Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
எத்தனை ஆங்கிலப்படங்கள் பார்த்தாலும், எத்தனை கொரியன் படங்கள் பார்த்தாலும் நம்மை நெகிழ்வடையவும், கண்ணீர் சிந்தவும் வைப்பது நம் தாய் மொழிப்படங்களே!!!!! அந்த வகையில் இந்தவாரம் என்னை மிகவும் பாதித்த படம் தான் “ஜோக்கர்“!!!!
படத்தில்… பதவிக்காக சண்டைபோடும் போட்டிபோடும் கட்சிகள் இல்லை, ஆளும் கட்சி, எதிர் கட்சி மோதல்கள் இல்லை, அதிகாரத்திற்காக எம்.எல்.ஏக்கள் போடும் ரகசிய திட்டங்கள் ஏதும் இல்லை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி வெற்றிகாணும் சூப்பர் நாயகன் இல்லை, ஆனால் படம் முழுவதும் வசனத்திற்கு வசனம் அரசியல் பேசுகிறது, அதுவும் ஒரு சாதாரண அடித்தட்டு மக்களின் குரலாக!!!!
‘டிராஃபிக்’ராமசாமி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போன்றோரின் போராட்டங்களை எவ்வவு நாள் வெறும் செய்திகளாக கடந்திருப்போம், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களின் கைதை ஒருவாரம் பேசி இருப்போம் அதன் பின் அவரென்ன ஆனார் என்பதை ஊடகமும் கண்டுகொள்ளவில்லை நாமும் தேடிப்பார்க்கவில்லை!!! இப்படி…. எல்லாம் வணிகமயமாகிப் போன நாட்டில் எந்த தவறையும் தட்டிக்கேட்கவும் மாட்டோம் அப்படி கேட்பவர்களையும் ஜோக்கர்னு சொல்லுவோம்!! இந்த உண்மையை முகத்தில் அடித்தால்போல் உரக்க சொல்லிருக்கும் படம்தான் ஜோக்கர்!!!!!
திரைக்கதை:
தருமபுரி மாவட்டத்திலிருக்கும் பாப்பரப்பட்டி என்ற கிராமத்தில் வசிப்பவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). கழிவறை இருந்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கண்டிஷன் போடும் மல்லிகாவுக்காக (ரம்யா பாண்டியன்) அரசாங்கம் அறிவிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார். ஆனால் எப்போதும் போல இதிலும் ஊழல் விளையாட அவருக்கு மிஞ்சியதோ பீங்கான் கோப்பை மட்டுமே!!! பிரதமர் வருகிறார் என்று அரைகுறையாக எழுப்பப்படும் கழிவறையால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிறது!!! பெட்டி கேஸ் பொன்னூஞ்சலின் (மூ.ராமசாமி) உதவியோடு நீதிமன்றத்தினை நாடுகிறார் மன்னர் மன்னன் ஆனால் அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் மட்டுமே!!!!
இந்த பிரச்சனையால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னை இந்தியாவின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு கிராம மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபடுகிறார். இதற்கிடையே தன் மனைவிக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார்.
ஊழலுக்கு எதிராக போராடும் இவர்களது போராட்டங்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு மாற்றங்களை உண்டாக்குகின்றன, எதற்காக மன்னர் மன்னன் தன் மனைவிக்காக உச்ச நீதி மன்றம் வரை செல்கிறார் அங்கு அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதை படத்தில் காண்க !!!
மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம்:
10 வருட காலமாக கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி கற்ற இவர் இதற்குமுன் 10-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்!!!! இன்றுவரை பதிவுலக நண்பர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம் படத்தில் காளையனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர்!! அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டாவிலும் காமெடி கலந்த இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது (பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக்கொடுப்பாரே).
இதுதான் இவருக்கு நாயகனாக முதல் படம்!!!! அதுவும் இருவகையான பாத்திரப்படைப்பு!!!! முதல் பாதி முழுவதும் தன்னை மக்களின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு இவர் பண்ணும் அளப்பறைகளும் இரண்டாம் பகுதியில் மனைவியுடனான இவரது இயல்பான வாழ்க்கையும் காதலும் என படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்!!!
குறிப்பாக, தன் வீடு தேடி வந்திருக்கும் மல்லிகாவிடம் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்பார், அதற்கு அவள் ம்..ம்.. பண்ணிக்கலாம். பண்ணிக்கலாம்…நீ வந்து பக்கத்துல உக்காரு என்பாள்.. நான் கட்டிலிலோ அல்லது நாற்காலியிலோ உக்காருவார் என்று தான் நினைத்தேன்.. ஆனால் இவர் உக்காந்ததோ அவளது காலடியில்!!!! இந்த காட்சியொன்றே போதும் இந்த படத்தின் இயல்பையும் இவரது நடிப்புத் திறமையை கூற!!!!!!!!
“பெட்டிகேஸ்” பொன்னூஞ்சலாக ராமசாமி (மூ.ரா) :
தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற இவரும் நாடகக் கலைஞரே!!! இவர் நந்தா, பிதாமகன், பருத்தி வீரன், சண்ட கோழி என பல படங்களில் நடித்துள்ளார்!!! சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இது தான் முதல் பேர் சொல்லும் படம்!!! அதுவும் முழுநேரமும் கதாநாயகனோடு சுற்றும் சமூக ஆர்வலர் வேடம்!!!!
என்னைப் பொறுத்த வரையில் படத்தின் கதாநாயகன் இவரே!!!! ஏனெனில், மன்னர் மன்னனுக்கும், இசைக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட காரணங்கள் இருந்தது. ஆனால் இவர் மட்டுமே எந்த வித காரணங்களோ பலனோ இல்லாமல் முழு நேரமும் சமூக அவலங்களை எதிர்த்து கோர்ட் வாசலில் பெட்டிகேஸ் போட்டு நீதிக்காக காத்துக்கிடக்கிறார்!!!! படத்தின் இறுதியில் இவர் பேசும் வசனமே இதற்கு சான்று!!!
இவரது கதாபாத்திரம் ‘டிராஃபிக் ராமசாமி அவர்களின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்துகின்றன!!!
இதர நடிகர்கள்:
மன்னர் மன்னன் மற்றும் பொன்னூஞ்சலின் போராட்டங்களை சமூக வலைத்தளங்களுக்கு எடுத்துச்செல்லும், கிராமத்து பெண்ணாக இசை (காயத்ரி கிருஷ்ணா) மதுவால் கணவனை இழந்தவர், அடுத்ததாக மன்னர் மன்னனின் மனைவியாக வரும் மல்லிகா (ரம்யா பாண்டியன்)!!! இவர்கள் இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். இவர்களது உடையும், ஒப்பனையும் கிராமத்து பெண்ணாகவே மாற்றிவிடுகிறது!!!!!!
மண்டைக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிடுச்சு.. இம்மீடியட்டா சரக்கடிச்சே ஆகணும் பையா-னு சொல்ற பவா செல்லத்துரை!!! இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட பிரபல பதிவர் இவர். இதில் மன்னர் மன்னனுடன் வேலை செய்யும் கதா பாத்திரத்தில் வருகிறார். சிறிது நேரமே வந்தாலும் இவர்கள் இருவருக்கும் உண்டான உரையாடல்களே படத்தின் ஓட்டத்தை தீர்மானிக்கின்றன!!!
ஷான் ரோல்டனின் இசை:
குக்கூ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தின் பாடல்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு!!!! குக்கூவில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்த ராஜு முருகன் இந்த படத்தில் ஷான் ரோல்டனுடன் இணைந்திருக்கிறார்!! குக்கூ படத்தின் போதே தனது அடுத்த படத்திற்கு இசை ஷான் தான் என முடிவு செய்துவிட்டார் இயக்குனர்!!!! அதன் காரணம் இப்பட பாடல்களை கேட்க்கும்போது தெரிகிறது!!!!
ராகவேந்திரா என்னும் தன் இயற்ப்பெயரை சினிமாவுக்காக ஷான் ரோல்டன் என்று மாற்றிக் கொண்டார். இவரது முதல் படமான “வாயை மூடிப் பேசவும்” இருந்து இதுவரை வித்யாசமான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்!!!
ஆனால் எனக்கு ஏனோ இவர் இசையமைத்த பாடல்களை விட இவர் பாடிய பாடல்கள் மீது தான் ஈர்ப்பு அதிகம்!!!! குக்கூவில் “மனசுல சூரக் காத்தே…” மற்றும் “பொட்ட புள்ள..”, நானும் ரௌடிதானில் வரும் “கண்ணான கண்ணே…”, ஒரு நாள் கூத்தில் வரும் “அடியே அழகே….”!!!! என அனைத்தும் அருமையான மெலடிப்பாடல்கள்!!!
பாடல்களே வேண்டாம் என மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில், 6 பாடல்களுடன் வெளியாயிருக்கிறது இந்த படம்!!! எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட..என்று கிராமியப்பாடலுடன் தொடங்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கதையை கடத்தவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன!!!!!
இப்படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம், ஓல ஓல குடுசையில, ஜாஸ்மினு…, செல்லம்மா…, ஹல்லா போல்… , எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட.. என அனைத்துப் பாடல்களும் உங்களை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் !! ஒருமுறை கேட்டுப் பாருங்கள்!!
படத்தின் இயக்குனர் ராஜு முருகன்:
இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆனந்த விகடனில் வெளிவந்த “வட்டியும் முதலும்” தொடரின் மூலம் பிரபலமானார்!!!!
இவரது முதல் படமான குக்கூவில் பார்வையில்லாதவர்களின் காதலை அழகியலோடு சொல்லியவர் இந்த படத்தில் சாமானியனின் பார்வையிலிருந்து அரசியலைச் சொல்லி இருக்கிறார்!!!!
இயக்குநர் ராஜூ முருகனுக்கும், கூடுதலாக வசனத்தில் உதவி செய்திருக்கும் முருகேஷ்பாபுவுக்கும் வாழ்த்துகள்!!! ஏனெனில் எப்போதெல்லாம் படம் தொய்வடைகிறதோ அப்போதெல்லாம் இவர்களது வசனங்களே நம்மை கவனிக்க வைக்கிறது!!!!! ஒரு கண்ணுல காந்தி, இன்னொன்னுல பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க” என்று நம்மை சிரிக்கவைக்கின்றன!! அதே சமயம் “அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்” என்று நம்மை சிந்திக்கவும் வைக்கிறது!!!!
படத்தில் ரசித்த வசனங்கள் :
இறுதியாக ,
“ஜோக்கர்” உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல..
சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய சமூகப் படம் !!!!…
Mams, Semma Review… Co-Incidence… i Watched this movie monday night and it disturbed me actually.. Worth movie.. I asked Vijay also to watch this movie.. Your review style nice.. Am trying to get this director contact, We must appreciate his daring attempt,,
If u get contact of director do let me know…
கண்டிப்பா மச்சா!! அவருக்கு FB-ல மெசேஜ் அனுப்பிருக்கேன்!! பதில் வந்ததும் சொல்றேன்
Thank you very much
படத்ததில் நடித்த இல்லை வாழ்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நிஜத்தில் சமூக அக்கறையுடன் போராடி வாழ்பவர்களையும் பலரும் ஜோக்கர்களாக பார்க்கும் நம்மில் பல பேருக்கு யாரு உன்மையாண ஜோக்கர் என்ற கேள்வியை வைக்கும் திரைபடம்.
அணைத்து கருத்துகளும் நல்ல விவாதத்துக்கு வித்திடுகின்றன.
படத்தை விமர்சிக்காமல் படத்தில் வரும் வசனம் காட்சிகள் கதாபாத்திரம் மற்றும் அவற்றின் ஆழத்தை தன்னுடைய புரிதலை எடுத்து கூறியதற்கும் அக்கருத்தை இப்பதிவை படிப்பவர்கள் மேல் திணிக்காமல் இருந்தமைக்கு பாராட்டுக்கள் 😀😀
Once again good movie selection and nice review.
சிறந்ததொரு சமூக படம்
மொத்தத்தில் நாம் இன்னும் ஜோக்கர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஜோக் அடிக்கும் இடத்தில் சிரிங்க
நம் வாழ்க்கையே சிரிக்கிற அளவிற்கு ஜோக்கர்களாகி விடாதீர்கள்