போனவருடம் (2016) வெளியான ஹாலிவுட் படங்களில் அதிகமாக வசூல் செய்த 10 படங்களை கணக்கில் கொண்டால் அதில் முக்கால்வாசியை ஆட்கொள்வது DC மற்றும் மார்வெல் காமிக்ஸின்  படங்களே!!!! போன வருடம் மார்வெல்லின் கேப்டன்  அமெரிக்கா, DR.STRANGE, DEAD POOL  மற்றும் X-மென் அப்போகலிப்ஸ் படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டன!!! அதே போல் DC-யின் சூப்பர்மேன் Vs பேட்மேன் மற்றும் SUCIDE SQUAD படங்கள் வெளியாகி விமர்சர்களால் கிழித்து தொங்கவிடப்பட்டாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை!!!

இந்த வருடமும் வோல்வரின் சீரிஸின்  கடைசிப்  படமான  லோகன், GUARDIAN OF  GALAXY  படத்தின் இரண்டாம் பாகம், தோர் படத்தின் மூன்றாவது பாகம், ஸ்பைடர் மேனின் REBOOT என மார்வெல் வரிசை கட்டி ரிலீசிற்கு தயாராகி நிற்கிறது!!!! இதில் ஏற்கனவே லோகன் ரிலீஸ் ஆகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!!!! இதற்கு DC-யும் சளைத்ததில்லை என்பதுபோல் வொண்டர் வுமன், LEGO BATMAN MOVIE மற்றும் DC சூப்பர் ஹீரோக்களின் அசெம்பெல் படமான ஜஸ்டிஸ் லீக் என வரிசையில் நிற்கின்றன !!!

இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பது பவர் ரேஞ்சர்ஸ்!!! இதுவும் ஹிட்டடிக்கும் என்பதை  சொல்லித் தெரியவேண்டியதில்லை !!!

இந்தப்பதிவு இவ்வருடம் வெளியாகப்போகிற படங்களை பற்றிய ஆய்வோ!!! அலசலோ இல்லை!!!!

அப்டினா!!! இது எதைப்பத்தினதுனு தான யோசிக்கிறீங்க!!!! நாம…மார்வெல்லோட அவென்ஜ்ர்ஸ் படம் பார்க்கும்போது ஏகப்பட்ட சூப்பர் ஹீரோஸ  பார்த்திருப்பீங்க!!!! ஆனா என்ன போல சிலபேருக்கு இவன்  யாரு, எதுக்குடா இங்க வந்தான், இவனுக்கு என்ன பவர் இருக்கு, எப்படி சூப்பர் ஹீரோ ஆனானு நெறைய கேள்வி வரும்!!! அதற்கான பதிலை ஒரு தொடராக எழுத நினைத்தால் என்ன என்று யோசித்தேன்!!! இதோ இப்ப இந்த சூப்பர் ஹிரோஸின் தொகுப்போட வந்திருக்கிறேன்!!!!

மார்வெல்லின் காமிக்ஸ் ஹீரோக்களை பார்ப்பதற்கு முன் நாம் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டியவர் “ஸ்டான் லீ“. 94-வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவரால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் கதாபாத்திரங்கள் எழுதி மாளாது!!!! ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு”IRON MAN, ஸ்பைடர் மேன், ANT MAN, Dr.STRANGE, ஹல்க், தோர், X.MEN, FANTASIC FOUR….

இவ்வளவு ஏன்,… உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்ட “அவென்ஜர்ஸ்” சீரிஸினை உருவாக்கியவர் இவரே!!!! மார்வெல் படத் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு மரியாதையை செய்யும் பொருட்டு எல்லா சூப்பர் ஹீரோ படத்திலும் இவரை தலைகாட்ட வைத்திருக்கும்!!!!!

இவரை பற்றிய இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன் !!!!!

இந்த தொடரின் முதல் அத்தியாயமாக நாம் பார்க்கப்போவது “அவென்ஜர்ஸ்” சீரிஸின் முக்கிய ஆளான “நிக் பியூரி“யை பற்றி!!!! அவெஞ்சர் படத்துல மொட்டை தலையோட ஒரு கண்ணா மட்டும் மறச்சுட்டு ஒருத்தர் இருப்பாரே அவர் தான் நம் முதல் பகுதியின் ஹீரோ!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

One Comment on “காமிக்ஸ் உலகம் – தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *