Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
“IMITATION GAME” படம் பார்ததிலிருந்தே வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களை தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது நண்பர் அறிமுகப்படுத்திய படம் தான் “Argo”!!!!!
1979-ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிறைவைக்கப்படுகிறார்கள்!!!! அங்கிருந்து தப்பித்து கனடா தூதரக அலுவலகத்தில் தஞ்சமடையும் 6 அதிகாரிகளை ஈரான் கண்ணில் மண்ணைத்தூவி எப்படி சொந்த நாட்டுக்கு அழைத்து வருகிறார்கள் என்பதைக் கூறும் படமே Argo!!!!!
இந்தப்பதிவு “Argo” என்ற திரைப்படத்தையும் அது நினைவு கூறும் வரலாற்று நிகழ்வையும் அலசும் ஒரு சிறு முயற்சியே!!!! நிறைய தகவல்களை அலசியிருப்பதால் இது ஒரு பெரும்பதிவாக அமைகிறது!!! அதற்காக என்னை மன்னியுங்கள்…..
இந்தப் படத்தின் கதைக்களத்தைக் கூறும் முன் அதற்குரிய வரலாற்று காரணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்!!!!!
1951-இல் ஈரானிற்கு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹமது மொசாதே அவர்கள் 1913-ஆம் ஆண்டிலிருந்தது பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணை (பெட்ரோலிய) நிறுவனத்தை (BP) தேசியமயமாக்கினர் !!!!!! மேலும் அவர் கொண்டு வந்த அறிவிப்புகளும் சட்ட திருத்தங்களும் பன்னாட்டு அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பை சம்பாதித்தது!!!! இதன் தொடர்ச்சியாக 1953-ஆம் ஆண்டு அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் “SECRET INTELLIGENCE SERVICE” அமைப்பும் இணைந்து மேற்கொண்ட ராணுவப் புரட்சியால் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்!! (இறக்கும் வரையில் வீட்டுச்சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார்)
அதன் பின் அமெரிக்க-பிரிட்டன் அரசின் ஆதரவாளரும், அவர்களின் கைப்பாவையுமான மன்னர் ஷா முஹமது ரேஜா பஹலவியிடம் ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது!!!! ஆனால் ஷாவின் சர்வாதிகார ஆட்சியும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இருந்த இவரது செயல்பாடுகளாலும் மக்கள் கொதித்துப் போயிருந்தனர்!!!!!!!! மேலும் இவர் அமெரிக்க அரசாங்கத்துடன் காட்டிய இணக்கம் மக்களிடையே மேலும் வெறுப்பை பெற்றுத்தந்தது!!!! இந்த வெறுப்பே 1979-இல் பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது!!!! அதுநாள் வரை ஈராக்கிலிருந்து ஷாவை எதிர்த்து வந்த அயதுல்லாஹ் கொமேனி அவர்கள் ஈரான் திரும்பி புரட்சியை வழி நடத்தினார்!!!!
இதனால் 1979 ஜனவரி 17-ஆம் தேதி தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார் ஷா!!! இதன் நீட்சியாக பிப்ரவரி 17-இல் ஷாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயதுல்லாஹ் ஆட்சியில் அமர்கிறார்!!!! அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் ஷாவை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க அவரை தங்களிடம் ஒப்படைக்க சொல்லி வற்புறுத்தினார்!!! ஆனால் இதற்கு அமெரிக்கா சம்மதிக்கவில்லை!!!! ஏற்கனவே அமெரிக்காவின் மேல் இருந்த கோபம் இந்நிகழிச்சியால் இரு மடங்கானது!!!!!!
1979, நவம்பர் 4-ஆம் தேதி ஈரான் தலைநகரான, டெஹ்ரானில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை “MUSLIM STUDENT FOLLOWERS OF THE IMAM KHOMENI LINE” எனப்படும் அமைப்பை சார்ந்தவர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றுகிறார்கள்!!!!! அங்கே இருந்த சுமார் 54 தூதரக அதிகாரிகளை அங்கேயே அடைத்தும் வைக்கிறார்கள்!!!! அதிலிருந்து தப்பித்த 6 பேர் கனடா நாட்டு தூதரக அதிகாரி வீட்டில் மறைந்து கொள்கிறார்கள்!!!
மேற்குறிய பல வரலாற்று நிகழ்வுகளை படத்தொடக்கத்தின் போதே வாய்ஸ் ஓவரில் சொல்லி நம்மை இந்த படத்திற்கு தயார் செய்துவிடுகிறார்கள்!!!!
கதை:
முன்னமே சொன்னது போல் அந்த 6 பெரும் கிளர்ச்சியாளர்களிடம் தப்பிப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது!!!!! இவர்கள் அனைவருக்கும் கனடா அதிகாரி கென் டைலரும் அவரது மனைவியும் அடைக்கலம் கொடுக்கிறார்கள்!!!! (ஏறக்குறைய 79 நாட்கள்). இவர்களை போராட்டக்காரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் எப்படியாவது அமெரிக்காவிற்கு அழைத்து வர CIA திட்டமிடுகிறது!!! இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் டோனி மெண்டெஸ்!!!! இவர் CIA-வின் EXFILTRATION இலாகாவின் சிறப்பு அதிகாரி!!! மீட்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும் இவரிடமே இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது!!!!!
ஒருநாள் தன் மகனிடம் அவன் பார்த்துக்கொண்டிருக்கும் “BATTLE FOR THE PLANET OF THE APES” படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு யோசனை உருவாகிறது!!! அதாவது, ஹாலிவுட்டில் ஒரு சைன்ஸ் பிக்ஷ்ன் படம் எடுக்கப்போவதாகவும் , அதற்கு லொகேஷன் பார்க்க கனடாவிலிருந்து PRODUCTION கம்பெனி ஆட்கள் ஈரானிற்கு வருவதாகவும் சொல்லி அந்த ஆறுபேரையும் அமெரிக்கா கொண்டு வர ஒரு திட்டம் உருவானது!!!! இதற்காக ஹாலிவுட்டில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இவர்கள் அனைவரும் இதன் உறுப்பினர்தான் என்று நம்பவைக்க வேண்டி இருந்தது!!!! இவ்விசயத்தில் டோனிக்கு உதவ CIA சார்பில் பிரபல மேக்கப் மேன் ஜான் சேம்பேர்ஸ் அழைக்கப்படுகிறார்!!! அவருக்கு உதிவியாக அவரது நண்பர் ராபர்ட் சிடேலும் இணைகிறார்!!!
இவர்கள் இருவரும் இணைந்து “A STUDIO SIX” என்ற டுபாகூaர் கம்பெனியை ஆரம்பித்து, 6 பேருக்கும் ஒவ்வொரு துறையை ஒதுக்குகிறார்கள்!!! (இயக்குனர், கேமரா மேன், அஸோஸியேட் பிரட்யூசர் என பல) கனடா அரசாங்கமும் தன் பங்குக்கு இவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட், விசா என அனைத்தையும் போலியான பெயரில் தயார் செய்து கொடுக்கிறது!!!!
வெறும் கம்பெனி மட்டும் போதாதே….. கதை வேணுமே!!! அதற்காக அவர்கள் தேர்வு செய்த கதை தான் “ரோஜர் ஜெலாஜினி” 1967-இல் எழுதிய “LORD OF LIGHT” எனும் நாவல்!!! இதன் பெயர் ஏற்கனவே அறிமுகமாகி இருந்ததால், இந்த டுபாகூர் படத்திற்கு CIA சூட்டிய பெயர் தான் “ARGO”!!!!
போலியாக தயாரிக்கப்பட்ட அனைத்து கோப்புகளுடன் ஒரு தயாரிப்பாளர் போல வேடமிட்டு ஈரான் வந்து இறங்குகிறார் “டோனி மெண்டெஸ்“!!!!
டோனி மற்றும் அந்த ஆறு பேர் தப்பித்தார்களா இல்லை சிக்கிக்கொண்டார்களா என்பதை தெரிந்துகொள்ள படத்தை பாருங்கள்!!!!
திரைக்கதை மற்றும் இயக்கம்:
கிளர்ச்சி, சிறைபிடிப்பு, தயாரிப்பு கம்பெனி என மெதுவாக ஆரம்பிக்கும் படம், டோனி ஈரான் சென்றவுடன் ஏற்படும் பரபரப்பு படத்தின் இறுதிவரை தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் “க்ரிஷ் டெர்ரியோ” அவர்களுடைய திரைக்கதை மற்றும் வசனங்கள் மட்டுமே!!!!! 2012-ஆம் ஆண்டிற்கான சிறந்த ADOPTED திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இந்த படத்திற்காக இவர் பெற்றதே இதற்குச் சான்று!! இவர் டோனி மெண்டெஸ் CIA பற்றி எழுதிய அவரது அனுபவ புத்தகமான “THE MASTER OF DISGUISE” மற்றும் ஜோசுவாஹ் பியர்மேன் அவர்கள், “WIRED” என்ற பத்திரிகையில் 2007-இல் எழுதிய “தி கிரேட் எஸ்கேப்” என்ற கட்டுரையையும் துணைகொண்டு இந்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தார்!!!! (இவர் தான் கடந்த 2016-இல் வெளிவந்த “பேட்மேன் Vs சூப்பர்மேன்” படத்தின் திரைக்கதை ஆசிரியர் (படு த்ராபையான ஒரு படம்) மற்றும் அடுத்ததாக வரப்போகிற “ஜஸ்டிஸ் லீகும்” இவர் கைவண்ணமே (அதாவது ஒழுங்கா எழுதறாரானு பார்ப்போம்)
இந்தப்படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருப்பவர் பென் அஃப்லெக்!!!! (பேட்மேன் Vs சூப்பர்மேன் படத்துல பேட்மேனா வருவாரே, அவரே தான்!!!!) இந்த படம் சும்மா பர…. பர…. பர….பரனு…. போறதுக்கு இன்னொரு முக்கிய காரணம் இவரது டைரக்சனும் ஆகும்!!!! என்னதான் இவர் ஒரு முழு நேர நடிகராக அறியப்பட்டாலும் அவ்வப்போது பட இயக்கத்திலும் ஈடுபடுவார்!!!! இவரை பற்றி இன்னொரு செய்தி, தன் 25- வயதிலேயே ஆஸ்கரின் சிறந்த திரைக்கதைக்கான விருதை தான் முதன் முதலில் எழுதிய “GOOD WILL HUNTING” என்ற திரைப்படத்திற்கு பெற்றார்!!!! இதன் பின் இவர் இயக்கிய “GONE BABY GONE“, THE TOWN” மற்றும் தற்போது வெளிவந்துள்ள ” LIVE BY NIGHT” படங்கள் அனைத்தும் வணீக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன!!!
இவரது டைரக்சனின் நேர்த்தியை பற்றி தெரிந்து கொள்ள இந்த படத்தின் கனகச்சிதமான கதாபாத்திரத் தேர்வைப் பார்த்தாலே போதும்!!!! இது ஒரு உண்மையான வரலாற்று சம்பவத்தை கூறுவதால் உருவ ஒற்றுமையை மனதில்கொண்டு அருமையாக தேர்வு செய்திருப்பார்!!!
படம் தொடர்பான சர்ச்சைகள்:
என்னதான் படம் அமெரிக்க விமர்சர்களிடம் பாராட்டை பெற்றாலும் பல சர்ச்சைகளுக்கு வித்திடவும் தவறவில்லை!!! ஏனெனில் இந்த படத்தில் சொல்வது போல அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் தூதரக அதிகாரிகளை காப்பாற்ற பெரிதாக அக்கறைகாட்டவில்லை என்பதே உண்மை!!!!! அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லும் வரை கனடா அரசாங்கத்தின் பங்களிப்பே அதிகம்!!!! ஆனால் படத்தில் கனடாவின் பங்களிப்பு இருட்டடிக்கப்பட்டு அமெரிக்காவின் கொடியை தூக்கி பிடித்தனர்!!!! கனடா அரசும், இச்சம்பவத்தின் பொது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய கென் டைலரும் இப்படத்தை பெரிதாக எதிர்த்தனர்!!!
இந்த படத்தை முழுதும் பார்த்துவிட்டு விக்கிப்பீடியாவை மேய்ந்தால் சுத்தமாக சம்பந்தமில்லாத தகவல்கள் தான் வரும்!!!! இவ்வளவு ஏன், இந்நிகழ்வின் போது அமெரிக்க பிரதமராக இருந்த ஜிம்மி கார்ட்டர் கூட இந்த மீட்புப்பணியின் வெற்றிக்கு கனடாவின் பங்களிப்பும் யோசனைகளுமே முக்கிய காரணம் என ஒரு பேட்டியின் போது ஒத்துக்கொண்டார்!!!!!
இறுதியாக ,
எந்த ஒரு வரலாற்றையோ, சம்பவங்களையோ படமாக்க முடிவு செய்து அதை திரைக்கேற்ப எழுதும்போது நிறைய மாற்றங்களை செய்வார்கள்!!! உண்மைகளோடு தங்கள் கற்பனைகளையும் சேர்த்து படத்தின் விறு விறுப்பை கூட்ட பல காட்சிகளை புதிதாக நுழைப்பார்கள் சிலவற்றை தூக்கியும் எறிவார்கள்!!! அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது !!!! ஆனால் கொஞ்சம் அதிகமாக!!!!!
வரலாறை ஒதுக்கிவிட்டு ஒரு படமாக பார்த்தால் இது ஒரு அட்டகாசமான செம ஸ்பீடு திரில்லர்!!!!!
Super Review Mams!! I saw the movie and its true Canada efforts were shadowed! Worth movie and good to see you growing as good writter.. You got the pulse of readers!! Awaiting for your next review😊
இப்பதிவை விமர்சனமாக கருதாமல் வரலாற்று பதிவாக படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம். மிகவும் நேர்த்தியாக பதிவிட்டிருக்கிறாய்.
திரைபடங்கள் தாண்டி திணந்தோறும் நடக்கும் சம்பவங்கள், புத்தகங்கள், வரலாற்று நிகழ்வுகள் பற்றி எழுதி பதிவிடும் அடுத்த இடத்திற்க்கு வந்ததாக கருதுகிறேன். இவ்வரலாற்றில் வருகின்ற அமெரிக்க கார்பரேட் அரசியலுக்காண புரட்சி இப்பொழுது நமது தமிழகத்திலும். மகிழ்ச்சி. சிறப்பு மிகச்சறப்பு.
சரி இப்பதிவு பற்றி பார்ப்போம்.
படத்தில் திரைக்கதை தான் முதல் கதாநாயகனாக திகழ்கிறது. டெர்ரியோவின் திரைக்கதையில் உன்மை வரலாற்று சம்பவம் ஐம்பது சதவிகிதமும் தனது கற்பணை ஐம்பது சதவிகிதமும் சேர்ந்து இருப்பதாலேயே இத்தனை விறுவிறுப்பாக திரைபடம் நகர்கிறது. அதனாலேயே கனடாவின் பங்களிப்புகளை தவிர்த்து அரதப்பழசாண அமெரிக்க புகழ் பாடியிருக்கிறார். பென் அஃப்பெலகின் இயக்கமும் நடிப்பும் படத்திற்கான பலம். அவரலாறு இப்படத்திற்கு சிறந்த இயக்குநர்க்கான ஆஸ்கார் பட்டியலில் முன்மொழிய படவில்லை காரணம் அவ்வருடம் வந்து அருமையாக இயக்கப்பட்ட(விவாதத்துக்கு உட்பட்டது) ஐந்து திரைப்பபடங்கள்.
“நன்றி கனடா”
படத்தை மறுமுறை இப்பதிவன் பார்வையில் பார்க்க தூண்டியதே இந்த பதிவின் ஆளம்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இன்னொரு திரைப்படத்தை பார்க்க பரிந்துரைக்கிறேன்
“ரெய்டு ஆன் என்டெபி” “Raid On Entebbe”