எனது படித்தவுகளை படித்து வரும்……..படிக்க வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!! இது ஷாகுல் ஹமீது பற்றிய போன பதிவின் நீட்சி……

பகுதி 1

305646_397123123641824_1970474003_n

1994-ஆம் ஆண்டில் ஷாகுல் ஹமீது அவர்கள் ரஹ்மான் இசையில் மட்டுமில்லாமல் பலரது இசையமைப்பிலும் பாடி அசத்தினார்!!!! ஆனால் ஏனோ ரஹ்மான் இசையில் இவர் பாடிய “வண்டிச்சோலை சின்ராசு“, “பவித்ரா“, “மே மாதம், “கருத்தம்மா“, “காதலன் ” போன்ற படப்பாடல்களால் மட்டுமே பலரால் அறியப்பட்டார்!!!!

வண்டிச்சோலை சின்ராசு படத்திலிருந்து இவர் “செந்தமிழ்நாட்டு தமிழச்சியே“மற்றும் கேசட்டில் வராமல் அந்த படத்தின் டைட்டிலில் வரும் பின்னணி பாடலான “சின்னமணியே என் செல்லக்கிளியே” பாடலையும் பாடியிருந்தார்.

சின்னமணியே என் செல்லக்கிளியே” பாடல் அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கியிருப்பார் ரஹ்மான். வெறும் கிதார் இசையை மட்டும் துணையாகப் கொண்டு வரும் இப்பாடலை ஹமீதின் குரல் மென்மையான காற்றைப்போல் வருடிச்செல்லும்!!!

ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வெளியானது “செந்தமிழ்நாட்டு தமிழச்சியே” பாடல்!!!!! இயக்குநர் மனோஜ்குமார் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை சொல்லி கதாநாயகன், கதாநாயகிக்கு அறிவுரை கொடுக்குமாறு பாடலை அமைக்க சொல்கிறார். வைரமுத்து ‘தமிழச்சியே’ என்று ஆரம்பித்து பாடல் வரிகளை ரஹ்மானிடம் சொல்ல ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ பாடல் உருவாகிறது. பாடலை முழுவதும் எழுதி வாங்கிய பின்தான் இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். துள்ளிசை பாடலான இதில் ஷாகுல் ஹமீதின் கணீர் குரலும், வைரமுத்துவின் வரிகளும், ரஹ்மானின் அசத்தலான இசையும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதைப் பார்க்க முடியும். எந்த பாடலும் காலம் கடந்து பேசப்பட வேண்டும் என ரஹ்மான் விரும்புவார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல.

காலம் சென்ற மனோரமா அவர்களுடன் இணைந்து சாகுல் பாடிய “மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்” பாடல் மிகவும் இனிமையான ஒன்று!!!

ஆனால் இந்த பாடல் முடியும்போது நம் மனதில் நீங்காமல் நிற்பது மனோரமா ஆச்சி அவர்களின் குரல் மட்டுமே!!!! சாரி ஷாகுல் சார்!!!

இதுவரை நீங்கள் பல ஊர்களை பற்றிய பாடல்களை கேட்டிருப்பீர்கள், ஆனால் அப்பாடல் முழுவதும் அதே நிறைந்திருக்குமா என்றால், கிடையாது என்பேன்!!! மத்த பாடல்கள் போல் இல்லாது வைரமுத்து வரிகளில் வந்த இப்பாடல் முழுவதும் மெட்ராஸை பற்றியே இருக்கும்!!!!

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் 1994 ம் ஆண்டில் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்காக ஷங்கர் பிரபுதேவா- நக்மா இருவரையும் வைத்து எடுத்த திரைப்படம் “காதலன்“. இந்தப் படமும் வணிக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்து ஷங்கர் திரையுலகில் அழுத்தமாக கால் பதிக்க உதவியது.

இந்த படத்திற்கும் இசையை ரஹ்மானையே முடிவு செய்தார் சங்கர்.  மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றிருந்தன!!! அனைத்தும் தாறு மாறு ஹிட்டாகின!!!! முக்கியமாக “ஊர்வசி ஊர்வசி“, தமிழில் புது முயற்சியாக வந்த ராப் பாடலான “பேட்ட ராப்” மற்றும் “முக்கால முக்காபுலா” பாடல்கள் அன்றைய இளைஞரின் தேசிய கீதமானது!!!!

இப்படத்தில் வரும் “ஊர்வசி ஊர்வசி” பாடலில் ஷாகுல் ஒரு சின்ன பிட் மட்டும் பாடியிருப்பார்!!! அது,

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்….
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்!!!!
மற்றும் ,
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்….

ரஹ்மான் இவரது குரலை மிகவும் நேர்த்தியாக உபயோகித்திருப்பார் இந்த பாடலில் !!!

2014-ஆம் ஆண்டு உலகப் புகழ் பாப் பாடகர் Will I Am அவர்கள் “ITS MY BIRTHDAY” என்ற பெயரில் இப்பாடலை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு கோடி வைஸ் மற்றும் கெயித் ஹாரிஸ் ஆகியோர் பாடல்வரிகளை எழுதியிருக்கிறார்கள்!!!!!

https://en.wikipedia.org/wiki/It%27s_My_Birthdayhttps://en.wikipedia.org/wiki/It%27s_My_Birthday

பாரதி ராஜா தன் தாயாரின் பெயரில் சொந்தமாக தயாரித்து இயக்கிய படம் தான் “கருத்தம்மா“!!! இப்படத்தின் அணைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதினார்!!! இப்படத்தில் இடம்பெறும் “பச்சைக்கிளி பாடும் ஊரு ” என்ற பாடலை மின்மினியுடன் இணைந்து பாடியிருப்பார் ஷாகுல்!!! சரணத்தில் “தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே” என்ற சங்கதியுடன் ஆரம்பிக்கும் ஷாகுலின் துள்ளலான குரலும் மின்மினி அவர்களின் மனதை மயக்கும் குரலும் இந்தப்பாடலை பிரபலமாக்கியது!!!

1994-ஆம் ஆண்டு துவக்கத்தில் சௌந்தர்யன் இசையில் வெளிவந்த சிந்து நதி பூ என்ற படத்திற்காக ஷாகுல் அவர்கள் இரண்டு பாடல்களில் தன் குரலை பதிவு செய்தார் !!!!!

அவை “ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு” என்ற குத்து பாடலும், ‘குப்பையிலே நெல் வெதைச்சா குத்தமில்ல” என்ற சோகப்பாடலும் ஆகும்!!!! எந்த வகை பாடலுக்கும் பொருந்திப்போகிறது இவரது குரல்!!!! அதுவும் அந்த சோகப்பாடல் அருமை!!!! இரண்டு நிமிடமே ஒலித்தாலும் அது நம் நினைவு விட்டு நகர மறுக்கிறது

அதே ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சிற்பியின் இசையசமைப்பில் உருவான “கேப்டன்” என்ற திரைப்படத்தில் “இடுப்பு அடிக்கடி புடிக்குது” எனும் குத்து பாடலை சித்ரா மற்றும் மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருந்தார் சாகுல்!!!

இப்பாடலின் சரணத்தில் ஆரம்பிக்கும் “நீ நேத்து பூத்த முல்லை” என்ற இவரது குரல் தான் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும்!!!! இல்லையேல் இதுவும் சாதாரண குத்துப் பாடல் வரிசையில் இணைந்திருக்கும்!!!!

 

இனி அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில், மற்றும் பல இவரது ஹிட் பாடல்களோடு சந்திக்கிறேன்!!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

One Comment on “இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *