ஆயிரத்தில் ஒருவன்” எழுதி முடிச்சுட்டு அடுத்தது எதுனா ஒரு “ENGLIGH” படத்தை பத்தி எழுதலாம்னு முடிவுபண்ணிருந்தேன்!!!

ஆனா “ஆயிரத்தில் ஒருவன்” படிச்சவங்க எங்கிட்ட சொன்ன விஷயம், இந்தப்படத்துல இவ்ளோ மறஞ்சிருக்கா??னு தான்!!! அந்த ஒரு நம்பிக்கை தான் நான் மறுபடியும் எதுனா இதே மாதிரி ஒரு படத்தை எடுத்து கொஞ்சம் தேடி புதுசா எழுதணும்னு தோணவெச்சது!!

சரி, எழுதலாம்னு ஈஸியா முடிவு பண்ணுன எனக்கு என்ன படம் எழுதணும்னு தெர்ல!!! இப்படியே வெட்டியா கொஞ்ச நாள் போய்டுச்சு!!! ஒருநாள் எதேச்சையா நண்பர் ஒருவர் ஷேர் பண்ணுன வீடியோவ FB-ல பார்த்தேன். அது,

ஒரு படத்தோட கிளைமாக்ஸ் காட்சி, அதில் வில்லனும் காவல் அதிகாரிகளும் இடையேயான வசனங்கள் இவ்வாறாக வரும்,

நந்து, உன் கைல இருக்கிற ஆயுதத்தை கீழ போடு!! இல்லைனா உன்ன சுட வேண்டி வரும்!!!

அதற்கு வரும் செம்ம நக்கலான பதில், ” நீ யார்ரா??, நான் வாழ்றதையும்   சாகுறதையும் முடிவு பண்ண!!!னு.

என் எழுத்தில வேணா இந்த காட்சி சுமாராக இருக்கலாம், ஆனா படத்துல அப்டி இல் !!!

அப்பவே இந்த காட்சி புடிச்சு போய், நாம தேடிட்டு இருந்த படம் இதுதான் முடிவு பண்ணுனேன்!!!! அது,

ஆளவந்தான்!!!!!

நெறைய பேருக்கு தோணிருக்கலாம், என்னடா இவன்!! எழுதறுதேல்லாம் பழைய படம் ஆனா அதுக்கு மூணு மாசம் எடுத்துக்கரான்னு!!!  அது வேற ஒண்ணுமில்லைங்க, வெறும் கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்னு எப்போதும் போல பேசாமல் அதைத்தாண்டி பல விஷயம் எழுதலாம்னு நினைக்கிறேன்!!! அப்டி தேடும்போது நெறைய டைம் ஆகுது!! அப்பறோம் இப்ப மாதிரி டிவி டிவியா போய் படத்தை பத்தி பேட்டி கொடுக்கிறதெல்லாம் இல்லை!!!!அதுனால கொஞ்சம் நெறைய தேட வேண்டியதா இருக்குது!!!!

அதே போல் பேசுறப்ப நல்லா  வர்ற தமிழ் எழுதறப்ப மட்டும் வர்றதில்ல!!!!

சரி வாங்க இந்த படத்தோட கதையிலிருந்து ஆரம்பிப்போம், .

1983-இல் மணியன் அவர்கள் நடத்தி வந்த “இதயம் பேசுகிறது”ங்கிற ஒரு வார இதழுக்காக “தாயம்”னு ஒரு தொடர்கதை எழுதி வந்தார் கமல்!!! சுமார் 37 வாரங்கள் வெளிவந்த அந்த தொடருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு மக்களிடையியே இருந்தது!!!! அந்தக்கதையின் அடிநாடியை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவுக்காக சில பல மாற்றங்கள் செய்து உருவாக்கிய படம் தான் “ஆளவந்தான் “!!

இணையத்தில் இந்த நாவல் படிக்க கிடைக்காதா?? என்று தேடிப்பார்த்தத்தின் பதில் பூஜ்யம்!!! அதன் பின் எனக்கு கிடைத்த ஒரு சில தகவல்கள் மூலமாகவும், நண்பர் ஒருவரின் வலைப்பூ மூலமாகவும் நான் தெரிந்துகொண்ட நாவலின் கதையை இங்கே பகிர்கிறேன் !!!! (தவறிருந்தால் மன்னிக்கவும்)!!!!

முதலில் தாயம்,

இந்த நாவலின் மொத்த கதையும் Dr.பிரபு தத்தா என்பவரின் பார்வையில் தான் சொல்லப்பட்டிருக்கும்!!!!

இதன் களம் நடைபெறும் இடம் ஊட்டி!!! ஆளவந்தானில் வருவதுபோல் சித்திகொடுமை தான் இதன் ஆரம்பப்புள்ளி!! மன நலக்காப்பகம், நந்துவின் மனைவியை தனது சித்தியாக உருவாக்கப்படுத்திக் கொள்வது, நந்து மற்றும் விஜய்க்குள்ளான ஆடு புலி ஆட்டம் என பல பரிமாணங்களில் நாவல் விரிவடைகிறது!!!!

நாவலில் விஜய் கோவையில் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி!! கதையின் நாயகியான தேஜஸ்வினி ஒரு இளம் விதவை!!! நந்துக்கும் விஜய்க்கும் உண்டான உருவ ஒற்றுமை வெறும் மீசையுடனே முடிந்துவிடுகிறது!!! ஆம், சினிமாவில் காண்பிப்பது போலில்லாமல் நந்துவும் தலையில் முடியுடன் உலாவருகிறான்!!! நாவல் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது தான் மொட்டையடித்து பச்சைகுத்திக்கொள்கிறான்!!!அதே போல், இந்த நாவலின் இறுதி அத்யாயம் சினிமாவை போல் பிரம்மாண்டமாக இல்லாமல் ரொம்பவும் எதார்த்தமாகவே முடிகிறது!!!

ஆளவந்தானை போல் தாயத்திலும் நந்து இறந்துபோகிறான்!! ஆனால் இங்கு ஹீரோவாகவும்!!!! சினிமாவில் வில்லனாகவும்!!!!

இனி, அனைவருக்கும் தெரிந்த ஆளவந்தானின் கதை:

நந்துவும் விஜயும் இரட்டையர்கள். அவர்களது அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவர்களது அம்மா தற்கொலை செய்து கொள்கிறார்!!! அதன் பின் அவளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்!! ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் சித்தியை பிடிப்பதில்லை, அதே போல் தான் அவளுக்கும்!!!  நாளுக்கு நாள் அவளது கொடுமை அதிகமாகிறது!!!! இந்த சந்தர்ப்பத்தில் இவர்களது மாமா யாரோ ஒருவனை மட்டும் தன்னுடன் அழைத்து செல்வதாக  சொல்கிறார்!! அதிர்ஷ்டம் விஜயின் பக்கம் இருக்க அவன் மாமாவுடன் செல்கிறான்!!!

ஏற்கனவே சித்தியின் கொடுமை இப்போது தனிமை என மொத்தமும் நந்துவின் மன ஓட்டத்தை உளவியலாக பாதிக்கிறது!! இறந்து போன தாய் தன்னுடன் இருப்பதாக அவனே நினைத்துக்கொண்டு உலவுகிறான்!!! ஒருநாள் இரவில் தன் தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறக்க, அதற்கு சித்திதான் காரணம் என அறிந்து கோபம் கொள்கிறான்!!!

கோபத்தின் உச்சியில் தன் தாய் சொல்வதாக நினைத்துக்கொண்டு சித்தியை கொலை செய்கிறான்!! அதற்காக மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறான்!!!அதன்பின், ஏறக்குறைய 20-25 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் அவனது காதலி தேஜஸ்வினியும் அவர்களுது திருமணத்திற்கு நந்துவை அழைக்க காப்பகத்திற்கு செல்கிறார்கள்!! அங்கே நந்து முற்றிலுமாக மன நிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான்!!! அவனோ தேஜஸ்வினியை தன் சித்தியின் மறு உருவமாக காண்கிறான்!!! அவளிடம் இருந்து தன் தம்பியை காப்பாற்றுவது தான் தன் வாழ்வின் லட்சியம் என கொண்டு அவளை கொல்ல எத்தனிக்கிறான்!!!  அதன் பின் நந்துவுக்கும் விஜயுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டமே மீதி கதை!!

இந்த படத்தின் கதையை இங்கே முடித்துக்கொண்டு, இதன் திரைக்கதையில் ஒளிந்துகொண்டிருக்கும் சுவாரஸ்யங்களையும் இப்படத்தில் நாம் கவனிக்க மறந்த விடயங்களையும் விளக்கிக்கூறும் பதிவாகவே இதனை எழுத ஆசைப்படுகிறேன்!!!

ஆனால், அதற்கு முன் இப்படம் உருவாக காரணமாயிருந்த கதையை பார்த்துவிடுவோம்!!!!!

1983-லேயே இதன் கதையை உருவாக்கிய கமல், சினிமாவாக எடுக்க முதலில் அணுகியது தன் குருநாதர் பாலச்சந்தரைத்தான்!!! இது ஒரு ஆக்ஷ்ன் படம் என்பதாலும், முக்கியமாக அப்போதைய காலகட்டத்திற்கு ஒவ்வாத   கதையம்சம் கொண்டதாலும் இது K.B-அவர்களால் நிறுத்திவைக்கப்பட்டது!!!!  அதன் பின் காலங்கள் பல உருண்டோடின!! கமலும் நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்

“இந்தியன்” படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு கமல் தாணுவின் தயாரிப்பில் நடிக்க ஆசைப்பட்டார்!! அப்போதே அவருக்காக 1947-இல் சுதந்திரத்திற்கு முந்தைய நாள் நடப்பதாக கூடிய ஒரு வரலாற்றுக் கதை கூட கலைப்புலி தாணுவின் நண்பர் ஜி.சேகரால் சொல்லப்பட்டது!!!! ஆனால் கமல் ஏற்கனவே மருதநாயகம் படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டதால், இந்த கதையை நிராகரித்து விட்டார்!!!

அதன் பின்பு இவர்களது பட வேலை கிடப்பில் போடப்பட்டது!! நடுவில் கமலும் “அவ்வை ஷண்முகி” , “ஹேராம்”, “தெனாலி”, “காதலா காதலா” என பலவகையிலும் ஹிட்டடித்துக்கொண்டிருந்தார்!!! ஆனால் தாணு அப்போது தயாரித்த “மன்னவரு சின்னவரு”, “முகம்” இரண்டும் தோல்வியை தழுவின. “கண்டுகொண்டேன்  கண்டுகொண்டேன்” படம் மட்டும் கொஞ்சம் காப்பாற்றியது!!! ஆனால் படத்தின் இயக்குனர் ராஜிவ் மேனன் செய்த பிரச்சனையால் முழுமையான லாபத்தை பெறமுடியாமல் போனது!!!

அதன்பின் ஒருவழியாக எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்த தாணு, 2000-ஆம் ஆண்டு கமல் தன் தயாரிப்பில் நடிப்பதாக அறிவித்தார்!!! கதைகள் பல விவாதிக்கப்பட்டன!!!

கமலே தன்னிடம் ஒரு சில கதைகள் இருப்பதாக சொல்லி, முதலில் சொன்ன கதை தான் “நள தமயந்தி” (பின்னாளில் மாதவன் நடிப்பில் வெளிவந்தது),. தாணுவோ முதன் முதலில் கமலுடன் தான் இணையும் படம் இப்படி ஒரு சிம்பிளான பட்ஜெட் படமாக இருக்கக்கூடாதென்று இதை மறுத்துவிட்டார்!!! அதன் பின் கமல் சொன்ன, ஒரு சண்டை கலைஞருக்கும் டாக்டருக்கும் உண்டான காதலை சொல்லும் நகைச்சுவை கதை தாணுவுக்கு பிடித்து போக அதையே தயாரிக்க எண்ணினார்!!(பம்மல் K. சம்பந்தம்)!!!

தாணுவின் ஆபிஸில் இப்படத்தின் பூஜை சிம்பிளாக நடைபெற்றது!!! படத்திற்கான ஸ்டில்ஸ் எடுக்க துபாயிலிருந்து போட்டோக்ராபர் வரவழைக்கப்பட்டு, இதன் வேலைகள் நடந்தன!! படத்தின் இயக்குனராக சுரேஷ் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்ப்பட்டார்!!!

இவ்வாறிருக்கையில் தான், கமலும் சுரேஷ் கிருஷ்ணாவும் திரைக்கதை தொடர்பான விவாதத்தில் இருக்கும்போது “தாயம்” தொடர்கதை” பற்றி பேச்சு எழுந்தது!!! பம்மல் K. சம்பந்தத்தின் கதையை விட இந்த கதை சுரேஷ் கிருஷ்ணாவிற்கு பிடித்துப்போக, இதை தாணுவிடம் பகிர்கிறார்!! தாணுவிற்கு படத்தின் கதை புரிபடவில்லை என்றாலும் கமலின் ஆசைக்காக ஒத்துக்கொண்டார்!!கதை, திரைக்கதை, வசனம் என மூன்றும் கமல் ஏற்றுக்கொள்ள இயக்குனர் பொறுப்பு சுரேஷ் கிருஷ்ணாவிற்கு கொடுக்கப்படுகிறது!!! மொத்தம் ஏழு கோடி பட்ஜெட் மற்றும் கூடுதலாக ரெண்டு கோடி அதன் பின் கமலின் சம்பளம் எக்ஸ்ட்ரா என பேசி முடிவு செய்யப்பட்டு, நேரு விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!!!!

முதலில் சிம்ரனும், ராணி முகர்ஜியும் நடிப்பதாகத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது!!! ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தொடங்க கால தாமதம் ஆனதால் அவர்கள் விலகிக்கொள்ள மனிஷா கொய்ராலாவும் ரவீனா டாண்டனும் ஒப்பந்தமானார்கள்!!!

தாயம் – ஆளவந்தான்:

ஒரு நாவலை திரைப்படமாக்குவது என்பது மிக மிக கடினமான ஒன்று!!! ஒரு நாவலாசரியரின் கற்பனைக்கு முட்டுக்கட்டை என்பது ஏதுமில்லை, ஏனெனில்,  ஒரே வரியில்  உலகை  சுற்றிவருவதாக எழுதமுடியும், அத்தியாயத்திற்கு அத்யாயம் ஊர் ஊராக சென்று வர முடியும்!!! ஆனால் அதே காட்சியை  திரையில் யோசித்து பாருங்கள்!!! அவ்வளவு எளிதல்ல என்பது புரியும்!!!! அந்த சவாலான திரைக்கதை அமைக்கும் பணியை கமல் எப்படி திறம்பட செய்திருந்தார் என்பதை எனக்கு தெரிந்தவரை எழுதியிருக்கிறேன் !!!!!

நாவலில் விஜய்க்கும் தேஜஸ்வினிக்குமுண்டான காதல், நெருக்கம் மற்றும் நந்து – தேஜஸ்வினிகுண்டான காட்சிகள் என பலதும் திரைக்கதையில் கொண்டுவர அவர்களது கதாபாத்திர தன்மை மாற்றிஅமைக்கப்பட்டன!!!!

முதலில் அனைவருக்கும் தோன்றும் கேள்வி, தேஜஸ்வினியை ஊடகவியாளராக காட்சிப்படுத்தவேண்டிய நோக்கம் என்ன? என்றுதான் .

திரைக்கதையில் நந்து இருக்கும் இடத்தில் தேஜஸ்வினியும், தேஜஸ்வினி இருக்கும் இடங்களுக்கெல்லாம் நந்துவும் இருப்பதாக பல காட்சிகள் உருவாக்கப்பட்டது!!!! ஏனெனில் நந்து தேஜஸ்வினியை பார்க்கும்போதெல்லாம் வெறிகொண்டவனாக மாறுகிறான்!! அது கதையோட்டத்தை சுவாரஸ்யப்படுத்தவும், கதைப்  போக்கை தீர்மானிக்கவும் கட்டாயமானது!!!!தேஜஸ்வினியை ஊடகவியாளராக காட்சிப்படுத்துவதால் நந்து இருக்கும் எல்லா இடத்திற்கும் அவள் போக தேவையில்லை!!!! நந்துவுக்கும் அவள் மீதான வெறுப்பை ஞாபகப்படுத்திக்கொள்ள  தொலைக்காட்சி தொடர்பான காட்சிகளே போதுமானதாக இருந்தது!!!!

அடுத்தது எதற்காக விஜயை ஒரு ராணுவ அதிகாரியாக உருவகப்படுத்த வேண்டும்?? காவல் அதிகாரியாகவே காட்சிப்படுத்திருக்கலாமே என பலரும் யோசிக்கலாம்!!! அதற்கான பதில் கொஞ்சம் விரிவாக !!!!!

நம் அனைவருக்கும் தெரிந்த “தேவர் மகன்” படத்தையே எடுத்துக்கொள்வோம்!!!

தேவர் மகன்” திரைப்படம் ஒரு சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் குடும்ப வன்முறைறையைப் பற்றி பேசியிருக்கும் படம்!!! இதில் தேவர் சமூகத்தை பிரதானமாக காட்சிப்படுத்திருப்பார் கமல்  !!!!

நீங்க எப்போதாவது யோசிச்சுப்பார்த்திருக்கீங்களா, கமல் ஏன் இந்த கதைக்கு தேவர் இன சமூக அமைப்பை தேர்ந்தெடுத்தார் என்று??தேவர் மகனின் திரைக்கதையை நீங்க எந்த சமூகத்தில் வேண்டுமானாலும் பொருத்திப்பாருங்க, அதன் திரைக்கதை நேர்த்தி உங்களை கண்டிப்பாக ரசிக்க வைத்திருக்கும்!!!  அப்படியிருந்தும் அவர் ஏன் அங்க போனார்??

ஏன்னா??, கமல் தான் இயக்கும் படத்தின் கதை மற்றும் அதில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசியத்தையும் கொண்டுதான் ஒவ்வொரு படத்தின் களத்தையும் முடிவு செய்தார்!!! இந்தக்கதைக்காக இவர் தேர்வு செய்தது தேவர் சமூகம்!!! ஏன் தேவர் என்பதற்கு, இம்மானுவேல் சேகரின் கொலை அதன் பின் அங்கு நடந்த கலவரங்கள் பற்றி விக்கிப்பீடியாவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

அதேபோல், இதுவரை வன்முறை வேண்டாம் என சொல்லி எத்தனை படம் வந்திருக்கும்!!! நமக்கு எல்லாமும் ஞாபகம் இருக்கிறதா??? இல்லையே!!!

பின்ன, தேவர் மகன் மட்டும் எப்படி???

யோசிங்க….

பலர் சொல்லலாம் இதன் கதை, நடிப்பு, இசை, டைரெக்ஷன்னு…ஆனா , என்னைப் பொறுத்தவரையில் அந்த படத்தை நம்மிடம் கொண்டு சேர்த்தது, அதன் நம்பகத்தன்மை, அதற்கு  காரணம்  அதன் களம்!!!

சரி இது எங்க ஆளவந்தான்ல வந்துச்சுன்னுதானே யோசிக்கிறீங்க, இந்தப்படம் ஹிந்தி மற்றும் தமிழ்ல ஒரு சேர எடுத்தாங்கனு பலருக்கும் தெரிஞ்சிருக்கும்!!! ஒருவேளை விஜயகுமார் போலீசா இருந்திருந்தா யூனிபோர்ம், போலீஸ் ஸ்டேஷன் அப்பறோம்  போலீஸ் சம்பந்தப்பட்ட இடம்னு  தனித்தனியா எடுத்திருக்க வேண்டி வரும்!!! ஆனா ராணுவ அதிகாரினு சொல்றதால எல்லாருக்கும் பொதவானதா மாறிடுது!!!!

அதே போல் விஜயை ஒரு போலீஸ் அதிகாரியாக காமிச்சிருந்தா, அவனது அதிகாரம் ஒரு வரவரைக்குள் நின்றுவிடுகிறது!!! ஆனால் இதுவே ராணுவ அதிகாரி என்பதால் அவனுக்கு ஒரு எல்லை இல்லா அதிகாரம் கிடைக்கிறது!!!!

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் கமல் தன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார்!!!!!

அடுத்ததாக நந்து மற்றும் அவன் தொடர்பான நிகழ்வுகள்:

குடியிருந்த கோவிலில்” தொடங்கி “அபூர்வ சகோதரர்கள்”, “மூன்று முகம்” என தொடர்ந்து இப்போது வந்துள்ள “மெர்சல்” வரை இரட்டை வேடப் படங்களுக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உண்டு!!!! ஆனால் இதில் கமல், ஒன்றில் தொடங்கி தசாவதாரம் வரைக்கும் சென்று விட்டார்!!!

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு இரட்டை வேடப் படத்தில் ஒருவரை ஒருவர் வித்யாசப்படுத்தி காட்ட என்னெல்லாம் செய்திருப்பார்கள் என்று???மீசை, தாடி மற்றும் தலைமுடி என பலவகையில் வித்யாசப்படுத்திருப்பார்களே தவிர உருவ அமைப்பில் ஏதாவது செய்திருப்பார்களா????

அபூர்வ சகோதரர்களில் அதை முயன்று பார்த்து வெற்றியும் அடைந்தார், கமல்!!! ஆனால் , அதுவும் மேற்குறிய வகையில் அடைபட்டு போவதாக கருதிய அவர் அடுத்ததாக எடுத்த அவதாரம் தான் நந்து!!!ஆம், அது நந்துவும்-விஜயும் கமலாக தெரியாமல் தனித்தனி ஆளாக தெரிய வேண்டும் என நினைத்தது!!! இங்கே தான் கமல் “மோஷன் கேப்ச்சர்” என்ற புதிய ஒளிப்பதிவை அறிமுகம் செய்தார்!!! அது ஏன், எங்கே என பார்ப்பதற்கு முன் நந்துவின் கதாபாத்திரத்தை விளக்கி கூற ஆசைப்படுகிறேன்!!!! ஏன் எனில் பலருக்கும் இந்த படம் புடிக்காமல் போக கரணம் நந்து தொடர்பான பல காட்சிகள் புரிவதில்லை என்பதே!!!! உதாரணமாக அந்த போதை மருந்து எடுத்துக்கொள்ளும் காட்சி!!!!

முதலில் அனைவருக்கும் தோன்றும் சந்தேகம், ஏறக்குறைய 20-வருடங்கள் மன நல காப்பகத்தில் வளர்ந்த ஒருவனால் எப்படி கவிதையாக யோசிக்க முடிகிறது என்பது தான்!! இதற்கான பதிலை முதல் பாதியில் டாக்டரின் பேட்டியின் போதும் இரண்டாம் பாதியில் நந்து எழுதுவதாக காண்பிக்கப்படும் டைரியில் அவன் உபயோகிக்கும் வரிகளிலுமே தெரிந்து கொள்ளலாம், அவன் மொழி ஆளுமையை பற்றி!!!

அடுத்ததாக ஷாப்பிங் மாலில் ஏற்படும் கமலின் மனப்பிழற்சி தொடர்பான காட்சிகளும் மற்றும் மனிஷாவுடனான காட்சிகளும் சொல்லவந்தது என்ன என பலருக்கும் புரியவில்லை என்ற கருத்தே இருந்தது!!!இதற்கான அடிப்படைக்  காரணம், நந்து  அறிமுகமாகும் காட்சியில் டாக்டரால் வாய்ஸ் ஓவர் மூலம்  நமக்கு கூறப்படுகிறது!!! அது தான் Paranoid schizophrenia எனப்படும் ஒரு மனோ வியாதி!!!

அதுநாள் வரை தமிழ் சினிமாவில் அதிகம் அறியப்பட்ட வியாதி, Brain Tumor மற்றும் பிளட் கேன்சர் தான்!!! ஆதலால் தான் நாம் கமல் படத்தில் சொன்ன இந்த வியாதியின் குறியூடுகளை  கவனிக்க தவறி நந்துவிடமிருந்து அந்நியப்பட்டுப்போனோம்!!!! ஒருவேளை இப்போது போல் வசதி இருந்திருந்தால் கமல் முன்னமே தன்  ரசிகர்களுக்கு இம்மனப்பிழற்சியை பற்றி  பக்கம்பக்கமா பேசி கதையோட்டத்தை   புரிந்துகொள்ள வைத்திருப்பார்!!!

இந்த வியாதியின் ஆரம்ப புள்ளியாக பலவற் றை சொல்கிறார்கள், மரபு வழியிலிருந்தே வருவது, DRUG, ஆல்கஹால் என பல உண்டு!!!!! ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக கருதப்படுவது ஒருவனது குழந்தைப்பருவ அனுபவங்கள் தான்!!! தனிமை, மன அமைதி இல்லாமை, தேவையற்ற பயம் மற்றும் வெறுப்பு இவை அனைத்தும் இதன் காரணிகளாக பார்க்கப்படுகிறது!!!

இந்த நோயின் அறிகுறிகளாக சொல்லப்படுவது, ஒருவனது சுயமான எண்ணங்களும் செயல்களும் அவனுக்கே பிரமை குரலாகவும் காட்சிகளாகவும் தோன்றுவது!!!

(அதாவது நந்து சிறுவயதில் தன் தாய் தன்னுடன் பேசி வருவதாக காண்பிக்கப்படும் இதன் காட்சிகள் அனைத்தும் இந்நோயின் ஆரம்பப்புள்ளியா நமக்கு காட்டப்படுகிறது!!! உதாரணமாக, நந்து தலை சீவிக்கொள்ளும் காட்சியில், தன் தலை வாரி விடுவதாக நினைத்துக்கொண்டு அவனே வாரிக்கொள்வான்)

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனுடைய சிந்தனை நிலையாக இருக்காது!!! சிலசமயங்கள் இவர்களுக்கு நிஜத்தின் தொடர்பு அறுந்து, இவர் பாக்கும் பல காட்சிகள் மருட்சிகளாகும் (Hallucination)!!!

ஆதலால் அவர்களால் தெளிவாக பேசவும் முடியாது!!! சரியான உடையை தேர்வு செய்ய முடியாது!!! இது அவர்களுடைய நரம்புகளை பாதித்து தேவையற்ற கிளர்ச்சிகள் மற்றும் அசைவுகளை உண்டாக்கும்!!!

இப்போது இதன் காரணிகளை நந்துவின் செயலோடு பொருத்திப்பாருங்கள்!!! அவனது மேனரிசம், அந்த ஷாப்பிங் மாலில் அவன் செய்யும் சேட்டைகள் (ரோட்டில் படகு போவது, கார்ட்டூன்களிடம் பேசுவது, மனிஷா என்று நினைத்துக்கொண்டு மின்கம்பத்திடம் கிளர்ச்சி கொள்வது, பிரித்தாராய முடியாமல் தன் சகோதரன் மனைவியை சித்தி எனநினைத்து கொல்லப்பார்ப்பது!!!! என இவையனைத்தும்  இந்நோயின் வெளிப்பாடுகளே!!!

கமல், நந்துவின் குணாதிசயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இன்னொரு முழு நீள படமெடுத்தார் அது என்ன தெரியுமா???? மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயம் என்ன??? பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியடைய காரணம் என்ன??? இந்தப்படத்தின் பாடல், இசை, பின்னணி இசைக்கோர்ப்பு மற்றும் எனக்கு மிகவும் பிடித்த இந்த படத்தின் வசனங்களோடு விரைவில் சந்திக்கிறேன்!!!

 

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

4 Comments on “ஆளவந்தான் – I’M A HERO AND A VILLAIN TOO!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *