Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
இசைப்பிரியர்களுக்கு இந்த வாரம் மிகவும் கொண்டாட்டமானது எனலாம்!!!! சந்தோஷ் நாராயணின் 25 -ஆவது இசைப்பதிப்பான “வட சென்னை“, லிங்குசாமி-யுவனின் “சண்டக்கோழி 2” மற்றும் தற்போது வெளிவந்துள்ள இளையதளபதி விஜய் அவர்களின் “சர்க்கார்” படப்பாடலான “சிம்டாங்காரன்” என வரிசை கட்டி வந்த இந்தப்பாடல்கள் இசை ரசிகர்களை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்!!!
இதில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது விஜய் அவர்களின் “சர்க்கார்” பாடலுக்குத்தான்!! 5-மணிக்கு SUN NXT -ல் ரிலீஸ், ஒரு மணி நேரத்திற்குப் பின் YOU TUBE -ல் ரிலீஸ், அதுமட்டுமில்லாமல் பாடல் வெளியீட்டிற்கு முன்னாடியே “ட்விட்டரில்” Hype என SUN NETWORK மிகப்பிரமதமாக விளம்பரப்படுத்தியிருந்தனர்!!!
சரி வாங்க பாடலை பற்றி பேசுவோம்,
இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையில், விவேக் வரிகளில் இப்பாடலை பாடியிருப்பவர்கள் “BAMBA” பாக்யா, விபின் சுனேஜா, மற்றும் அபர்ணா நாராயணன்!!!
ரஹ்மான்-விவேக்-விஜய் கூட்டணியில் வெளியான முந்தைய பாடலான “ஆளப்போறான் தமிழனின்” வெற்றி கூட இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியது எனலாம்!!!!!
“சிம்டாங்காரன்” என பெயரிடப்பட்ட இந்தப்பாடலை பற்றிய அறிவிப்பு வந்தவுடனே அனைவருக்கும் தோன்றிய முதல் கேள்வி ” சிம்டாங்காரன்” என்றால் என்ன என்பது தான்!!! பலரும், இணையத்தில் தேடிப்பார்த்து கிடைக்காமல், பாடல் எழுதிய விவேக் அவர்களிடமே கேட்க, அவரோ பாடல் வெளியான பின் சொல்கிறேன் என மழுப்பி வந்தார்.
சொன்னபடியே, பாடல் வெளியான பின் இதன் அர்த்தத்தை தன ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்!!!
“பல்ட்டி பாக்குற……
டர்ல வுடனும் பல்த்து!!!
வோர்ல்டு மொத்தமும்….
அரள வுடனும் பிஸ்த்து!!!”
எனத்தொடங்கும் இப்பாடலின் முக்கால்வாசி வரிகள் சென்னை தமிழில் எழுதப்பட்டிருக்கிறது!!
தர லோக்கல் என விளம்பரப்படுத்தப்பட்டவுடன் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது “ஆலுமா டோலுமா” போன்ற பாடலைத்தான்!!! ஆனால் ரஹ்மான் இசையில் முன்னமே வெளிவந்த சென்னை கானாப் பாடல்களான”பேட்ட ராப்” மற்றும் “மெர்சலாயிட்டேன்” கேட்டவர்கள் இவ்வாறு எதிர்பார்த்தது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது.
ஆம், என்னதான் தர லோக்கல் குத்துப் பாடல் என சொன்னாலும் ரஹ்மான் தன் பரீட்சாத்த முயற்சியை அந்தந்த பாடல்களில் புகுத்தியிருப்பார்!! அது இந்த பாடலிலும் தொடர்கிறது!
மிகவும் மெதுவான இசையில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் “FOLK” “மெலடி என மாறி மாறி பயணிக்கிறது!!! அதேபோல் , இந்தப்பாடல் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” பாடலை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை!!!!
“இளைய தளபதி” விஜய் அவர்களது படத்தின் துள்ளல் இசைப்பாடல் இவ்வளவு மெதுவாக நகர்ந்தால் எப்படி??, என்பதே பலருக்கும் தோன்றிய ஒருமித்த கருத்து!!!
பாடலின் தொடக்கம் அவ்வாறு இருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் “அபர்ணா நாராயணனின் ” “மன்னா நீ வா” வரிகளுக்குப் பிறகு சரியாக 2 :30 தொடங்கும் ஒருவிதமான துள்ளல் இசை 3:20 வரை தொடர்கிறது!!! இது விஜய அவர்களின் நடன அசைவிற்கு சரியாக தீனி போடும் அளவிற்கு ஓங்கி ஒலிக்கிறது என்பது என் கருத்து !!!!
அடுத்ததாக இந்தப்பாடலில் எனக்கு பிடித்தது இதைப்பாடியவர்களின் புதிதாய் ஒலித்த குரல்!!!
“BAMBA” பாக்யா ,
பலருக்கும் பரிச்சயமில்லா பெயர், இப்பாடலுக்கு முன்!! ஆனால், இப்பொழுது இணையம் முழுதும் பரவிக்கிடக்கிறது இவரது பேட்டி!!!
இந்தப் பெயரை கேட்டதும் பலருக்கு தோணுவது இவர் வட மொழி பாடகரோ, இல்லை வெளி நாட்டு வாழ் பாடகரோ என்பது தான்!!! ஆனால் இவர் ஒரு தமிழர்!!! பின் என்ன “BAMBA” பாக்யா ????
ரஹ்மானின் கார் ஓட்டுனரின் கல்யாணத்தில் பாடியபோது இவரது குரல் இசைப்புயலுக்கு பிடித்துப்போக தனது ராவணன் படத்தில் முதல் பாடலை வழங்கினார் !!! “கெடா…கெடா…கறி அடுப்பில கெடக்கு” பாடல், அதில் இவர் பெயர் “பாக்யராஜ்” என அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் !!
சூப்பர் ஸ்டாரின் 2 .௦-ல் இன்னமும் வெளியிடப்படாத பாடல் ஒன்று உள்ளது!!! “புள்ளினங்கால்” என தொடங்கும் இப்பாடலை பாடியதும் இவர் தான்!!! பாடல் பதிவின் போது, ரஹ்மான், சௌத் ஆப்பிரிக்கா சுஃபி பாடகர் “BAMBA” அவர்களின் குரலமைப்பில் வேண்டுமென கேட்க இவரும் அதே மாதிரி பாடி அசத்தினாராம்!!! இவரது குரல் பிடித்துப் போக, அந்தப் பாடகரின் பெயரையே இவரின் புனைப்பெயராக ரஹ்மான் இணைத்து விட்டார், அதுவே “BAMBA” பாக்யா .
ரஹ்மானின் இசை உதவியாளராக இருந்த சந்தோஷ் தயாநிதி “MADRAS 7-up Gig”-ல் INDEPENDENT ஆல்பமாக ஒரு பாடலை இசையமைத்திருந்தார்!!! அந்தப் பாடலை பாடியிருப்பவர் சாட்சாத் “BAMBA” பாக்யா தான்!!
“அடிஎதுக்கு உன்ன பார்த்தேன்னு” தொடங்கும் இப்பாடல் செம மெலடி!!! ஒருமுறை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு புடிக்கும்!!!
அடுத்ததாக இந்தப்பாடலில் ஒலிக்கும் பெண் குரலாக, “அபர்ணா நாராயணன்”!! ரஹ்மான் அவர்களின் KM இசைக்க கல்லூரியில் பயின்று வரும் இவரது முதல் பாடல் “தள்ளிபோகாதே!!!” இப்போது வெளிவர இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்!! அது ஸ்வேதா மேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் அவர்களோடு சேர்ந்து ஒலித்திருக்கும்!!!
இவருக்கென்று இருக்கும் பிரத்யேகமான YOU TUBE சேனலில் பல பாடல் பாடியிருக்கிறார்!! அதில் எனக்கு பிடித்த பாடல் “”கண்ணன் வந்து பாடுகிறான்”.
இறுதியாக, இந்தப்பாடல் பற்றிய எனது அபிப்ராயம் யாதெனில்,
நம்மில் பல பேருக்கு “LONG DRIVE ” செல்லும்போது காரிலோ இல்லை HEAD PHONE-லோ பாடலை உரக்க ஒலிக்க விட்டு அதனூடே பாடிச்செல்வது பிடித்தமான விஷயம்!!! ஆனால் இந்தப் பாடலின் வரிகள் சற்று கடினமாக இருப்பதால், மனதில் அவ்வளவு சீக்கிரம் பதிய மறுக்கிறது !!!!
இரண்டு நாட்களாக காரில் இப்பாடல் விடாமல் ஒலிக்கிறது, பார்ப்போம், இன்னும் எத்தனை நாள் ஆகுமென, நானும் சேர்ந்து மூணு முணுக்க!!!
கடைசியாக, சிம்டாங்காரன் என்பதற்கு மட்டும் என்ன அர்த்தமென்று சொன்ன விவேக், மத்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை சொல்ல மறந்து விட்டார் போலும்!!!
பல இணையங்களில் தேடி அஎனக்கு தெரிந்த அளவு இதன் அர்த்தங்களை தெளித்திருக்கிறேன்!!
தவறிருந்தால் சொல்லவும், மாற்றிக்கொள்கிறேன்
பல்டி பாக்குற….
டர்ல வுடனும் பல்த்து!!!!
வோர்ல்டு மொத்தமும்….
அரள வுடனும் பிஸ்த்து!!!
“பல்த்து “ என்பதின் அர்த்தம் “ஏரியால வெயிட்டுப் பார்ட்டி” அல்லது “பெரிய கை” .
உலகம் மொத்தத்தையும் அலற உடனும் பிஸ்தா மாதிரி!! (பிஸ்த்து – “எல்லாம் தெரிந்த ஆள்”)
பிசுறு கெளப்பி..
பெர்ள வுடனும் பல்த்து!!!!
ஆண் :
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா…
ஓ…. தொட்டனா தூக்கலுமா…
மக்கரு குக்கருமா…..
போய் தரைல உக்கருமா!!!!!
ஆண் :
சிம்டாங்காரன்!!
எங்கனா நீ சீரன்…..
நிண்டேன் பாரேன்….
முஷ்டு-அப்டிகா போறேன்!!!!
ஓ..ஓ..ஓ..ஓ (4)
#“சிம்டாங்காரன்” இதன் அர்த்தம் முன்னமே சொல்லியாச்சு!!!
“சீரன்” சிறப்புடையவன்
“முஷ்டு-அப்டிகா போறேன்”முடிச்சுட்டு அப்பிடிக்கா போறேன்.
ஆண் :
சிம்டாங்காரன்!!!
சில்பினுக்கா போறேன்….
பக்கில போடேன்!!!!
விருந்து வைக்கபோறேன்!!!!
ஓ..ஓ..ஓ..ஓ (4)
ஆண் :
அந்தரு பண்ணிகினா தா…..
இந்தா நா… தா ….
ஓ..ஓ..ஓ..ஓ (4)
பெண் :
மன்னவா நீ வா வா வா!!!!
முத்தங்களை நீ தா தா தா!!!!!
பொழிந்தது நிலவோ!!!!!
மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….
பெண் :
ஹா ஹா ஹா ஹா ஹா..(4)
ஆண் :
குபீலு பிஸ்து பல்து
குழு :
விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஆண் :
ஓ ஓ ஓ ஓ ஓ….
ஆண் :
கொக்கலங்க… கொக்கலங்க!!!!
கொக்கலங்க குபீலு!!!!
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா…
டம்மாலு!!!!
நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல….
அல்லா ஜோரும் பேட்டைல…..
சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு..
ஆண் :
பிசுறு கெளப்பு..
கொக்கலங்க… கொக்கலங்க…
கொக்கலங்க குத்த போடு!!!!!!