ONLINE-ல4K ப்ரிண்ட் படம் தேடிட்டு இருக்கும்போது சிக்குனதுதான் “தி இமிடேஷன் கேம்”. படம் பார்க்க மொத காரணம் நம்ம ஹீரோ “BENEDICT CUMBERBATCH“, அப்பறம் தான் மத்ததெல்லாம்!!  ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES  பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க!!!810ajncvjpl-_sl1500_1சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான  ALAN TURING: THE ENIGMA என்ற  நாவலை   தழுவி  எடுக்கப்பட்டது.  இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய  கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே!!!!150731ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம்!! ஏன்னா, பாதி பேருக்கு மேல கதைதெரிஞ்சிருக்கும் இதனால, ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர் கொள்ளணும் மற்றும் பல பேரிடம் ஒப்புதலும் (COPY RIGHTS) வாங்கணும்.  இந்தப்படமும்  இதுக்கு  விதிவிலக்கல்ல!!!
ஏன்னா, பட ரிலீசிற்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், எதிர்மறை கருத்துக்கள்னு பல வந்துச்சு.  BUT, ஒருத்தனும் இதை கண்டுக்கவே இல்லைனு சொல்லணும்,  ஏன்னா, படம் BOX OOFICE-ல தாறுமாறு ஹிட்டு!!

கதை:

1951, இரு போலீஸ் அதிகாரிகள் ஒரு திருட்டு சம்பந்தமாக ஆலன் டூரிங் வீட்டிற்கு விசாரிக்க வருகிறார்கள். ஆலனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் மீது சந்தேகத்தை வரவழைக்ககின்றன.
அவரது முன்னாள் வாழ்க்கையை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆலனை சோவியத் ரஷ்யாவின் உளவாளியாக இருக்க கூடும் என்று சந்தேகித்து அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்கிறது. ஒருநாள் PUB-ல் ஆலன் ஒருவனிடம் பார்சல் ஒன்றைத் தருகிறான், அவனை பிடித்து விசாரணை செய்யும்போது அவன் MALE  PROSTITUTE என்றும் ஆலன் அவனது CUSTOMER  என்றும் கூறுகிறான் .
அந்த சமயத்தில் பிரிட்டனில்  ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக சட்டம் இருந்தது. இந்த சட்ட ஒழுங்கு மீறலை காரணமாக வைத்து போலீஸ் ஆலனை கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது!! பின் ஆலனின் பார்வையில் படம் விரிகிறது.
11939, பிரிட்டன் ஜெர்மனியின் மேல் போர் பிரகடனம் அறிவிக்கிறது. ஜெர்மன் தான் தாக்கப்போகும் இடம், நாள், தாக்கும் வழிமுறை போன்றவற்றை சங்கேத குறியீடுகளாக மாற்றி தன் படைக்கு அனுப்புகிறது. இதனால் பிரிட்டனுக்கு போரில் மிகப்பெரிய இழப்பு ஏற்ப்டுகிறது.
பிரிட்டனால் அவர்கள் அனுப்பும் சங்கேத வார்த்தையை கண்டறிய முடிகிறது ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் BLETCHLEY PARK என்ற இடத்தில் அலாஸ்டர்  டென்னிஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்டறிய முயல்கிறார்கள்.

அந்த குழுவில் இணைய BLETCHLEY PARK செல்கிறான் ஆலன். அங்கே HUGH ALEXANDER, JOHN CAIRNCROSS, PETER HILTON, KEITH FURMAN, AND CHARLES RICHARDS போன்றோருடன் சேர்ந்து வேலை செய்கிறான்.

16

 ஆலனின் சிடு சிடு குணமும் யாரையும் மதிக்காத நடவடிக்கையும் மற்றவரை வெறுப்படைய வைக்கின்றன. அனைவரும் ஒவ்வொரு CODE-ற்கும் அர்த்தங்களை கண்டறிய முயல்கிறார்கள் அனால் ஆலனோ அனைத்திற்கும் சேர்த்து ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால், அதற்கான பண உதவி டென்னிஸ்டனால் நிராகரிக்கப்படுகிறது.
இதனால், ஆலன் வின்ஸ்டன் சர்ச்சிலிற்கு கடிதம் எழுதி தன் கண்டுபிடிப்பிற்கு தேவையான பணம் மற்றும் அந்த குழுவிற்கு தலைவனாகவும் பொறுப்பேற்க்கிறான். அவனும் அவனது குழுவும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த இயந்திரத்திற்கு “CHRISTOHER” என்று ஆலன் பெயர் சூட்டுகிறான். அவன் ஏன் அந்த MACHINIE-ற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்தான் என்று FLASHBACK காட்சியின் மூலம் பதிலளிக்கிறார்கள்.

untitled

1927, பள்ளிப் பருவத்தில் ஆலனை மற்ற மாணவர்கள் சீண்டி கொடுமைப் படுத்த கிறிஸ்டோபர் அவனை காப்பாற்றுகிறான். அவனுக்கு சங்கேத வார்த்தைகளையும் சொல்லிக்கொடுக்கிறான். இதனால் ஆலனிற்கு கிறிஸ்டோபர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. பள்ளி விடுமுறை முடிந்து வரும் கிறிஸ்டோபரிடம் இதை தெரிவிக்கலாம் என்று காத்திருக்கிறான். ஆனால் அவனோ காச நோயால் இறந்துவிடுகிறான். அவனது நினைவுகளே அந்த பெயருக்கு காரணம்.
b76hugmgk
அவர்கள் அந்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஜெர்மனுக்கு சந்தேகம் வரும், இதனால் அவர்கள் வேறு சங்கேத வார்த்தைகள் உபயோகிக்க கூடும் என்றெண்ணி சிறிது சிறிதாக செயல்படுத்தி போரில் வெற்றியும் அடைகிறார்கள்.hmm_9yxhgb0px7k1280
 1945, ஆலனின் சங்கேத குறியீடுகளை கண்டறியும் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காகிதங்களும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன, அவர்களையும் இதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆலனின் கண்டுபிடிப்பால் உலகெங்கும் ஏறக்குறைய 50 கோடிக்கும் அதிகமான மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் அப்போது யாரும் இது பற்றி அறிந்திருக்கவில்லை!!!

_TFJ0043.NEF

1951, வெளி உலகுக்குத் தெரியாத இந்த தகவல்கள் அனைத்தையும்  விசாரணை  அதிகாரியிடம் ஆலன் கூறுகிறான். ஆனாலும் அவன் ஒழுங்கு மீறலுக்கான தண்டனைக்கு ஆளாகிறான். இருவிதமான வாய்ப்புகள் அவனுக்கு தரப்படுகின்றன. ஒன்று, 2 வருட சிறை தண்டனை இரண்டாமவது, 2 ஆண்டுகளுக்கு CHEMICAL CASTRATION எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வது. அவன் இரண்டாமவதை எடுத்துக்கொள்கிறான்.  தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதாலும், தனிமையும் சேர்ந்து அவரது அறிவையும், உடலையும் பாதிப்படைய வைக்கிறது. பல மில்லியன் உயிர்களை காப்பாற்றிய அந்த கணித மேதை 1954-ஆம் ஆண்டு, தன் 41 வயதில், தற்கொலை செய்தி கொள்கிறார் என்ற செய்தியோட படம் நிறைவடைகிறது.

முடிந்தவரை படத்தின் கதையமைப்பை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இது தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் உள்ளன. குறிப்பாக படத்தின் வசனங்கள்!!!! உதாரணமாக, ஆலன் வேலை தேடி BLETCHLEY PARK செல்லும்போது அலாஸ்டர் டென்னிஸுடனுடன் நடக்கும் இன்டெர்வியூ காட்சி, தன் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆலன் நடத்தும் இன்டெர்வியூ காட்சி, இப்படி பல!!!

உங்களுக்காக எனக்கு பிடித்த சில வசனங்கள்:
  1. Sometimes it is the people no one imagines anything of who do the things no one can imagine
  2. Was I god? No…
    Because god didn’t win the war. We did!!
  3. When people talk to each other, they never say what they mean. They say something else and you’re expected to just know what they mean.
அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் அனைவரது நடிப்பு!!! குறிப்பாக BENEDICT CUMBERBATCH!! படத்தை பற்றி பல எதிர் மறை விமர்சனங்கள் வந்திருந்தாலும் ஒருத்தர் கூட இவரது நடிப்பை தப்பா பேசல!!! மனுஷன் ஆலனவே வாழ்ந்திருப்பார்!!
படம் தொடர்பான சர்ச்சைகள்:
எந்த படத்தை பத்தி BLOG எழுதினாலும், அதப்பத்தி இன்டர்நெட்ல நெறைய படிப்பேன். நெறைய புது விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். அப்படி, இந்த படத்துல நான் COLLECT பண்ண எல்லாமே இதோட CONTROVERSIES தான்!!!
பட ரிலீசிற்கு பிறகு எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றதோ அதே அளவுக்கு கிழித்தும் தொங்கவிடப்பட்டது அப்டி என்ன பிரச்னைனு நெனைக்கறீங்களா?? எழுதப்பட்ட புக்கிற்கும் அதை வச்சு எடுத்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்கிறது தான் பிரச்னையே!!!
அப்டி என்னதான் பிரச்சனைனு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதி இருக்கேன்,
  1. படத்தில் காண்பிக்கப்படும் ஆலன் டூரிங்கிற்கும் நிஜ ஆலன் டூரிங்கிற்கும் நெறைய வேறுபாடுகள்!!! படத்தில் வருபவன் எதற்கும் சிரிக்க மாட்டான், எப்போதும் சிடு சிடுன்னு இருப்பான், மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் எனவும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் நிஜத்திலோ ஆலன் இயல்பிலே மிகவும் HUMOURUS-ஆனவன். அனைவருடனும் நெருக்கமாகவே பழகவும் செய்தான்.alan

  2. படத்தில் ஆலன் “ENIGMA CODE BREAKER மெஷினை கண்டுபிடித்ததாக காண்பித்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில், 1938-ஆம் ஆண்டு POLISH CRYPTANALYST MARIAN REJEWSKI என்பவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட மறு உருவாக்கமே!!
  3. ஆலன், GORDON WELCHMAN என்ற மற்றுமொரு கணிதவியல் அறிஞருடன் இணைந்து தான் மெஷினை கண்டுபிடித்தார். ஆனால் படத்தில் அவரை பற்றிய குறிப்புகள் எதுவும் சொல்லவில்லை!!
  4. படத்தில் 5 பேர் கொண்ட குழு தான் இந்த மெஷினை கண்டுபிடித்ததாக சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் 200-ருக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு உதவியிருந்தார்கள்!!
  5. ஆலன் ENIGMA CODE BREAKER மெஷினிற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்ததாக படத்தில் சொல்லியிருப்பார்கள்!! ஆனால் நிஜத்தில் வைத்த பெயரோ “VICTORY
படம் பார்க்கலாமா வேணாமானு ரொம்ப யோசிக்காம கட்டாயம் பாருங்க!!! மிகவும் அருமையான WAR திரில்லர்!!!
பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றிய ஒருத்தன் மக்களாலும் அரசாங்கத்தாலும் கவனிக்கப்படாமலே செத்து போகிறான்!! எப்போதும் போல, இறந்த பின்பு அவனது சாதனைகளை உலகம் கொண்டாடுகிறது !!!!
அதற்கு ALAN TURING-ம் ஒரு உதாரணம்!!!

 

 

 

 

 

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

One Comment on “THE IMITATION GAME (2014)

Leave a Reply to Mixsaite Cancel reply

Your email address will not be published. Required fields are marked *