Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
வெள்ளிக்கிழமையிலிருந்தே மனைவியின் நச்சரிச்சல், சிலுக்குவார்பட்டி படம் “netflix” -இல் வந்திருக்கு படத்த பார்த்தே ஆகணும்னு!!! இந்த படம் ரிலீஸ் ஆகித்தான் 6 மாசம் ஆச்சே, இப்பதான் “Netflix”-ல ரிலீஸ் பண்ணிருக்கான்னான்னு என்னை நானே கேட்டுகிட்டு (Opposite -ல கேட்கமுடியுமா) சரின்னு சொல்லிட்டேன்!! சனிக்கிழமை மதியமே படத்த பார்க்கிறதுக்கு ரெடியாகி டிவி முன்னாடி உக்காந்தோம்!! 10 -நிமிஷம் படத்த தேடி..கண்டுபுடிக்கமுடியாம, இதிலே வந்திருச்சுனு சொன்ன அவ நண்பனுக்கு போன் பண்ணுனா, அவனுக்கென்ன கஷ்டமோ போன் எடுக்கல!!
பாவம்!! அவன் குடும்பமே இவகிட்ட அரை மணி நேரம் திட்டுவாங்குச்சு!!
சரி, நாமளாவது ஹெல்ப் பண்ணுவோம்னு, அமைதியா அவகிட்ட போய்.. இந்தப்படம் “Tentkotta”-ல இருக்குமா…னு சொன்னேன்!! இத சொல்ல அரைமணி நேரம் ஆச்சான்னு திட்டு வாங்கி படத்த போட்டேன்!!! அதுக்கப்றமாவது திட்டமாட்டானு நெனச்சா, டிவி ரிமோட் பறந்து போய் பக்கத்திலிருந்த சோபால விழுந்தது!!!
நான் என்ன படத்த கேட்டேன்.. நீ எதை போட்ருக்கன்னு திட்ட அரம்பிச்சா!!
நீதானே போடச்சொன்னேனு சொன்னா, அதுக்கும் திட்றா!!! என்னடா இது வம்பா போச்சுன்னு பார்த்தா..நம்மள காப்பாத்துருதுக்குன்னே அவ பிரெண்ட் கூப்ட்டு சொன்னான்,
அது சிலுக்குவார்பட்டி இல்ல சில்லுக்கருப்பட்டினு!!!!
அடங்கொய்யாலன்னு!! எனக்குள் நானே கத்திக்கொண்டு அமைதியா உக்காந்துட்டேன்!!
ஒருவழியா ஒரு மணி நேரம் போராட்டத்துக்கப்புறம் படம் பார்க்க ஆரம்பிச்சோம்,
முதலில் வந்த #pinkbag ரம்மியமாக சென்றது!! அந்த கதையில் தெரிந்த இன்னொசென்ஸ் மற்றும் அதன் பின்னணி இசை செம்ம..செம்ம…!!அடுத்து வந்த #காக்கா கடி கொஞ்சம் பொறுமையாக…பொறுமையாக …சென்றது!!
அடுத்து வந்த turtles, முதல் மரியாதை காதல்!!! அது காதலை மட்டும் சொல்லிச்செல்லாமல் ஒருவித கேள்வியை என்னுள் எழுப்பிச்சென்றது!!!
இதையெல்லாத்திற்கும் மகுடம் வைத்தால் போல் வந்தது #HEYAMMU!! இந்தக்கதையை எங்கேயோ கேட்டது மாதிரி, பார்த்தது மாதிரி இருக்குதேன்னு பார்த்தா, அட நம்ம கதை (அப்டின்னா என்னைப்போல கல்யாணமானவங்க கதை)!
இங்கே US -ல் அதிகம் use பண்ணுற alexa-வை சுற்றி பின்னப்பட்ட கதை செம சுவாரஸ்யமா, ஜாலியா இருந்தது!!-
Halitha Shameem, ஒவ்வொரு கதையையும் சொன்னவிதம் மற்றும் அதன் பின்னணி இசை ரொம்ப அருமையா இருந்துச்சு !!
அவங்களோட அடுத்த படமான #ஏலே-விற்க்கு Waiting !!!
குறிப்பு : நடந்த தப்பு அனைத்தும் என் மனைவி மேல் இருந்தும், கடைசிவரை SORRY சொல்லவே இல்லை!!! #ஆண்பாவம்
அடுத்த படத்தலைப்பை எளிமையாக வைத்ததற்கு நன்றி!! நன்றி!! நன்றி!!