Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது நான் பதிவு எழுதி!!!! பாதி நாட்கள் அலுவுலகப் பணியிலும் பாதி நாட்கள் பதிவிற்கான தேடலிலுமே சென்றுவிட்டது!!! இது ஷாகுல் ஹமீது அவர்களை பற்றிய பதிவின் நிறைவுப்பகுதி!!!
என்னால் முடிந்தவரை அவர் பாடிய அனைத்து பாடல்களையும் நினைவு கூர்ந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்!!!! எந்த பாடலாவது விடுபட்டிருந்தால் comment-ல் சொல்லவும்!!!!
1994-ல் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்களது தயாரிப்பில் செந்தமிழன் இயக்கத்தில், ‘சிந்து நதி பூ’ படத்திற்கு பாடல் எழுதி, இசையமைத்திருந்தார் சௌந்தர்யன். இந்தப்படத்தின் எல்லாப் பாடல்களும் அனைத்துத் தரப்பு ரசிகர் களாலும் ஆராதிக்கப்பட்டன!!!! “மத்தாளம் கொட்டுதடி மனசு…”, “அடியே அடி சின்னப்புள்ள…”, “ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு…”, “கடவுளும் நீயும் ஒருதாய் பிள்ளை…” என இசைமழை பொழிந்தார்!!! இதில் ஷாகுல் ஹமீது அவர்கள் “‘ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு” என்ற குத்து பாடலை பாடி அனைவரையும் அசத்தினார் இந்தப் பாடலின் வெற்றி மேலும் இவரை பல அருமையான குத்து பாடல்களை பாடவைத்து!!!!!!!
அவர் அப்படி பாடிய மற்றுமொரு பாடல் தான் இது!!!!! 1994-ஆம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியானது “கேப்டன்” திரைப்படம். . சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படத்தில் “இடுப்பு அடிக்கடி புடிக்குது“என்ற பாடலை சித்ரா மற்றும் மால்குடி சுபா அவர்களுடன் இணைந்து பாடியிருப்பார் ஷாகுல்!!!! இப்பாடலின் சரணத்தில் ஆரம்பிக்கும் “நீ நேத்து பூத்த முல்லை” என்ற இவரது குரல் தான் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும்!!!! இல்லையேல் இது சாதாரண குத்துப் பாடல் வரிசையில் இணைந்திருக்கும்!!!!
1995-ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த “வள்ளி வரப்போறா” திரைப்படத்திற்கு இசை கே.எஸ். மணி ஒலி!!! இதில் சுரேஷ்பேட்டர்ஸ் அவர்களுடன் இணைந்து இவர் படித்த பாடல் “ தலுக்கு குலுக்கு“!!!! படத்தில் இடம்பெறாது வெறும் கேசெட்டில் மட்டும் இடம்பெற்றிருந்தது இந்த பாடல் !!!!
“70mm சினிமாஸ்கோப்பில் கலரு கலரு கனவுதான்” என்று ஷாகுலின் குரலில் ஆரம்பிக்கும் இந்த சரணமே பாடலின் உயிர் !!!! மற்றபடி இது ஒரு ஆவெரேஜ் பாடல்!!!!
http://play.raaga.com/tamil/song/album/Valli-Varappora-T0003974/Thalukku-Kulukku-414500
கலைமாமணி என்ற படத்திற்காக ஷாகுல் பாடிய பாடல் ” ஆறப்போட்டு ஆறப்போட்டு”
http://play.raaga.com/tamil/song/album/Kalaimamani-T0004219/Aarappottu-471945
1996 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ஆதித்யன் இசையில் நவரச நாயகன் கார்த்திக் அவரது நடிப்பில் வெளியானது “கிழக்கு முகம்” திரைப்படம்!!!
இந்தப் படத்தில் ஷாகுலின் மந்திர குரலில் வந்த பாடல் “முத்து முத்து கண்ணம்மா“. இந்த பாடலை இவருடன் இணைந்து பாடியிருப்பவர் சுஜாதா!!!!
http://play.raaga.com/tamil/song/album/Kizhakku-Mugam-T0003840/Muthu-Muthu-413497
தமிழ் சினிமாவின் முதல் DTS திரைப்படம் “கருப்பு ரோஜா” (1996). மொத்தம் 10 பாடல்களுடன் வெளியான இத்திரைப்படத்திற்கு இசை M.S.V. ராஜா!!! ஷாகுல் இந்த படத்தில் “டாலியா பூவொன்னு.. ஆடுதே பொண்ணுன்னு” என்ற பாடலை பாடிருப்பார்!!!!
மிகவும் வித்தியாசமான இசையில் ஆரம்பிக்கும் இப்பாடலில் ஒலிக்கும் குரலை அடையாளம் காணவே நமக்கு சிறிது நேரம் தேவைப்படும்!!!! ஆம், ஷாகுல் தன்னுடைய வழக்கமான குரலமைப்பிலிருந்து விலகிப் பாடியிருக்கும் பாடல் இது!!!!!!!!
1995-ஆம் ஆண்டு தேவாவின் இசையில் வெளியான படம் “தமிழச்சி“!!! மிகவும் அருமையான ஒரு தத்துவ பாடலை இந்த படத்தில் பாடியிருப்பார் ஷாகுல் ” மனுஷன் நாக்கு ரெண்டும் பேசுமே” என ஆரம்பிக்கும் இந்த பாடலை இவருடன் இணைத்து பாடியிருப்பவர் மனோ!!!!
1997-ஆம் ஆண்டு வசந்த் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நேருக்கு நேர்” !!! இந்த படத்துக்கு இசை “தேனிசை தென்றல் தேவா“. முதலில் இந்த படத்திற்கு சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது அஜித்!!!!! படம் ஆரம்பித்து 3 வாரங்களில் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனைகளால் அஜித் இதிலிருந்து விலகிக்கொண்டார்!!
அதன் பின் பிரபு தேவாவை நடிக்கவைத்து இந்த படத்தை “மனசுக்குள் வரலாமா” என்ற பெயரில் எடுக்க ஆரம்பித்தார்!!! அதன் பின் பிரபுதேவாவாலும் இந்த படத்தை தொடர முடியவில்லை!!! கடைசி முயற்சியாக புதுமுகத்தை நடிக்கவைக்கலாம் என்று நினைத்து சூர்யா அவர்களை இதில் அறிமுகப்படுத்தினார்!!!
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாகி தேவாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன !!! இதில் ஹரிஹரன் அவர்களுடன் இணைத்து “அவள் வருவாளா” என்ற பாடலை பாடியிருப்பார் ஷாகுல்!!!! மிகவும் அருமையான இசைப் பதிப்பில் வெளிவந்த இந்தப்பாடலின் ஒரு சில வரிகளை மட்டுமே இவர் பாடியிருந்தாலும் அவரின் மனதை மயக்கும் குரல் நம்மை ஆச்சர்யப்படுத்த தயங்கவில்லை
“நிலவுக்கு பிறந்த நாளை வானம் கொண்டாடும்” என்ற அருமையான காதல் பாடலை தேவாவின் இசையில் சுஜாதாவுடன் இணைந்து “கிழக்கு மலை” என்ற படத்துக்காக பாடியிருப்பார்!!!! பாடலின் இசை வரிகளோடு கலக்காமல் ஷாகுல் அவர்களின் குரல் இனிமையை கவனிக்க வைக்கிறது!!!!
http://gaana.com/album/kizhakku-malai
அடுத்ததாக வித்யாசாகர் இசையில் இவர் “இளைய தளபதி” விஜயுடன் இணைந்து பாடிய ” பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி ” பாடல், கோயம்புத்தூர் மாப்ளே படத்துக்காக!!!!!
மன்சூர் அலி கான் நடித்த “வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு” (1997) படத்திலிருந்து “பொன்னம்மா போகுது போகுது உசுரம்ம்மா“!!!!! இந்த படத்திற்கு இசை A.K. வாசகன்!!!
http://play.raaga.com/tamil/song/album/Vettu-Onnu-Thundu-Rendu-T0003872/Ponnamma-413694
பிரதீப் ரவி அவர்களின் இசையில் மன்சூர் அலி கான் நடிப்பில் வெளியான படம் திருடா!!! இந்த படத்தில் இவர் பாடிய பாடல் “கொல்லி மலை தேனு”
http://play.raaga.com/tamil/song/album/Thiruda-T0003869/Kolli-Malai-Thenu-413676
1998– வெளிவந்த “பொன்மானை தேடி” என்ற படத்திற்காக “இது காதல் பாட்டு” மற்றும் “உறுமி மேளம் நாதஸ்வரம்” என இரண்டு பாடல்களை பாடியிருப்பார்!! இந்த பாடலின் இசைப்பதிப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!!! உங்களிடம் இருந்தார் ஷேர் செய்யவும்!!!!
அதே ஆண்டு இவர் குரலில் வெளிவந்த மற்றுமொரு பாடல் “காதலிச்ச ச பொண்ணு உன்ன கை விட்டுட்டா” சௌந்தர்யன் இசையில் “சேரன் சோழன் பாண்டியன்” படத்துக்காக!!
http://play.raaga.com/tamil/song/album/Cheran-Chozhan-Pandian-T0001015/Kadalicha-Ponnu-42442
1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஜீன்ஸ்“. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் ஷங்கர். மிகவும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் , நாசர் , லட்சுமி நடித்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் அப்பாஸ். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக்கொள்ள, அடுத்ததாக ஷங்கர் அணுகியது அஜித் குமார் அவர்களிடம் ஆனால் அவரும் கால்ஷீட் பிரச்சனையால் விலகிக்கொள்ள கடைசியாக பிரசாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . இந்த படத்திற்கு இசை ரஹ்மான். இதன் பாடல்கள் அனைத்தும் வெகுஜன மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து ரஹ்மான் அவர்களுக்கு Filmfare அவார்டை பெற்றுத்தந்தது!!!
ரஹ்மான் இசையில் ஷாகுல் பாடிய கடைசிப் பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றிருந்தது, ” வாராயோ தோழி வாராயோ தோழி“.
இடைவிடாத சினிமா பாடல்களுக்கு நடுவிலும் அவர் இஸ்லாமிய பக்திப் பாடல்களை பாட எப்போதும் தவறவில்லை!!!! இப்படி அவரின் மறைவிற்கு பின் வெளியான இசை தொகுப்பு தான் “திருமுறை தேனமுதன் “. இதனை ஷாகுலுடன் இணைந்து பாடி வெளியிட்டிருப்பவர் கண்மணி ராஜா !!!! வெளிவந்த ஆண்டு 2003, டிசம்பர்!!!
இறைவனுக்காக பாடிக்கொண்டிருந்த அந்த வற்றாத குரல் இறைவனிடமே போய் பாட முடிவுசெய்தது!!! ஆம், 1998-இல் சென்னை அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் பலியானார் ஷாகுல்!!!!
தமிழ் சினிமாவில் அவர் விட்டுச்சென்ற இடம் இன்னமும் காலியாகத்தான் இருக்கிறது!!!!ஒவ்வொருமுறை ராசாத்தி பாடலை கேட்கும்போதும் நீ ஒருவன் தான்யா என்று உரக்க சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது!!!
கவிஞர் கண்ணதாசன் அருமையாக ஒரு பாடலில் குறிப்பிடுவார் ,
நான் மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்…
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்….
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை……….
ஆம்!!!!! உனக்கு எந்தநிலையிலும் மரணமில்லை!!!!! உன் உடல் மறைந்து போனால் என்ன…, உன் குரல் தான் காற்றில் கரைந்துவிட்டதே !!! ஒவ்வொரு வீட்டின் வானொலிப்பெட்டியிலும், தொலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்வரை நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்!!!!
அருமையான பதிவு… நாண் கேட்காத சில பாடல்களும் இப்பதிவில் உள்ளது.. பாடலை குறிப்பிடுவதுடண் நின்று விடாமல் பாடல் பதிவுகளை தேடி சேகரித்து தந்ததற்கு நன்றி 😀 இப்பதிவினால் மீண்டும் ஷாகுல் பாடல்களை கேட்க வைத்து அவரை வாழவைத்த செந்தில் பிள்ளைகுட்டிகளுடன் நலமாக வாழ வாழ்த்துக்கள் 😃😃
Ponnamma song lyrics wrote by my brother VASAN. Thank you for the update.