படும் இடம் ஆற்றின் அருகே உள்ள தீவு!!!

இவை அனைத்தும் நமக்கு வேறொரு நினைவை ஞாபகப்படுத்தவில்லையா??? ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த ஒரு இன அழிப்பை சொல்கிறதோ என்ற யோசனை எழவில்லையா???

இவற்றை அருவருப்பாய் பார்த்தால் அருவருப்புதான்!!!! ஆனால் நம் கண் முன்னே நடந்த நம் இன அழிப்பை சற்று நினைத்துப்பாருங்கள்!!! அருவறுப்பை மறந்து ஒரு வித வலியை உணர்வீர்கள்!!!

செல்வா எதிர்பார்த்தது அதுதான்!!!!

மீண்டும் சந்திக்கிறேன் இதன் இறுதி அத்தியாயத்தில்!!!!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

9 Comments on “ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *