எப்படியாவது இரண்டு பகுதிகளில் முடித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் தான் எழுத ஆரம்பித்தேன்!!! ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் சொல்லவேண்டும் என்று கருதியதாலோ என்னவோ நீண்டு கொண்டே போகிறது!!!!

திரையில் வாழ்ந்தவர்கள்:

ஆனந்தனாக மோகன்லால்!!!! நடிப்பு ராட்சஷன்!!!! படம் பார்த்த அனைவரும் இதை மறுக்காமல் ஒத்துக்கொள்வார்கள்!!! இவ்வளவு ஏன், இருவர் என்றதும் மணிரத்னத்துக்கு பிறகு நம் ஞாபகத்திற்கு வருவது இவரே!!!!! இவரது நடிப்பிலிருக்கும் சுறு சுறுப்பு, கண்களில் தெரியும் காதல், வசன உச்சரிப்பு, நடனம் என அனைத்தையும் மிச்சம்வைக்காமல் செய்யும் “A COMPLETE ACTOR”.

இந்த படத்திற்கு முதலில் தேர்வானவர் இவரே!!!! ஏற்கனவே இவர் மணிரத்னத்தின் முதல் மலையாளப்படமான “உணரு“வில் நாயகனாக நடித்திருந்தார், ஆனால் அதுமட்டுமில்லாமல் கதைப்படி நாயகன் மலையாள பின்புலம் கொண்டதாலும், எந்த ஒரு மிகைநடிப்புமில்லாத எதார்த்தமான நடிகன் வேண்டுமென்பதாலும் இவரை தேர்வு செய்ததாக மணி ஒரு பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்!!!அது எவ்வளவு உண்மை என்பது ஒவ்வொரு frame-லும் தெரிகிறது!!!! படம் முழுவதும் இவரது ஆளுமைதான்!!!!

தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் பாதியில் நின்றதும், பரிதாபமாய் இயக்குனரிடம் கெஞ்சும்போது அவர் முகம் உணர்த்தும் வலியை விட அவரது கண்கள் அதிகம் சொல்லும்!!!!!!! தன் முதல் மனைவியை போல் இருக்கும் ஐஸ்வர்யாரையைப் பார்த்து திகைத்து நிற்கும்போது  தான் உடலிலும் முகத்திலும் அவர் காட்டும் வெளிப்பாடு, என அடுக்கிக்கொண்டே போகலாம்!!!

மணிரத்னம் அவர்கள் ஆனந்தனின் வாழக்கை ஓட்டத்தை 30 வயதிலிருந்து ஆரம்பித்து, 40, 50, 60 என பயணம் செய்து முடித்திருப்பார்!!! இப்போது படம் பார்த்தால் கூட தெரியும் மோகன்லால் அவர்கள் அந்தந்த வயதுக்கேற்ப தனது முகம், உடல், முடி என வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார்!!!!  “இதில் என்ன ஆச்சர்யம் என்று நினைக்கத்தோன்றுகிறதா??? நிச்சயமாக ஆச்சர்யம் தான் நண்பர்களே!!! எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் இயல்பாகவே அந்த வயதிற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டார்!!!!!!

ஒருமுறை பேட்டியொன்றில் மோகன்லால் இந்த படத்தை பற்றி பகிர்ந்துகொண்டதாவது, ” நான் பலமுறை மணிரத்னத்தை கேட்டிருக்கிறேன், என்னை விட சிறந்து நடிக்க கூடிய பலர் இருக்கையில் சுத்தமாக எந்தவித சம்பந்தமும் இல்லாத என்னை ஏன் நடிக்கவைத்தீர்கள் என்று?” !!! ஆனால் படம் வெளியான பின்பு என் நண்பர்கள், ரசிகர்கள் சொன்ன ஒரே விஷயம், நீ அவரைப்போலவே பேசுகிறாய், நடிக்கிறாய், நடக்கிறாய் என்றுதான்!!!

ஒருமுறை, அமெரிக்காவில் இந்தப்படம் திரையிட்டபோது இவரது நடிப்பை பார்த்து வியந்த டைம்ஸ் இதழ் இவ்வாறாக குறிப்பிட்டது ” He explained on screen what is meant by “deliberate underplay of emotions” in the definition of acting, through the movie Iruvar“.

இருவரில் ஒருவரை சுலபமாக தேர்வுசெய்த மணி அவர்களுக்கு தமிழ் செல்வத்திற்கான தேடுதல் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை!!! நானா படேகர் என்ற பெயருடன் வெளிவந்த அறிவிப்பு சில நாட்களிலேயே சம்பளப் பிரச்சனையால் நீர்த்துப்போனது!!!!

அடுத்ததாக மணி சென்றது மம்மூட்டியிடம்!!!! இதற்கு காரணம் மம்மூட்டி மேல் இவருக்கு இருந்த அபிப்பிராயமும் ஏற்கனவே அவரது உழைப்பை தளபதியில் பார்த்திருந்ததாலுமே ஆகும்!!! ஒரு பேட்டியின் போது கூட மம்மூட்டிக்கும் மோகன்லாலுக்கு உள்ள வித்யாசத்தை கேட்டபோது, “mohanlal is best in acting but Mamooty is best actor” என்று மம்மூட்டியை உயர்த்தி சொன்னார்!!!!

இவ்வாறாக தமிழ்ச்செல்வமாக மம்மூட்டியை ஒப்பந்தம் செய்து டெஸ்ட் சூட் கூட செய்து முடித்தார்!!! ஆனால் இடையில் நடந்த குளறுபடிகளால் இவரும் படத்திலிருந்து விலகினார்!!!! அடுத்ததாக கமல், சரத் குமார், சத்யராஜ் என முயற்சி செய்து எதுவும் ஒத்துவரவில்லை!!!! நடுவே அரவிந்தசாமியை ஒப்பந்தம் செய்து இரு பாடல்களை கூட பாடவைத்தார்!!!! ஆனால் அதுவும் அவருக்கு கைகூடவில்லை!!!!

இறுதியாக தமிழில் அவ்வளவு பிரபலமாகத ஒருவரை நடிக்கவைக்க முடிவு செய்தார்!!!! ஏற்கனவே இவரது பம்பாய் படத்தில் நடித்திருந்த பிரகாஷ்ராஜை இதற்காக அணுகினர்!!!

நாயகனுக்கு இணையான வேடம் மற்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பு, இவை இரண்டும் பிரகாஷ்ராஜை தயங்கவைத்தது!!! ஆனால் மணிதான் பிடிவாதமாக இருந்து இவரை ஒப்பந்தம் செய்தார்!!! மணியின் கணிப்பு இதிலும் பொய்க்கவில்லை!!!

ஆரம்பத்தில் தன் நண்பனுடனான இணைப்பை காட்டுவதாகட்டும்!!! பின் பதவி ஆசை குடியேறும் போது இவருக்குள் ஏற்படும் மிடுக்காகட்டும் எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுவதும் குடிகொண்டிருக்கும் இவரது தமிழாகட்டும்!!! என அனைத்தும் இவரது ஈடுபாட்டைச்சொல்லும்!!!!! இந்த உழைப்பிற்குத்தான், இந்திய சினிமாத்துறை 1997-ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வழங்கி கவுரவித்தது!!!

உலக அழகி பட்டம் வென்றதோடு சினிமா உலகிற்கு இருவரில் அறிமுகமானார் ஐஸ்வர்யாராய்!!!! புஷ்பாவாக ஆனந்தனின் காதல் மனைவியாகவும், கல்பனாவாக அலட்டல் ராணியாகவும் கலக்கியிருப்பார்!!!! தமிழே சுத்தமாக தெரியாத ஒரு பெண்ணை இவ்வளவு நேர்த்தியாக நடிக்க வைக்க மணிரத்னத்தால் மட்டுமே முடியும்!!! அதுவுமில்லாமல் ஐஸ்வர்யாராயின் தோற்றம் ஜெ-வின் ஆரம்பகால தோற்றத்தை போலவே இருக்குமென படித்த ஞாபகம்!!! இந்த படத்தில் இவருக்கு குரல் கொடுத்தவர் நடிகை ரோகிணி!!!

ஏனைய கதாபாத்திரங்களான, V.N.ஜானகியை நினைவுபடுத்தும் ரமணியாக கௌதமி, தமிழ்ச்செல்வமின் முதல் மனைவி மரகதமாக ரேவதி, இரண்டாம் மனைவி செந்தாமரையாக தபு, அய்யா வேலுத்தம்பியாக நாசர் என அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்!!!

வசனங்கள்:

மணிரத்னத்தின் கதாநாயகர்களை விட அவர்கள் பேசும் வசனங்கள் வெகு பிரபலம்!!!!

ஏன்???  எதனால? ?? எப்படி???

என பல வசனங்கள் இவராலேயே பிரபலம்!!! “வள வள” வசனங்கள் ஏதுமில்லாமல் காட்சி மற்றும் இசையின் மூலமே அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியும் என ஆணித்தரமாக நம்புபவர் (கடல் மட்டும் இதில் விதிவிலக்கு)!!! இருவர் படம் இவரது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் விலகி முழுவதும் வசனத்தில் பயணித்தது!!! அதும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதைகள் அனைத்தும் இவருக்கு தமிழ் மேல் உண்டான காதலை உரக்க சொல்லியது எனலாம்!! இந்த படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் சுஹாசினி மற்றும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதைகளை வைரமுத்து எழுதியிருந்தார்!!!

இந்த படம் முடிந்தவுடன், வைரமுத்து!!! உண்மையிலேயே நீ கவிப்பேரரசு தான்யா!! என உரக்க கத்தவேண்டும் போலிருந்தது. காதலை அனுபவித்து எழுதிய “உன்னோடு நானிருந்த“வாகட்டும், தமிழ் செருக்கோடு எழுதிய “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” வாகட்டும், தன் நண்பனின் பூத உடலை பார்க்கக்கூட முடியாமல், தாங்கள் முதலில் சந்தித்த இடத்தில பாடும் ” போய் வா நண்பா போய் வா” வாகட்டும்!!! அனைத்திலும் தமிழ் மணம்!!

ஆனால் நான் இங்கே, மேலே குறிப்பிட்ட வசனங்களைத் தவிர்த்து, பலராலும் கவனிக்கப்படாத ஆனால் என்னை ரசிக்கவைத்த ஒரு சில வசனங்களை பதிவிடுறேன்,

 • எப்போதையா திருந்தும் இத்தேசம்!!!இனியும் எப்போது திருந்துவதாய் உத்தேசம்!!!!
 • நிலவைத்தானடி யாசித்தேன்…. இரவை எனக்கு நீ தந்தாய்!!!!   ராகம் தானடி யாசித்தேன்… மௌனம் எனக்கு நீ தந்தாய்!!!!  காதல் அமுதம் யாசித்தேன்…       கண்ணீர் துளியை ஏன் தந்தாய்!!!! சிறகைத்தானடி யாசித்தேன்…சிறையை எனக்கு நீ தந்தாய்!!!!

இன்னமும் நீளும் இதன் வசனங்களை படத்தில மறக்காம பாருங்க!!

 • தமிழ்செல்வன் தாங்கள் ஆட்சிக்குவந்தால், இவையெல்லாம் செய்வேன் என பட்டியலிடும் ஆனந்தன் சொல்லும் ஒரே பதில் ” நல்லாயிருக்கணும்…. எல்லோரும் நல்லா இருக்கணும்!!!!! இந்த ஒரு காட்சியிலேய நமக்கு இருவருக்கும் உண்டான அரசியல் புரிதல்கள் விளங்கிவிடும்!!! (சுஹாசினி)
 • தன் முதல் மனைவி புஷ்பாவிடம் ஆனந்தன் “அவளது அழகை வர்ணிக்கும் இடங்கள்!!!! (சுஹாசினி)
 • சினிமா, அரசியல்..உனக்கு இந்த இரண்டில் எது முக்கியம் என கேட்கும் தமிழ் செல்வமிற்கு ஆனந்தன் கூறுவது ” சோறு…சோறுதான் முக்கியம்”. (சுஹாசினி)
 • புஷ்பாவுக்கும் கல்பனாவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஆனந்தனின் வசனங்கள்!!!!  (சுஹாசினி)
 • எம் ஜி ஆர் அவர்களின் “நான் ஆணையிட்டால்” பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது!!!! அதன் வரிகளையும் இருவரில் வரும் “ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் வரிகளையும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்!!!! வைரமுத்துவின் மேதமையை உணர்வீர்கள்!!! அப்படியே எம்.ஜி.ஆரின் பாடலை திருத்தம் செய்து ஒரு சில வரிகள் இணைத்து இப்பாடலை படைத்திருப்பார்!! மற்றபடி பாடலின் பொருள் ஒன்றே!!!

நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்..இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!!!!! (நான் ஆணையிட்டால்)
நான் நினைத்தால்…..நினைத்தது நடக்கும்..நடந்து பின் ஏழையின் பூமுகம் சிரிக்கும்!!!!!! (ஆயிரத்தில் நான் ஒருவன்)

இப்படி படத்தின் எல்லா பாடல்களும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பல எம்.ஜி.ஆர் பாடல்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்!!!!!

படத்தோடு கலந்த கலை-இசை:

எந்த ஒரு பீரியட் படத்திற்கும் முதுகெலும்பாய் இருப்பவர்கள் “இசையமைப்பாளர்”  மற்றும் “கலை இயக்குனர்“.!!!!

ஏனெனில் படம் வெளியாகும்போது இருக்கும் காலகட்டத்தை மறக்கடித்து நம்மை படம் நடக்கும் காலத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும்!!! அவ்வாறு பார்க்கையில் இந்தப்பட கலை இயக்குனர் “சமீர் சண்டா“வின் உழைப்பு கவனிக்கப்பட வேண்டியது!!! அதுவும் இது ஒரு சினிமாத்துறையை பற்றிய படமென்பதால்…மிக எளிதில் அனைவருக்கும் தவறுகள் புலப்பட்டுவிடும்!!! மிகவும் சிக்கலான இந்தப்பணியை அருமையாக செய்திருப்பார்!!!! உதாரணமாக, ஆனந்தனின் இறுதி ஊர்வலக் காட்சி படத்தில் 2-3 நிமிடமே வரக்கூடியது!!! ஆனால் இதை தத்ரூபமாக எடுத்த முடிக்க சுமார் 2 மணி நேரமானது!!! (கொசுறு: இந்தக்கட்சியை எடுத்து முடிக்கும் வரை மோகன்லால் எங்கும் நகராமல், மேலே போடப்பட்ட பூக்களுடனே படுத்துக்கிடந்தார்).

இந்தப்படம் வெளியான (1998) வருடத்திலிருந்த இசையை மறக்கடித்து 30-40 வருடங்களுக்கு முந்தைய இசையை கொடுக்கவேண்டும்!!!! 1950-60களின் இசையை K.V.மஹாதேவன் அவர்கள் வாயிலாலும், எம்.எஸ்.வியின் வாயிலாலும் நாம் ஏற்கனவே கேட்டிருப்போம்!!! ஆனால் இருவரின் இசை நமக்கு யாரையும் நினைவுபடுத்தாமல் புதுப்பாதையில் பயணிக்கிறது!!!!

ரஹ்மானைப்போல இசையில் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டவர் எவருமில்லை எனலாம்!!! இவருடைய பாடல்களில் இருக்கும் வாத்தியக்கருவிகளின் பயன்பாடு, ஒவ்வொரு பாடலுக்கும் இவர் கொடுக்கும் வேறுபாடு என அனைத்தும் இவரது அசாத்திய உழைப்பை நமக்கு சொல்கிறது!!!!

இந்தப்படத்தின் கர்னாடிக் இசை வடிவைக்கொண்ட “நறுமுகையே” பாடலையும் , மேற்கத்திய நாட்டின் ஜாஸ் வகை இசையை கொண்டு வடிவமைக்கப்பட்ட “வெண்ணிலா வெண்ணிலா” மற்றும்  “ஹலோ Mr.எதிர்க்கட்சி” பாடல்களையும் ராக் இசை வடிவை கொண்ட “கண்ணைக் கட்டிக்கொள்ளாதே” பாடலையும் ரசிக்காதவர் உண்டோ!!!!! ரஹ்மான் மேல் எப்போதுமுள்ள விமர்சனம், பாடல் வரிகளை இவரது இசை மறைத்துவிடுவது, ஆனால் இந்தப்படத்தில் அதிகம் சிக்கலில்லாத அதே சமயம் புதுமையான ஒரு இசையை அனைவரும் ரசிக்கும் வடிவில் கொடுத்திருப்பார்!!!!

இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பூங்கோடியின் புன்னகை“!!! 1950-களின் மெட்டோடு எந்தவித வாத்தியக்கருவிகளும் அதிகம் இடையறாது அமைந்திருக்கும்!!! இதே போன்ற இன்னொரு பாடலான ” யாருமில்லா தனியறையில்காவியத்தலைவன் படத்திற்காக அமைத்திருப்பார் !!!

படத்தில் மொத்தம் 9 பாடல்கள் (கவிதைகளையும் சேர்த்து) இருந்ததாலோ என்னவோ, படத்தின் வேகத்திற்கு இடையூறாக இருப்பதாக விமர்சனம் கிளம்பியது!!! அடுத்தது பாடல்கள் வருவதாலும் அதுவும் மெதுவான இசையுடன் கூடிய பாடல்கள் என்பதாலும் இவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பது என் அபிப்ராயம்

இந்த படத்தின் பின்னணி இசைக்காக மணி முதலில் நாடியது இளையராஜாவை!!!! பீரியட் படம் என்பதாலோ, இல்லை தளபதி மற்றும் நாயகனின் இசை நினைவுக்கு வந்ததாலோ என்னவோ இளையராஜாவுடன் மீண்டும் இணைய ஆசைப்பட்டார்!!!!!ஆனால் இவரது கோரிக்கையோ ராஜாவால் நிராகரிக்கப்பட ரஹ்மானே இதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்!!! ரஹ்மான் இந்த படத்திற்கு செய்த பின்னணி இசைக்க கோர்ப்பு அளப்பறியாதது!!! சென்சாரில் பல வசனங்கள் தூக்கியெறியப்பட இவரது இசையே நமக்கு அந்த காட்சிகளின் வீரியத்தை சொல்லியது!!!!

இவரது பின்னணி இசையில் எனக்கு பிடித்தது, ஆனந்தனும் அவன் முதல் மனைவி கல்பனாவிற்கும் இடையேயான நெருக்கத்தின்போது ஒலிக்கும் அந்த வயலின் இசை!!! (படத்தில்17:17 min)

ஒளி இயக்குனர்:

அடுத்ததாக நம் சந்தோஷ் சிவன்!!! இவரை பற்றி சொல்லாமல் இருவர் முடிவடையாது!!!! ஒளிப்பதிவாளர் என்று சொன்னதும் நம் நினைவுக்கு முதலில் வருவது “பாலுமகேந்திரா” அவர்கள் தான்!!!! எந்த வித லைட்டிங்கையும் பயன்படுத்தாது முழுக்க முழுக்க இயற்கையில் உள்ள வெளிச்சத்தை கொண்டே தன படங்களை பதிவு செய்தவர்!!! அதன் பின் நமது நினைவிற்கு வருபவர்கள் “இருளின் காதலின்’ என்றழைக்கப்படும் P.C.ஸ்ரீராம் மற்றும் அசோக் குமார் போன்ற சிலரே!!!! இந்த வரிசையில் தான் அறிமுகமான படத்திலேயே இணைந்துகொண்டவர் தான் சந்தோஷ் சிவன்!!!!

இருவர் படத்திற்கு இவர் செய்திருப்பது இயற்கை வெளிச்சத்தை மட்டும் கொண்ட “DEEP FOCUS PHOTOGRAPHY”!!!! (DEEP FOCUS PHOTOGRAPHY” என்பது அருகிலும் தூரத்திலும் உள்ள பொருட்கள் எந்த ஒரு வேறுபடும் இல்லாமல் சமமாக தெரிவது!!!! அதுவுமில்லாமல் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் “SINGLE SHOT” என்பதாலும் இவரது ஒளிப்பதிவு இன்றளவும் பேசப்படுகிறது!!!

உதாரணமாக “உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்” சிங்கள் ஷாட்டில் எடுக்கப்பட்டது!!! காட்சி ஆரம்பிக்கும்போது மேலே இருந்து சுற்றிக்கொண்டே இறங்கும் கேமரா!!!!!

 • அய்யாவின் இரங்கல் கூட்டத்தில் ஆனந்தன் பேசும்போது  அவரைச்சுழலும் கேமரா மற்றும் கோணங்கள்!!!!
 • ஐஸ்வர்யாராயும் மோகன்லாலும் மலை உச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது, மோஹன்லாலிடம் காமெராவின் கோணத்தை நிறுத்தி, ஐஸ்வர்யாராயின் முக அசைவுகளை அவரது கையிலிருக்கும் கண்ணாடியின் வழியே காண்பிப்பது!!!!

என ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போகலாம்!!!! இவரது உழைப்பை பாராட்டி இந்திய அரசாங்கமும் இவருக்கு தேசிய விருதை கொடுத்து கவுரவித்தது!!!

அரசாங்கத்தின் கடிவாளம்:

1996-இன் இறுதியில் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது!!! பல கதாபாத்திரங்கள் காட்சிகள் உயிருடனோ அல்லது இறந்தவரையோ நினைவுபடுத்துவதாலும், பட வெளியீட்டின் பொது பலவித சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருமெனக் கூறி படத்தை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது !!!

மேல் முறையீட்டிற்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிவைத்தார் மணி!!!! அங்கே பல காட்சிகள் வெட்டப்பட்டு, பல வசனங்கள் ஊமையாக்கப்பட்டு U/A சான்றிதழோடு வெளியிட அனுமதிக்கப்பட்டது!!!!

சென்சாரின் கத்திரியில் சிக்கிய ஒருசில காட்சிகள் உங்கள் பார்வைக்கு,

 1. நீங்கள் படம் பார்க்கும்போது கவனித்திருக்கலாம் யாரை எதிர்த்து திராவிட அரசியல் தோன்றியதோ!!! அவர்களை பற்றிய ஒரு வரி கூட படத்தில் இடம்பெறாததை!!! ஆம், பிராமணன், பார்ப்பான், சூத்திரன் என ஒலித்த அத்தனை வசனங்களும் சென்சாரில் ஊமையாக்கப்பட்டன.
 2. தமிழ்ச்செல்வமின் முதல் மனைவி மரகதமும், இரண்டாவது மனைவி செந்தாமரையும் சந்தித்து பேசும் இடம்!!!!!!
 3. கட்சி பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் முழங்கும் “பிராமணன் ஒதுங்கனும், மேல் ஜாதிக்காரன் விலகனும் திராவிடம் தலைக்கணும்”!!! இந்த காட்சி அப்படியே நீக்கப்பட்டது!!!!
 4. தமிழ்செல்வமிடம், நான் உங்கள் மனைவியா? வேசியா?? இல்ல வெப்படியா? என செந்தாமரை கேட்கும் காட்சி!!!
 5. கடற்கரையில் அமர்ந்துகொண்டு செந்தாமரையும் தமிழ்ச்செல்வமும் ஆனந்தனுக்கு மந்திரிப்பதவி மறுக்கப்பட்டதை பற்றி விவாதிக்கும் காட்சியில் வரும் பாதிவசனங்கள் சென்சாரில் ஊமையாக்கப்பட்டன!!!!
 6. வேலுத்தம்பி அய்யாவின் இரங்கல் கூட்டத்தில் ஆனந்தன் பேசும் முக்கால்வாசி வசனங்கள் ஊமையாக்கப்பட்டதை ரஹ்மான் தன இசையால் மறக்கடித்திருப்பார்!!!!!

சென்சார் அனுமதித்தபின் படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டார்கள்!!!!!ஆனால் திராவிடர் கழகம் தலைவர் வீரமணி அவர்கள் பட வெளியீட்டிற்கு இரண்டு நாள் இருக்கும்போது மறுபடியும் கலகக் குரல் எழுப்பினார்!!!!

பெரியாரை பற்றிய தவறான கருத்தை படம் முன்வைப்பதாகவும், மேலும் அந்த காட்சிகள் நீக்கப்படவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டார்!!!! ஆனால் ஒருவர் படத்தையே பார்க்காமல் இவ்வாறு  கூறுவதை ஏற்கமுடியாதென்று கூறி மணி பொங்கலென்றே படத்தை வெளியிட்டார்!!!!

டெக்னிக்கலாக இந்தப்படம் படம் எவ்வளவு உயர்ந்து நின்றாலும் அப்போதைய  ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப இல்லாத காரணத்தால், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது!!!! அதுவுமில்லாமல் மக்களால் கடவுளாகப் பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்  அவர்களின் பலவீனத்தை (முக்கியமாக பெண்கள்) இப்படம் அலசியிருந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!  இதுவும் இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது!!!!!

ஆனால் ஒரு உண்மை மட்டும் காலம் கடந்தும் நிற்கும்,

உலக சினிமாக்களை எல்லாம் தேடித்தேடி கொண்டாடிய நாம்…உலகத்தையே நம்மீது திரும்பிப்பார்க்க வைத்த ஒருவனின் சினிமாவை கொண்டாடாமல் விட்டு விட்டுவிட்டதை!!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

2 Comments on “இருவர் – தமிழ் (1997) நிறைவு பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *