நவம்பர் 7-இல் தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகநாயகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு எனக்கு பிடித்த கமல் அவர்களின் திரைப்படங்களை (திரையரங்கில் மட்டும் பார்த்த) படங்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன்!! இந்த வரிசை இச்சிறிய சினிமா ரசிகனின் பார்வையே!!

சிலருக்கு  மாற்றுக்கருத்து இருக்கலாம், அதையும் வரவேற்கிறேன்…

முதலாவதாக உத்தம வில்லனிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

உத்தமவில்லன்:

இன்னமும் நினைவில் இருக்கிறது இந்தப்படத்தின் டீஸர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம்!!!

நானும் என் மனைவியும் இசையின் ரசிகர்கள்!!! எங்களது வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!!

சரியா?? தவறா?? என்று தெரியவில்லை….. எங்கள் மகனும் எங்களை போலவே பாடல்களின் மீது அலாதிப்பிரியம் கொண்டிருக்கிறான்!!!

சரி, இப்படத்திற்கு வருவோம், மார்ச் 01, 2014-இல் இப்படத்தின் டீஸர் வெளியானது!! கமல் அவரகள் முகம் “தெய்யம்” எனும் ஒரு கேரள நடனக் கலையில் தோன்றும் ஆட்டக்காரர்கள் தோற்றத்தில் இருக்கும்!! அதனுடே ஒலிக்கும் இதன் பின்னணி இசை,

“பக்கும்….பக…பக…பக…
பக்கும்…பக…பக…பக”….

ஒருவித எதிர்பார்ப்பை என்னுள் எழவைத்திருந்தது!!! அதன் பின் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக காத்திருந்தேன்.

அடுத்த வருடம் டீஸர் வெளியான அதே நாள் இப்படத்தின் பாடல் வெளியானது, மார்ச் 01, 2015!!

யூ-டியூபில் FEB-28-ல் இப்படத்தின் பாடல்கள் வெளியானது!!! INSTRUMENTAL , KAROKE என அனைத்தும் சேர்த்தி மொத்தம் 17 பாடல்கள், சுமார்  1 மணி நேரத்திற்கும் மேலாக இப்படத்தின் பாடல்கள் எனது வீட்டில் ஒலித்துக்கொண்டிருந்தது!! முதல் தடவை ஒலித்தபோதே இப்படத்தின் பாடல்கள் என்னை ஆட்கொண்டுவிட்டதை உணர்ந்தேன்!!

இப்படத்தின் பாடல்களை விவேகா, சுப்பு ஆறுமுகம் மற்றும் கமல் அவர்கள் எழுத ஜிப்ரான் இசையமைத்திருந்தார்!! இப்படத்திற்கு முதலில் இசையமைக்க இருந்தவர் யுவன் பின்பு அவர் விலகிக்கொள்ள ஜிப்ரானை இப்படத்தினுள் இணைத்துக்கொண்டார் கமல்!!

ஜிப்ரானை தனது பேட்டியில், வாகை சூடவா படத்தின் இசை கமல் அவர்களுக்கு பிடித்திருந்ததால் கிடைத்தது இந்த வாய்ப்பு எனக்கூறி இருந்தார்!!

இப்படத்தின் முதல் பாடல் “சிங்கள் கிஸ்கே லவ்வா….

விவேகாவின் வார்த்தை விளையாட்டு… இப்பாடல் முழுவதும்!! நான் ரசித்த ஒருசில வரிகள் உங்களுக்காக,

“நீ தொடாத உச்சம் உண்டா..
சாதனைகள் மிச்சம் உண்டா”…

“முத்தத்தின் ஆசானே…
முடிவுரை செய்தாயோ”!!!!!

“எளிதான வேலைக்கு!!!!
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா”!!!!

அடுத்ததாக நான் ரசித்தது “இரணிய நாடகம்” பாடல்!!

கமலின் தமிழ் புலமையை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை!! இப்படத்தின் பாடல்கள் முழுதும் கமல் அவர்களின் தமிழ் ஆளுமைதான்!!

இரணிய நாடகம் பாடல் முழுதும் கேள்வி – பதில் பாணியில் இருக்கும்!!  இன்னமும் என்னை ஆச்சர்யப்படுத்துவது இப்பாடலின் இசை!! ஒரு கதைபோல நீண்டுகொண்டிருக்கும் இப்பாடலின் வரிகளை எப்படி இசைக்குள் இணைத்தார்கள் என்று!!!

இதேபோல் ஒரு பாடல் பதிவை கமல் தன் விருமாண்டி படத்தில் கூட பயன்படுத்தி இருப்பார் (கருமாத்தூர் காட்டுக்குள்ளே பாடல்)

எவரும் எந்த பொருளும் தெய்வமானால்…
கும்பிட்ட கூட்டம்  போதும்!!!
குப்பை கூட சொர்க்கம் சேரும்!!!
அகில உலகும் அழியும் அழியும்
வா…. வா… வாடா… வாடா!!!

அடுத்ததாக என்னை இப்பவும் ஆச்சர்யப்படுத்தி கொண்டிருப்பது “சாகாவரம் போல் சோகம் உண்டோ” பாடல்!!

இப்பாடல் முழுவதும் அந்தாக்ஷரி முறையில் எழுதப்பட்டிருக்கும்!!

“கரிந்து எரிந்தும்
வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில்
உயிர்கள் முளைக்கும்…

முளைத்தும் முறிந்தும்
துளிர்க்கும் வாழை-தன்
மரணத்துள்ளே
விட்டது விதையே!!!!
(கேளாய் மன்னா)

அடுத்த முறை இப்பாடலை கேட்கும்போது இதன் வரிகளை கவனித்துப்பாருங்கள்!! கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்.

திரைப்பட அனுபவத்தை பகிர நினைத்து இப்பட பாடல்களின் பாதிப்பிலேயே அமர்ந்துவிட்டேன்!!

மன்னிக்கவும்.

இந்தப்படத்தின் பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம், படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது!! மே 1 (2015)-ல் இப்படம் ரிலீஸ் என்று தெரிந்ததும் இப்படத்தை எப்படியாவது முதல் நாள் பார்த்திரவேண்டும் எனும் ஆசை என்னுள் அதிகமானது!!

நான் அமெரிக்காவில் ஒரு சிறிய மாகாணத்தில் வசிக்கிறேன்!! இங்கே  தமிழ் படங்கள் வெளியாவது சிரமமே!!  எனவே நான் 1:30 மணி நேரம் பயணம் செய்துதான் இப்படத்தை பார்க்க வேண்டிய நிலை!! பட வெளியீட்டில் ஏற்பட்ட பலவித பிரச்சனைகளால், இப்படத்தை என்னால் இங்கே முதல் நாள் (மே 01, வெள்ளிக்கிழமை) காண முடியவில்லை!!!

சரி, அடுத்தநாள் (மே 02) செல்லலாம் என முடிவெடுத்தேன்!! துணைக்கு என் மனைவி மற்றும் எனது நண்பர் குடும்பத்துடன் செல்ல  ஆயுத்தமானேன்!!!

ஆனால் அதற்குள் ட்விட்டர் விமர்சகர்கள் இப்படத்தை பற்றி எதிர்மறை விமர்சனங்களை பகிரந்திருந்தனர்!!

இங்கே இப்படத்தின் டிக்கெட் விலை ஒருவருக்கு $20, போய்வர மற்றும் சாப்பாட்டிற்கு சேர்த்து எப்படியும் குறைந்தது 60-70$ செலவாகும்!!! இது என்னை தவிர்த்து அனைவரையும் யோசிக்க வைத்தது!!!

எப்படியாவது இவர்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்றெண்ணி, பலவித சமாளிப்புகள் செய்து அப்போதே சனிக்கிழமை (மே ௦2) மதியத்திற்கு டிக்கெட் புக் செய்து விட்டேன்!!

பின்பு வரமாட்டேன் என்று மனசு மாறினாலும் டிக்கெட் புக் செஞ்சாச்சு, கேன்சல் பண்ண முடியாதுனு சொல்லி கூப்ட்டு போயிறலாம்னு ஒரு தைரியம்!! ஆனால், எனக்கு எந்த வித கஷ்டத்தையும் தராமல் அனைவரும் காலையிலேயே பயணத்திற்கு ஆயுதமாகி இருந்தனர்.

1:30 மணி நேர கார் பயணத்தில் உத்தம வில்லன் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டே இருந்தது!!

REPEAT MODE.

பயணம் முழுவதும் கமல் அவர்களைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தோம்!! அந்தப்பயணத்தில் என்னை ஆச்சர்யப்படுத்தியது, என் நண்பர் தன்னை கமல் ரசிகனாய் வெளிப்படுத்தியது!!

அதுமட்டுமில்லாமல், தன் கல்லூரி நாட்களில் தான் அதிகம் பார்த்து  ரசித்து, வியந்த  “ஹே ராம்” படத்தை (6 முறை திரையரங்கில்) வியந்து கூறி ஆச்சர்யப்படுத்தினார்!!

ஒன்னறை மணி நேரப் பயணம் வெகு சீக்கிரம் முடிவடைய…….

“சிங்கள் கிஸ்க்கே  லவ்வா” பாடல் 3-வது லூப்பில் ஓடிக்கொண்டிருக்கையில்  எங்களது கார் திரையரங்க வாசல் முன் நின்றது!!

ஆர்வத்தில் ஓடி இறங்கி கவுண்ட்டரில் பெற்றுக் டிக்கெட்டை கொண்டு அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன்!! எதிர்மறையான விமர்சனங்கள் ஏற்கனவே வந்ததினாலோ  என்னவோ அவர்களது உற்சாகம் ௦%.

அன்று முதல் இன்று வரை நான் படம் பார்ப்பதற்கு முன் விமர்சனங்கள் படிப்பதில்லை!!! தெரிந்தோ தெரியாமலோ விமர்சனங்கள் என் மூளைக்குள் அமர்ந்து கொண்டு படத்தோடு ஒன்ற விடாமல் செய்கிறது!!

அதுமட்டுமில்லாமல், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது!!! எந்த வித வெளியுலக தொடர்பை பற்றிய நினைவு இல்லாமல் திரையோடு நம்மை கட்டிப்போடும்!!

விமர்சனக் கண்ணோடு படம் பார்த்தால் நம்மால் திரையோடு ஒன்ற முடியாது என்பது என் எண்ணம்!!  பலர் மாறுபடலாம்.

அத விடுங்க,

அனைவரையும் உற்சாகப்படுத்தி பாப் கார்ன் கூல் ட்ரிங்க்ஸ் சகிதமாய் சீட்டில் அமர்ந்தோம்!!! நூறு பேர் அமரக்குடிய திரையரங்கில் எங்களுக்கு முன்னமே இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்!!! அவர்களும் எங்கள் பக்கத்துக்கு பிளாக் நண்பர்களே!!

அனைவரும் ஒன்றாக அமர்ந்து “உத்தமவில்லனை” காண தயாரானோம்!!

கமல் அவர்களின் குரலில், KB சார் அவர்களுக்கு இறங்கல்பா-வோடு வெள்ளித்திரையில் படம் ஆரம்பமானது!! ஒரு சினிமா தியேட்டரின் ப்ரொஜெக்ட்டரில் இருந்து ஆரம்பித்து அங்கே குழுமியிருக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடிகர் மனோரஞ்சனாய் கமல் அவர்களின் அறிமுகம்!!

நம்மூராக இருந்தால்  டிக்கெட்டை கிழித்து வீசி, தொண்டை கிழிய கத்தி..கூச்சலிட்டிருபோம்!!

ஆனால் இங்கே, ம்ம்ம்ம்ம் …ஒன்னும் சொல்வதிற்கில்லை!!

இப்படத்தின் ட்ரைலர்கள் என்னுள் ஏற்படுத்திய பிம்பம் இது காமெடி கலந்த ஒரு ஆக்ஷ்ன் படமென்று!!

ஆனால் திரையில் கண்டது ரெண்டுமில்லை!!!

So much Emotional!!!!

என்னுடன் படம் பார்த்த அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கவில்லை!! Especially, உத்தமனாக கமல் செய்யும் நகைச்சுவை…

பஞ்ச தந்திரம், பம்மல் K சம்மந்தம், வசூல் ராஜா, மைக்கேல் மதன காமராஜன் இப்டி பல படம் பார்த்த நம்மிடமிருந்து கமலிடம் இருந்து இவ்வாறான நகைச்சுவையை எதிர்பார்க்கவில்லை!!

சத்தியமாக!!!

ஆனால், அந்த நடிகன் மனோரஞ்சனாய் கமல் திரையில் செய்த ஆளுமையிலிருந்து இன்னமும் மீள வில்லை!!

குறிப்பாக இங்கு ஒன்றை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்!! இங்கே பல அமெரிக்க நகரங்களில் நம்மூர்களில் விடுவது போல “INTERMISSION” என்பதே இல்லை!!

ஆகையால் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் ஒரே இடத்தில அமர்வது என்பது  கொஞ்சம் கஷ்டமான விஷயம்!!! இதுவே பலருக்கும் பிடித்த படங்கள் நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்திகிறது.

இப்படத்தை பலமுறை ஆன்லைனில் பார்த்துவிட்டேன்!! என்னை பொறுத்தவரை மனோரஞ்சனுக்காக கமல் எழுதிய திரைக்கதை சாகாவரம்!! இப்படத்தை பற்றி ஆய்வறிக்கையே எழுதலாம்!!

சத்தியமாக…

உத்தம வில்லனை பற்றி நெறைய எழுத வேண்டி இருக்கிறது… எழுத முயற்சிக்கிறேன்!! குறிப்பாக என்னை ஆச்சரியப்படுத்திய இத்திரைப்படத்தின் சில துளிகள்,

  • இந்த படத்தில் பாடல்கள் வரும் சூழல்களையும் அது கொண்டுள்ள வரிகளையும் கவனியுங்கள்!! குறிப்பாக,மனோரஞ்சன் இறந்துவிட்டான் என சொல்லும்போது, திரையில் அவர் நடித்த பட பாடல் ஓடிக்கொண்டிருக்கும்,

சாகாவரம் போல் சோகம் உண்டோ……..தீராக் கதையை கேட்பார் உண்டோ….

  • ஆண்ட்ரியாவுடன் உள்ள தன்தொடர்பை காரினுள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒலிக்கும்,

   காதலாம்  கடவுள்  முன் பாடலும் அதன் வரிகளினுடே வெளிப்படும் காதலும்!!

  • தன் காதலிக்கு எழுதிய படிக்கப்படாத கடிதத்தை தன் மகள் மற்றும் மகனுடன் படிக்கும் காட்சியில் ஒலிக்கும்,

இரணிய பாடல்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

என் ஆஸ்தான தலைவர் ரஜினி அவர்கள் 2.0 சொல்லும் வசனம்,

“இந்த NO.1… NO.2- லாம் பாப்பா விளையாட்டு….

I’M THE ONLY ONE…. SUPER ONE”.

என்னை பொறுத்த வரையில் கமல் அவர்களும் SUPER ONE தான்!!

இந்த ஒரு பதிவிலேயே நான் ரசித்த அனைத்து படத்தையும் எழுதிவிடலாம் என்று நினைத்தேன்!!

ஆனால் மனது ஒத்துக்கொள்ள வில்லை!!!

அடுத்தப்பதிவில் நான் ரசித்த விருமாண்டியோட வருகிறேன் , அதுவாவது  சிறியதாக இருக்கவேண்டும் ஆண்டவா……..

இல்ல…..இல்ல…..

ஆண்டவரே!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *