Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
நெறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கேன்!!! என்னதான் உலகத்தை காப்பாத்தறது, நாட்டை காப்பாத்தறது இப்படி ஏதும் கெடைக்கலைனா கப்பலு, ட்ரைனு, ஏரோபிளானுனு காப்பாத்தி ப்ரம்மாண்டமா எடுத்தாலும் ஒரு சில படத்தையெல்லாம் வாய பொளந்துண்டு பார்த்திருக்கேன்!!!! எப்படிடா இவனுங்களுக்கு மட்டும் இப்டி தோணுதுன்னு யோசிச்சிருக்கேன்!!!! அந்த வகையில பார்த்த படம் தான் “THE GAME”
கதை:
Nicholas Van Orton ஒரு பெரிய பிஸினஸ்மேன். பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணிட்டு போனதுக்கு அப்பறம் தனியா ஒரு பங்களால இருக்காரு. ஒரே ஒரு கெழவி மட்டும் அப்பப்ப சோறு பொங்கி போட வருது.
நிக்கோலோஸோட 48-ஆவது பிறந்த நாளப்ப அவரோட தம்பி CONRAD ஒரு GIFT ப்ரெசென்ட் பண்றான். அது என்னனா CRS(Consumer Recreation Center)ங்கிற கம்பெனி நடத்தற ஒரு GAME-க்கான என்ட்ரி டோக்கன்.
இத வெளையாடறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்னு சொல்லி நிக்கோலஸ விளையாடி பார்க்க சொல்லிட்டு போய்டுறான்.
ஆனா நம்மாளு work பிஸில அத மறந்துடறான். ஒரு நாள் கம்பெனி விஷயமா வெளிய போகும்போது அங்க CRS கம்பெனியோட போர்டு பார்குறான். “சரி நம்ம தம்பி சொன்னானே… போய்த்தான் பாப்போமே” அப்புடின்னு தம்பி கொடுத்த card எடுத்துகிட்டு உள்ளே போறாரு.
போய் பாத்தா அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரி இருக்கு. Card குடுத்த உடனே இவருக்கு சில எக்ஸாமெல்லாம் வச்சி ஏதேதோ டெஸ்ட் பண்ணிட்டு, “உங்க game எப்ப வேணாலும் ஆரம்பிச்சிடும்… உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க எப்போ வேணாலும் இதுலருந்து வெலகிக்கலாம்” அப்புடின்னு ரூல்ஸ் லாம் சொல்லி அனுப்பிச்சிடுறாங்க.
கொஞ்ச நாள் கழிச்சு CRS-கிட்டேயிருந்து , உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சுனு போன் வருது. சரி போனால் போகட்டும் போடானு நம்மாளு வீட்டுக்குவரும்போது, அங்க யாரோ குப்புற கவிந்த மாதிரி விழுந்து கிடக்கறதா பாக்குறான் . பக்கத்துல போய் பார்த்தா, அங்க கோமாளி பொம்மை மாதிரி ஒண்ணு கெடக்குது!!! என்ன பண்றதுன்னு தெரியாம அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு போயி வச்சிட்டு, டிவிய போடுறாரு!
டிவில வர்ற நியூஸ் வாசிக்கிற ஆளு நிக்கோலஸ் கூட பேசுறாரு!!! அப்பறோம் இவரு வீட்டுல என்னென்ன பண்றாரோ அதெல்லாம் டிவில வருது!!!
அப்போ ஆரம்பிக்கிற கன்பீசன் தான். அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கை மொத்தமும் கன்பீசனாயி, போற எடமெல்லாம் இவருக்கு எதிரிங்க. எது game எது ரியல்னு தெரியாம பைத்தியம் புடிச்சமாதிரி சுத்திட்டு திரியறாரு. இவர கொலை பண்ணவும் வேற ட்ரை பண்றாங்க.
நம்மாளுகிட்ட இருக்கிற மொத்தப்பணத்தையும் எடுத்துட்டு மெக்ஸிகோல கொண்டு போய் போட்டுடுறாங்க. அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம பிச்சையெடுத்து ஊருக்கு வராரு!! யார் பண்றாங்க எதுக்கு பண்றாங்கன்னு தெரியாம ஒரு கட்டத்துல மெண்டல் மாதிரி சுத்துறாரு. ங்கொய்யால!!!! எவன் இதெல்லாம் பண்றானோ அவனை போட்டு தள்ளிடலாம்னு துப்பாக்கி எடுத்து கெளம்பறாரு!!!!
இதை யாரு பண்ணுனா , அவரு எப்படி இவனுகள கண்டுபிடிச்சாருங்கறத படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!!!!
என்னடா படத்தை முழுசா சொல்லிட்டான்னு யோசிக்காதீங்க!! இது இன்டெர்மிசன் வரைக்கும் தான்!!! இதுக்கு மேலதான் மெயின் பிக்ச்சரே!!!!!
படம் உருவான விதம:
இந்த படத்தோட திரைக்கதையை 1991-லயேய் எழுதிட்டு producer கிடைக்காம சுத்திட்டிருந்தாங்க!! அப்பறோம் MGM இதை வாங்கி படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணுனா, ஒருத்தனும் வாங்க வரல!! சரினு வந்த விலைக்கு இந்த கதையை இன்னொரு கம்பெனிக்கு வித்துட்டாங்க!!!
கடைசியா நம்ம டேவிட் FINCHER-கு கதை புடிச்சு போய் படமா எடுக்கலாம்னு நெனைச்சா PRODUCER-கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்ல. சரி அதுக்குள்ள நாம வேற படம் பண்ணுவோம் அவரு பண்ண படம் தான் SE7EN (நம்ம திரிஷ்யம் படம் எடுத்தாரே ஜீத்து ஜோசப் அவரோட மெமொரிஸ் படம் (தமிழ்ல, அருள்நிதி நடிச்ச ஆறாது சினம்) இந்த படத்தோட இன்ஸபிரேஷன் தான்) SE7EN தாறு மாறு ஹிட்டு!!!
இப்ப அவருக்கு எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்ல!! கொறஞ்சது 6 வாரத்துக்கு மேல உக்காந்து படத்தோட ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன்பிளேவ மாத்துனாங்க!!! ” ஒருத்தன எவ்வளவு வேணா பயப்பட வைக்கலாம் ஆனா சாகடிக்க மட்டும் கூடாது!!!! இதை மட்டும் வெச்சிட்டு full படத்தையும் எழுதி முடிச்சாங்க!!!
இந்த படத்தில ஹீரோவா நடிக்க மைக் டக்ளஸ் ஒதுக்கவே இல்ல. ஏன்னா, இது பெரிய பட்ஜெட் படம், produce பண்றவங்களோ சின்ன கம்பெனி அதனால படம் வருமோ வராதோனு அவருக்கு டவுட்டு!! பட் கதை புடிச்சிருந்ததால நம்பி நடிச்சாரு!!அவரு நெனச்ச மாதிரியே படமும் பெரிய ஹிட்டு
எந்த ஒரு திரில்லர் படத்திலயும் ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கிளைமாக்ஸும் முக்கியம்!! எவ்வளவு ட்விஸ்ட் வேணா வெக்கலாம் ஆனா அதுக்கெல்லாத்துக்கும் எல்லோரும் நம்பற மாதிரி ஒரு ஆன்செர் கொடுக்குறமாங்கிறது தான் முக்கியம்!!! அந்தவகையில பார்த்தா இந்த படம் சக்ஸஸ்!!!!
படத்துல ரொம்ப புடிச்சது ஹீரோவோட வாய்ச்சும் அவரு பேசுற வசனமும் தான்!! என்ன இங்கிலிஷ் படம் பார்த்தாலும் subtitle இல்லாம பாக்குறது ரொம்ப கஷ்டம் பட் இதில அந்தப்பிரச்னை இல்ல.
எனக்கு புடிச்ச சில வசனங்கள்:
அப்பறோம், குறிப்பா நம்ம எல்லாருகிட்டேயும் இந்த பழக்கம் இருக்கும்னு நெனைக்கிறேன்!!! ஏதாச்சும் திரில்லர் இல்லனா ஒரு மர்டர் மிஸ்டரி படம் பார்த்தாலும் நாமளே ஒரு கதை யோசிச்சுப்போம், ஹீரோ கண்டுபுடிக்கிறதுக்கு முன்னடியே நாமளே கொலைகாரனை கண்டுபுடிக்க ட்ரை பண்ணுவோம்!! ஒருவேளை சரியாய் இருந்த நமக்கு நாமே சபாஷ் போட்டுக்குவோம்!!!
நீங்க இந்த படம் பார்க்கும்போது இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க!!!! என்னால சுத்தமா ஒன்னு கூட கரிக்டா GUESS பண்ண முடில.
உங்களால எவ்ளோ தூரம் கண்டுபுடிக்க முடிஞ்சதுனு கமெண்ட் பண்ணுங்க!!!
கொசுறு :
தமிழ்ல இந்த மாதிரி படமெல்லாம் வர்றது ரொம்ப கஷ்டம்!!! எனக்கு தெரிஞ்ச ஒரே படம் நம்ம புரட்சி தளபதி விஷாலண்ண நடிச்சு திரு டைரக்ட் (நான் சிகப்பு மனிதன் டைரக்டர்) பண்ணிய சம்ம….சம்ம….சமரன்!!! சூப்பர் படம் இல்லனாலும் மொக்க படம் கெடயாது!!!! முடிஞ்சா அந்த படமும் பாருங்க!!