poster

நீங்க உங்களுக்கு விருப்பமான திரில்லர் நாவலை படித்து  கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் வரும் கொலையை போலவே உங்கள் கண் முன் ஒரு சம்பவம் நடக்கிறது. இதை எதேய்ச்சாய் நடந்தது என்பதா இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டதா!!! இப்படிப்பட்ட  கேள்விகளோடு  ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு அட்டகாசமான திரில்லர் MOVIE!!!!!

4thperiod00003

கதாபாத்திரங்கள்:
cast-drama-korea-4th-period-murder-mystery-2009-subtitle-indonesiaகதை:

HAN JUNG-HOON மிகவும் அழகான, நன்றாகப்படிக்கும் மாணவன். அவனிற்கு எப்போதுமே பெண்களிடத்தில் கிரேஸ் (CRAZE)  உண்டு. அதுமட்டுமில்லாமல் அவனுக்கு நேர் எதிர் குணம் கொண்ட கூடப்படிக்கும் KIM TAE-GYU-வுடன் பகைமையும் உண்டு.

ஒரு நாள் HAN JUNG-HOON எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வகுப்பறைக்குள் நுழைகிறான், அங்கே KIM TAE-GYU கத்தியால் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவன் வகுப்பு தோழி LEE DA JUNG வகுப்பறைக்குள் நுழைகிறாள்.

vts_01_2_vob_000099639

HAN JUNG-HOON கையில்  இருக்கும் கத்தி மற்றும் KIM TAE-GYU-வுடன் உண்டான சமீபத்திய மோதல் அனைத்தும் அவனை (HAN JUNG-HOON) ஒரு கொலைகாரனாக முன்னிறுத்துகின்றன.

f92cb-vts_01_2-vob_000124330

ஆனால் LEE DA JUNG மட்டும் அவன் கொலை செய்து இருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறாள் மற்றும் அதற்காக அவள் கண்டறிந்து சொல்லும் காரணங்களும் லாஜிக் மீறாமல் சரியாகவே இருக்கிறது. இதை வைத்து மற்றவர்களை நம்ப வைக்க என்னால் முடியாது என்று சொல்லி இருவரும் சேர்ந்து கொலையாளியை கண்டுபுடிக்க முடிவு செய்கிறார்கள். 4thperiodmystery34

PHYSICAL EDUCATION வகுப்பு முடிந்து அனைத்து மாணவர்களும் வகுப்புக்கு வர 40 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் அனைத்து தடயங்களையும் சேர்த்து உண்மை கொலையாளியை கண்டறிவதே படத்தின் கதை.

4thperiod00087திரைக்கதை:
படத்தின் முதல் 30 நிமிடம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் அவர்களின் குணாதிசயத்தையும் காட்ட எடுத்துக்கொள்கிறது. அதன் பிறகு நடக்கும் கொலையும் அது தொடர்பான காட்சிகளுமே படத்தின் பலம்!!

40 நிமிடத்திற்குள் கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் எனும்போது ஏற்படும் பர பரப்பு படத்தின் இறுதிவரை செல்கிறது. இதற்கு முழுக்காரணமும் திரைக்கதை மட்டுமே.

என்னைப்பொறுத்த வரை எந்த ஒரு MYSTERY THRILLER GENRE-வகை திரைப்படத்திற்கு தேவையானது வேகமான திரைக்கதை மட்டுமே. அது மட்டுமே படத்தின் அனைத்து லாஜிக் மீறல்களையும் மறக்க உதவும், படத்தோடு நம்மை ஒன்றவும் வைக்கும். அது இந்த படத்தில் நன்றாகவே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

என்ன தான் கொலைப் பழி ஹீரோவின் மேல் இருந்தாலும் படம் நகர்வது ஹீரோயினை சுற்றித்தான். படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோயினை பற்றி சொல்லி விடுகிறார்கள். அவள் விரும்பி படிப்பது கிரைம்  திரில்லர்  நாவல்கள் என்றும்  வகுப்பு நேரத்தில் கூட பாடத்தை கவனிக்காமல்  புத்தகத்தின் நடுவில் கிரைம் நாவலை  வைத்து படிப்பவள் என்றும்.

இதனாலே படத்தின் பின் பகுதியில் வரும் அனைத்து INVESTIGATION காட்சிகளும் நம்பும் படியாக உள்ளது. மிகவும் அதிமேதாவித்தனமான துப்பறிவு சம்பங்களோ, தடயங்களோ படத்தில் இல்லை. ஒரு பள்ளி மாணவர்களால் எந்த அளவிற்கு கண்டுபுடிக்க முடியுமோ அந்த அளவில் தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

sr0izbn

ஒவ்வொரு முறையும் HAN JUNG-HOON இவர் தான் கொலையாளி என்று சொல்லும்போதும் LEE DA JUNG மறுப்பதும் அதற்காக அவள் கூறும் அனைத்து காரணங்களும் நம்பும் படியாகவும் லாஜிக் மீறாமலும் இருப்பது “அட” போட வைக்கிறது.

4thperiod00152படத்தில் WOW சொன்ன இடங்கள்:
  1.  படத்தின் முதல் காட்சியில் வரும் மர்மமான கொலைக்கு கடைசியில் விளக்கம் கொடுப்பது.
  2. INVESTIGATION காட்சிகள் அனைத்தும் லாஜிக் மீறாமல் இருப்பது
  3. ஹீரோயின் CHARACTERIZATION மற்றும் அவளது நடிப்பு
  4. 40  நிமிட பர பரப்பு நமக்கும் தொற்றி கொள்ள உதவும் வேகமான திரைக்கதை
  5. இவர் தான் கொலையாளி என்று நம்பி நெருங்கும் நேரத்தில் கிடைக்கும் இறுதி தடயம்.
இந்த படம் வெளியான ஆண்டு 2009. என்னடா இது!! இவன் எழுதும் முதல் பதிப்பே 7 வருட பழைய படமா என்று யோசிக்காதீங்க!!!.
சமீபத்தில் தான் இந்த படத்தை தமிழில் RELEASE பண்ணிருந்தாங்க, “பென்சில்” என்ற பெயரில்!! பென்சில்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களின் பாத்திரப்படைப்பும் (கூட வேலை செய்யும் ஆசிரியை காதலிக்கும் ஆசிரியர், மகனை இழந்து தவிக்கும் ஆசிரியர், கோபக்கார ஆசிரியர், கிரைம் நாவல்களை விரும்பி படிக்கும் நாயகி என அனைத்தும்) இப்படத்தின் உபயமே.
பென்சில் படத்தை INSPIRATION வரிசையில் சேர்க்கலாமா என்று யோசித்தால் நிச்சயமாக முடியாது!! ஏனெனில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் 4th PERIOD MYSTERY படத்தின் தமிழ் பதிப்பே!! இந்த படத்தில் புதிதாக யோசித்திருப்பது பாடல்களும் கொலைக்கான காரணமும் மட்டுமே!!!
பென்சில் பாக்காதவங்க இருந்தீங்கனா, அதுக்கு பதிலா 4th PERIOD MYSTERY (2009) படத்த பாருங்க. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும். இல்லை..நீங்க தப்பா புரிஞ்சுட்டேள்.. நாங்க பென்சில தான் பாப்போம்னு அடம் புடிச்சா, அதுவும் தப்புல்ல… ஆரம்பத்துல நல்லா தான் போகும்… அப்புறம், போக போகத்தான் கொஞ்சம் கஸ்தப் பதுவீங்க..
YOUTUBE LINK: https://www.youtube.com/watch?v=XkspfAW26Ps

 

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

4 Comments on “4th PERIOD MYSTERY (South Korean – 2009):

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *