Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
ஆர்கோ படம் பற்றிய பதிவு எழுதியவுடன் தோன்றிய முதல் கேள்வி தமிழில் இதுபோல படங்களே இல்லையா என்று!!!! அதற்கான பதிலே இந்தப் பதிவு!!!!
1995-ன் தொடக்கத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படம் உண்டாக்கிய அதிர்வலை அனைவரும் அறிந்ததே!!!!! பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை பின்னணியாக கொண்டு ஹிந்து-முஸ்லிம் காதலை சொல்லியிருந்தார்!!! இந்த படம் வணீக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்து பலரது பாராட்டுகளை அவருக்கு பெற்றதுத்தந்தது!!!!! இவையனைத்தையும் கண்டுகொள்ளாத மணி தனது அடுத்த படத்திற்கு தயாரானார்!!!! ஆனால், அவர் நினைத்தும் கூட பார்த்திருக்கமாட்டார் இதுதான் தன் சினிமா கேரியரின் ஆகச்சிறந்த படமாக இருக்கப்போகிறதென்று!!!!!!
அதே ஆண்டின் இறுதியில் வெளியானது இவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு!!!!!!!! மோகன்லால், ஐஸ்வர்யாராய் மற்றும் நானா படேகர் நடிக்க சுஹாசினி அவர்கள் வசனத்தில் “ஆனந்தன்” என்ற படத்தை ஆரம்பிக்கிறார்!!!! அது, மணி அவர்கள் புராண கதைகளையும் உண்மைச்சம்பவங்களையும் அடிப்படையாக கொண்ட திரைப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்த சமயம்!!!! அதனால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததுமே ஆளாளுக்கு ஒவ்வொரு கதையாக அவிழ்த்துவிட்டனர்!!!!!!!!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளியாக இருந்து பின்பு இந்தியா அரசின் கைக் கூலியாக மாறியதற்காக புலிகளாலேயே கொல்லப்பட்ட மாத்தையா பற்றிய கதை என்றெல்லாம் கூறப்பட்டது!!!!!! ஆனால் இதையெல்லாம் மறுத்து, இது இந்திய அரசியல் மற்றும் திரைப்படத்துறையை பற்றிய படம் என்று அறிவித்தார்!!!!
பின்னாளில் ஒரு பேட்டியின் போது, மலையாள எழுத்தாளர் வாசுதேவனுடனான உரையாடலில் தனக்கு தோன்றிய திராவிட அரசியல் எண்ணங்களின் பாதிப்பே இப்படத்திற்கான விதையென்றார்!!!!! இந்த சந்திப்பை ஏன் வருத்திச் சொல்கிறேனென்றால், ஆனந்தனாக இருந்த படம் “இருவரானது” அப்போதுதான்!!!!!
உண்மைக்கதை அல்ல என்ற டைட்டிலோடு தொடங்கும் இப்படம் ,திரைப்பட கனவுகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கும் ஆனந்தனையும் (மோகன்லால்) அவனது தேடல்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது!!!! நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவர் தன் சினிமா ஆசைகளை நண்பன், கவிஞர் தமிழ்ச்செல்வனின் (பிரகாஷ்ராஜ்) துணையோடு நிறைவேற்றிக்கொள்கிறார்!!! ஆனந்தன் திரைப்படத்துறையில் முன்னேற தமிழ்ச்செல்வனோ தன்னை, திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபடுகிறார்!!!!
ஆனந்தன் தன் நடிப்பாற்றலாலும் தமிழ்ச்செல்வன் தன் எழுத்துக்களாலும் மக்கள் மனதை கவர்கிறார்கள்!!! இதனை தொடர்ந்து ஆனந்தனும் தன்னை திராவிட கட்சியில் இணைத்து கொள்கிறார்!!! கட்சி தலைவர் வேலுத்தம்பி அய்யா (நாசர்) அவர்களின் இறப்பிற்கு பின் ஏற்படும் பதவி ஆசை, நண்பருக்குள் பிரிவினையை உண்டாக்குகிறது!!!! இடத்தினை தொடர்ந்து ஏற்படும் அய்யாவின் இரங்கல் கூட்டத்தில் ஆனந்தன் கூறும் கருத்தால் கட்சிலிருந்து நீக்கப்படுகிறார்!!!
ஆனந்தனும் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து, திரைப்படங்கள் மூலம் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்!! மக்களும் இவரின் மேல் கொண்ட அன்பால் இவரை முதல்வராக்குகின்றனர்!!!! அதன் பின் ஏற்படும் ஒரு சில உரசல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் இருவரையும் தனிமைப்படுத்துகிறது!!! ஆனந்தன் இறந்த பின் தமிழ்ச்செலவானால் அவரது உடலைக்கூட பார்க்க முடியாமல் போகிறது!!!! அவ்வேதனையில் அவர்கள் முதலில் சந்தித்த இடத்தில தன் நண்பனை கவிதையால் அஞ்சலி செலுத்துவதோடு படம் நிறைவடைகிறது!!!!!!!
சாமானிய மக்களால், அன்று முதல் இன்று வரை கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுபவர் எம்.ஜி.ஆர், அரசியல் அரங்களிலும் சரி… எழுத்துலகிலும் சரி….. இன்றுவரை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர் கருணாநிதி!!!! இவர்களுக்குள் நடந்த சில உண்மை நிகழ்வுகள் மற்றும் இதுவரை உலகுக்கு வெளிவராது அரசால் புரசல்களாய் கேள்விப்பட்ட ஒரு சில கதைகளைக் கொண்டு இதற்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார் மணி!!!!! உண்மைக்கு நெருக்கத்தில் இருக்கும் இதன் காட்சியமைப்புகள் அனைத்தும் நமக்கு புதுப்புது செய்திகளை தந்து கொண்டே இருக்கிறது!!!! எனக்கு புரிந்த சில,
ஆனந்தன் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வீரப்பிரதாபன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிறார்!!! இப்படத்திற்கு வசனம் எழுத தமிழ்ச்செலவனை வசனம் எழுத சிபாரிசு செய்கிறார்!!!! மற்றும் இந்த படத்திற்கு இசை ராமநாதன் என விளம்பரம் செய்யப்படுகிறது!!!!!!
புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் சினிமா வாழ்க்கையின் திருப்புமுனை படமாக பார்க்கப்படுவது “மந்திர குமாரி“. இதற்கு வசனம் கருணாநிதி, மற்றும் இதன் இசையமைப்பாளர் ஜி. ராமாநாதன்!!!!
எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் நெருக்கம் ஊர் அறிந்ததே!!! இருவரும் திருமணம் செய்ய இருந்தார்கள் என்பதும், ஆனால் அப்ப அவரு ஆரம்பிச்ச புது கட்சியான அ.தி.மு.க-வின் எதிர்காலத்திற்காகத்தான் தான் இவரை செல்வியாவே விட்டுச்சென்றார் என்பதும் அரசல் புரசலா தெரிஞ்ச ஒன்னு!!! (பெரியார்-மணியம்மை கல்யாணத்தை எதிர்த்துதான் தி.க-விலிருந்து விலகி அண்ணா புதுக்கட்சி தொடங்கினார் என்பதும் அனைவரும் அறிந்ததே). அதேசமயம், எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் மேல் காட்டிய இணக்கத்திற்கு காரணமா “ஜெயலலிதா எம்.ஜி. ஆரின் முதல் மனைவி முக சாயல்” என்றும் சொல்லப்பட்டது!!! அத படத்துல மணி அருமையா கையாண்டிருப்பார்!! ஆனா ஜெயலலிதா கேரக்டரை பாதியிலேயே ஆக்ஸிடண்டில சாகடிச்சு மறைச்சுட்டார்!!! இது இரு நண்பர்களுக்குண்டான கதைங்கிறதால அத விரிவா சொல்லாம கூட விட்ருக்கலாம்!!!
திராவிட அரசியலில் பெரியாரின் பங்கை மறக்க முடியுமா !!!! திராவிட கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரை தொண்டர்கள் “அய்யா” என்றும் அறிஞர் அண்ணாதுரையை “அண்ணா” என்றும் அழைப்பது வழக்கம்!!! இதை மனதில் வைத்துக்கொண்டுதான் மணிரத்னம் அவர்கள் வேலுத்தம்பி (நாசர்) கதாபாத்திரத்தை பெயரில் பெரியாராகவும் உருவத்தில் அண்ணாவாகவும் காட்சிப்படுத்தி இருப்பார்!!!!
அதேசமயம், எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட காரணமான அந்த நிகழ்வு அப்படியே படத்தில் சொல்லப்பட்டிருக்கும்!!!! ஆனால் சென்சார் கத்தரிகளில் சிக்கி பல வசனங்கள் ஊமையாக்கப்பட்டன!!! இப்போதும் படம் பார்த்தால் கூட தெரியும் அந்த இரங்கல் கூட்ட காட்சிகளில் முக்கால்வாசி ரஹ்மானின் இசையால் நிரம்பியிருப்பதை!!!!
ராஜாதி அம்மாள் மற்றும் கனிமொழி அவர்களின் கதையை படத்தில் செந்தாமரை, மணிமேகலைங்கிற பெயர்ல உலாவிட்ருக்கார் மணி!!! அதுவும் அவங்க தமிழ் ஆசிரியராகவும், தமிழ்ச்செல்வனின் கவிதைக்கு மயங்கி காதல் கொண்டதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்!!!! ஆனா, ராஜாத்தியம்மாள் (எ) தர்மாம்பாள் ஒரு நாடக நடிகை மற்றும் ஏற்கனவே திருமணமானவர் என்றும் . கருணாவும் ராஜாத்தியும் ஒரு நாடகத்தில் சேர்ந்து நடிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும்!! முதலில் திநகரில் வீடு எடுத்து தங்க வைத்திருந்தார், அதன் பிறகு தான் சிஐடி காலனி வீடு எல்லாம் என்று படித்ததாக நினைவு ( இது உண்மையானு தெரிஞ்சவங்க சொல்லுங்க)
ஆனந்தனின் திரைப்படம் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைப்பதால் அதனை தடை செய்ய கோரிக்கை முன் வைக்கப்படுகிறது!!! அதற்கு பிரகாஷ்ராஜ், “நம்ம ஆட்சி மூணு மணி நேர படத்துக்கெல்லாம் பயப்படறமாதிரி ஆயிடுச்சே”னு சொல்லி மறுத்திடுவார்!!!
ஆனா நிஜத்துல இப்படியானு பார்த்தா!!!! இல்லைனு தான் சொல்லணும்!!!! கலைஞர் தன்னால முடிஞ்ச அளவுக்கு எம்.ஜி.ஆரின் வளர்ச்சியை தடுக்க நினைத்தார்!!!! அவரது சினிமா வாழ்க்கையை முடிக்க அவரது மகன் மு.க.முத்துவை களமிறக்கினார்!!!! (ஆனால் அது அவருக்கே backfire- ஆனது வேறு கதை). அடுத்ததாக அவரது திரைப்படங்களை எங்குமே வெளிவர இல்லாமல் பார்த்துக்கொண்டார்!!!!
ஆனால் இவை எல்லாவற்றிக்கும் மேலாக தான் எழுதிய “வான் கோழி” என்ற குறுநாவலில் வரும் நாயகன், கவிதையே எழுதத்தெரியாமல் அடுத்தவனின் கவிதையை தனதென காட்டி புகழடைவதாகவும், அத்தைமட்டுமில்லாமல் தனக்கு பிள்ளையே பிறக்காதென்று, வேலைக்காரனை கழிவறையில் ஒளித்து வைத்து தன் மனைவியுடன் கூடச்செய்து பிள்ளை பெறுவதாகவும் சொல்லியிருப்பார்!!! இதில் வரும் நாயகனின் தோற்றம் அப்படியே எம் ஜி ஆரை மனதில் வைத்து உருவாக்கியிருப்பதாக பலரும் பேசிக்கொண்டார்கள்!!!!
மணிரத்னம் தனது பேட்டிகளில் எப்போதும் குறிப்பிடுவது, ஒரு படத்தின் 80 சதவீத வெற்றியை தீர்மானிப்பது அதன் காதாபாத்திரதேர்வே என்று!!!! இது இந்த படத்திற்கு 200 சதவீதம் பொருந்தும்!!!!
இப்படத்தை கவனித்து பார்த்தால் தெரியும், படத்தின் ஆரம்பத்தில் வரும் மோகன்லால் மற்றும் பிரகாஷ்ராஜின் தோற்றம் கதையின் ஓட்டத்திற்கேற்ப மாறி வருவதை!!!!! மோகன்லால் கதாநாயகன் ஆனவுடன் கழுத்தில் போடும் மப்ளர், வயதிற்கேற்ப மாறும் அவரது தலை முடியின் தன்மை (இறுதியில் ஏற்படும் வழுக்கை), மலையாள வாடையுடன் கூடிய தமிழ் என ஒவ்வொன்றும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்!!!! இதுவே பிரகாஷ்ராஜிற்கு, அவர் அணியும் கருப்பு நிற சட்டை, மீசை வடிவமைப்பு, வயதின் தோற்றத்திற்கேற்ப மாறுபடும் கண்ணாடி என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருப்பார் மணி!!!!!!!!!!
தனக்கு மந்திரி பதவி கேட்டு மறுக்கப்பட்டபின் வரும் கட்சி பொதுக் கூட்டத்திற்கு வேண்டுமென்றே தாமதமாக போய் பிரகாஷ்ராஜிற்கு தனது பலத்தை புரிய வைப்பதாக வரும் காட்சியொன்றே போதும், இத்திரைப்படத்திற்காக மணிரத்னம் செய்த தேடல்களை சொல்ல !!!!!
இவ்வளவு சிக்கலான படத்தை எப்படி கலைஞரின் ஆட்சியில் வெளியிட்டிருக்க முடியும்????
படத்தின் பல இடங்கள் இசையால் நிரப்பப்பட்டிருக்கும், பல காட்சிகள் சென்சாரில் தூக்கி எறியப்பட்டிருக்கும்!! எது, ஏன் ??
படத்தை பார்த்த ஜெயலலிதா அவர்கள் மோகன்லாலை தொலைபேசியில் அழைத்தது!!!!!!
என, அடுத்து வரும் சிலவற்றை நிறைவுப்பகுதிக்காக சேர்த்துவைக்கிறேன்!!!!
கூடிய விரைவில் சந்திப்போம்!!!!
(உங்கள் கருத்துக்களை Comment-ல் சொல்லவும்)
Semma Review Mams!! Write Part-2 review specially for Acting side. Mohanlal was great in movie.. You missed the dialogue portions.. They are simply clever and thoughtful.. I heard many scenes are single shoted and most them took in one take..
மஹி அடுத்த பதிவில் கண்டிப்பாக ரஹ்மானின் இசை, சுஹாசினி – வைரமுத்துவின் வசனங்கள், சந்தோஷ் சிவனின் கேமரா என அனைத்தையும் குறிப்பிடுவேன்!!!
தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் காலங்காலமாக பிணைக்கப்பட்டுள்ள ஒன்று… திராவிட அரசியல் தலையெடுக்க பெரிதும் உதவியாக இருந்தது அன்னா கலைஞர் கன்னதாசன் போன்றவர்களின் எழுத்துகளும் மேடை பேச்சுகளும்.. அதை படிப்பறிவு இல்லாத பாமரனுக்கு கொண்டு சென்றது எம்.ஜி.ஆரின் படங்கள்…
இத்திரைப்படத்தில் மணிரத்னம் கலைஞர் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜுக்கு முன் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் இவ்விரு கதாபாத்திரங்களும் இவர்களை தவிர வேறு எவரும் இவ்வளவு அழகாக பொருந்தியிருப்பார்கள் என்பது ஐயமே.. அவர்கள் சொந்த வாழ்க்கையை விடுத்து படத்தை பற்றியும் அரசியல் பற்றியும் இன்னும் தெரிந்து கொள்ள அடுத்த பதிவிற்க்கு காத்திருக்கிறேன்.