நான் முன்பு வேலை செய்த அலுவுலகத்தில் வேலைப் பளு காரணமாக பல சமயங்களில் நைட் ஷிப்ட் பார்த்ததுண்டு!!!! அப்போதெல்லாம் யாரது மொபைலிலிருந்து பாடல்களை ஒலிக்க செய்வது வழக்கம்!!! அப்படி ஒருநாள் இரவு சுமார் 2 மணி வாக்கில் என் நண்பன் இந்த பாடலை ஒலிக்கச்செய்தான்!!!!

அந்த பாடலை இதற்குமுன் பலமுறை கேட்டுருக்கிறேன், ஆனால் இப்போது அது புதிதாக ஒலிக்கிறது!!! அந்த கோரஸும், இசையும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த குரல்!!!! இதுவரை நம் தமிழ் சினிமாவில் அதிகம் கேட்டறியா குரல்!!!

நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே இந்த வரிகள் பாடப்படும்போதே நான் அந்த பாடகரின் விசிறி ஆகிவிட்டேன்!!!

அதன் பின் அவரின் மற்ற பட பாடல்களை தேடினேன்!!! ஒவ்வொன்றும் என்னை ஏதாவது ஒருவகையில் ஆச்சர்யப்படுத்தின!!!! அந்த பாடகரை பற்றியும் தேடிப்பார்த்தேன்!!! ஆனால் கிடைத்த ஒரே விஷயம் அவர் இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்பது தான்!!!!

மறைந்து போனாலும்..மறக்க முடியாத பாடல்களை நமக்கு கொடுத்த அந்த மாபெரும் கலைஞனின் பாடல்களை அறியச் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்!!!!!

ஷாகுல் ஹமீது – இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள்…

222529_210190109001794_3445094_n

1980 மற்றும் 1990-களில் கோலோச்சிய இசையமைப்பாளரான இளையராஜா அவர்களின் இசையில் SPB, மனோ போன்றோர்கள் முதல் வரிசை பாடகர்களாகவும் அவர்களை தவிர்த்துப் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் அடுத்த வரிசை பாடகர்களாகவும் இருந்தனர்!!!!!!!

1992-ல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகத்திற்கு பின் தான் தமிழ் இசைக்கு பல புதுக் குரல்கள் கிடைத்தன. அலைகடலென ஏகப்பட்ட பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். ஹரிஹரன், சங்கர் மகாதேவன், திப்பு, சின்மயி, ஹரிணி, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ்,உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன்,அனுபமா,நித்யஸ்ரீ, மின்மினி என அவரால் அடையாளம் காட்டப்பட்ட குரல்கள் ஏராளம். இவர்களின் வரவால் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு புது முகம் கிடைத்தது, புது இளமை கிடைத்தது, புதிய வடிவம் கிடைத்தது. இவர்களினுடே  ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட மேலும் ஒருவர் தான் ஷாகுல்  ஹமீது . இவர் ரஹ்மானின் நெருங்கிய நண்பரும் கூட!!!!

1980 களின் ஆரம்பத்தில் ஷாகுல்  ஹமீது தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  இசைத்தென்றல் என்ற பாடல் நிகழ்ச்சியில் பங்குகொண்டிருந்தார். அங்கே அவர் 30-ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தார் !!! அப்போதுதான் 1982-ல் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் ரஹ்மானின் அறிமுகம் கிடைத்தது!!!!

அந்த நாட்களில் ரஹ்மான் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பர படங்களுக்கு உண்டான இசையை வழங்கி கொண்டிருந்தார்!!!! காலங்கள் நகர்ந்தன கூடவே  அவர்களது நட்பும் வளர்ந்தது!!!! இவ்வாறிருக்கையில் இவர்கள் இருவரும் இணைந்து 1989-ஆம் ஆண்டு ” தீன் இசைமாலை ” எனும் இஸ்லாமிய பக்தி பாடல் தொகுப்பை வெளியிட்டனர்!!!! அப்போது ரஹ்மான், திலீப் குமார் என்ற தன் இயற்பெயரில் இசை அமைத்துக்கொண்டிருந்தார்!!!

deen-isaimaali

அந்த ஆல்பத்தில் “எல்லா புகழும் இறைவனுக்கே“, “எங்கள் அப்துல்“, “நாகூர் ஷாகுல் ஹமீது” , “அற்புதம் ஓங்கும்”, “இறையோரின் இறை  பெற்ற”, “எண்திசை உள்ளோரும்” மற்றும் “நபி  நாதரின்” என பல பாடல்களை பாடியிருந்தார் ஷாகுல்!!! மற்ற பாடல்களை மனோ, சுஜாதா ஆகியோர் பாடியிருந்தார்கள்!!!!

தீன் இசைமாலை” தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும்  யூ-டியூபில் சேர்க்கப்பட்டுள்ளது!!! அதன் லிங்க்:

1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ காஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பர் ராஜீவ் மேனன் ஆவார். ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார். இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.

1992-ல் ரஹ்மானின் இசை வாழ்கை மணிரத்னம் மூலமாக ரோஜா படத்துடன் ஆரம்பமானது!!! இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடித்து அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தாலும்  அவருக்கு ஷாகுல் ஹமீதை தனது முதல் படத்தில் உபயோகித்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. அதற்கு பிராயச்சித்தமாக தனது இசையில் அடுத்து வரும் அனைத்துப்படங்களிலும் அவரது குரலை பயன்படுத்திக்கொண்டார்!!!

1993-ல் ரஹ்மானின் இசையில் 5 படங்கள் வெளிவந்தன, “புதிய முகம்“, “ஜென்டில்  மேன்“, “கிழக்கு சீமையிலே“, “உழவன்“, “திருடா திருடா” !!!! இதில் புதிய முகம் தவிர்த்து வந்த அனைத்து படங்களிலும் ஷாகுல் ஹமீதின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன!!!

1993, ஜூலை 30-ல் ஜென்டில் மேன் படம் வெளியாகி இயக்குனர் ஷங்கரை திரையுலகம் கொண்டாடியது !!! அவருடனே உதயமானது ஷாகுல் அவர்களின் திரைப்பயணம், “உசிலம்பட்டி பெண் குட்டி” பாடல் மூலமாக!!!

இந்தப்பாடலை ஷாகுலுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா!!!!!! இப்பாடலில் வழக்கத்துக்கு மாறாக ஆண்குரலில் மேல்ஸ்தாயி வரிகளையும் பெண்குரலில் கீழ்ஸ்தாயி வரிகளையும் பாடுமாறு அமைத்திருந்தார். இது அழகான பாடலாக அமைந்தது மட்டுமில்லாமல் ஷாகுலின் வருகையை இசையுலகுக்கு உரக்க சொல்லியது!!!!

1993 தீபாவளியன்று (நவம்பர் 13) ரஹ்மான் இசையில் 3 படங்கள் வெளியாயின!!! 3-லும் ஷாகுலின் பாடல் இடம்பெற்றிருந்தது!!! சொல்லிவைத்தாற்போல் அம்மூன்றுமே கிராமியப்பாடல்கள்!!!

இயக்குநர் கதிர் – ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில் வந்த படங்கள் வசூலில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், அந்தப் படங்களின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருவரும் முதலில் இணைந்த படம் உழவன். இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால் ரஹ்மானின் அலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன!!!

இந்த படத்தில் “மாரி மழை பெய்யாதோ” என்ற பாடலை பாடியிருப்பார் ஷாகுல்!!! இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி!!! (இதில் G.V பிரகாஷ் கூட சின்ன பிட் பாடியிருப்பார்)

தன் கிழக்குச் சீமையிலே படத்திற்காக ரஹ்மானுடன் இணைந்தார் பாரதிராஜா!!! மேற்கத்திய இசையில் முத்திரை பதித்தவர் ரஹ்மான் ஆனால் பாரதிராஜாவோ கிராமத்து இசையை வேண்டி நிப்பவர்!!!! இதனாலயே இவர்கள் இணைந்த போது கிழக்கும் மேற்கும் சந்திக்காது என்ற ரீதியில் இகழ்ந்து பேசப்பட்டது. ஆனால் படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது பலர் ரஹ்மானிடம் இப்படிப்பட்ட கிராமத்து இசை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை!!!! கிராமிய இசையையும் தன்னால் மண்மணம் மாறாமல் இசையமைக்க முடியும் என்று இப்படம் முலம் நிரூபித்தார் ரஹ்மான்!!!

இப்படத்தில் ஷாகுல் ஹமீது, வைரமுத்து அவர்களின் வரிகளில் உருவான “எதுக்கு பொண்டாட்டி” என்ற பாடலை பாடியிருந்தார்!!!! நாட்டுப்புற பாடல் வரிகள் மற்றும் கிராமிய டப்பாங்குத்து இசையுடன் வெளிவந்த இந்த பாடலும் வெற்றி பாடலே!!!!

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்ப் போல வெளியானது இவரது அடுத்த பாடல்!! பட்டி தொட்டியெல்லாம் இன்றுவரை நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது!!! அது திருடா திருடா என்ற படத்திற்காக ரஹ்மானின் இசையில் உருவான ” ராசாத்தி என் உசுரு” என்ற பாடல்!!!!

இந்தப் பாடலை a cappella எனப்படும் இசை முறையில் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார்!!! (a cappella என்பது மிகக் குறைந்த அளவில் இசை அல்லது வாத்திய இசையே இல்லாமல் வெறும் மனித குரல்களை மட்டும் கொண்டே இசைப் பதிவு!!!) ரஹ்மானால் கூட இனிமேல் இப்படி பட்ட பாடலை இசையமைக்க முடியாது என் கருத்து!!!!!! மின்சார கனவு படத்தின் “அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே” பாடலும் இதைப் போன்றதொரு வடிவம்தான் ஆனால் ராசாத்தி பாடல் போல் அது பிரபலமாகவில்லை!!!

ஒருமுறை இந்த பாடலை கேட்டு விட்டு ” இந்த பாடல் எனக்கல்லவா எழுதபட்டிருக்க வேண்டும்” என வைரமுத்துவிடம் செல்ல சண்டை போட்டாராம் பாரதி ராஜா!!!!

இசைக்கருவிகளின் ஆதிக்கமே இல்லாமல் வரும் ஷாகுலின் குரலும் அதன் பின் வரும் மின்மினியின் கோரஸும் நம்மை வேறொரு உலகத்துக்கே எடுத்து செல்லும்!!!!! இரவின் அமைதியில் கேட்டுப்பாருங்கள்!!!!

இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான “சிட்டாலு” வையும் ஷாகுலே பாடியிருப்பார்!!!!

https://www.youtube.com/watch?v=hUEGZwSw3nk

ஷாகுலின் குரல் இனிமையை ரஹ்மான் மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்த வருடங்களில் பயன்படுத்திக்கொண்டார்கள்!!! அடுத்த பதிவில் இவைகளை பற்றி கூறுகிறேன்.

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

One Comment on “இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *