Visitors online – 0:
users –
guests –
bots –
The maximum number of visits was – 2017-12-28:
all visits – 2468:
users – 1
guests – 2450
bots – 17
browser – Safari 4.0
ONLINE-ல4K ப்ரிண்ட் படம் தேடிட்டு இருக்கும்போது சிக்குனதுதான் “தி இமிடேஷன் கேம்”. படம் பார்க்க மொத காரணம் நம்ம ஹீரோ “BENEDICT CUMBERBATCH“, அப்பறம் தான் மத்ததெல்லாம்!! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க!!!சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே!!!!
ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம்!! ஏன்னா, பாதி பேருக்கு மேல கதைதெரிஞ்சிருக்கும் இதனால, ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர் கொள்ளணும் மற்றும் பல பேரிடம் ஒப்புதலும் (COPY RIGHTS) வாங்கணும். இந்தப்படமும் இதுக்கு விதிவிலக்கல்ல!!!
ஏன்னா, பட ரிலீசிற்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், எதிர்மறை கருத்துக்கள்னு பல வந்துச்சு. BUT, ஒருத்தனும் இதை கண்டுக்கவே இல்லைனு சொல்லணும், ஏன்னா, படம் BOX OOFICE-ல தாறுமாறு ஹிட்டு!!
கதை:
1951, இரு போலீஸ் அதிகாரிகள் ஒரு திருட்டு சம்பந்தமாக ஆலன் டூரிங் வீட்டிற்கு விசாரிக்க வருகிறார்கள். ஆலனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் மீது சந்தேகத்தை வரவழைக்ககின்றன.
அவரது முன்னாள் வாழ்க்கையை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆலனை சோவியத் ரஷ்யாவின் உளவாளியாக இருக்க கூடும் என்று சந்தேகித்து அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்கிறது. ஒருநாள் PUB-ல் ஆலன் ஒருவனிடம் பார்சல் ஒன்றைத் தருகிறான், அவனை பிடித்து விசாரணை செய்யும்போது அவன் MALE PROSTITUTE என்றும் ஆலன் அவனது CUSTOMER என்றும் கூறுகிறான் .
அந்த சமயத்தில் பிரிட்டனில் ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக சட்டம் இருந்தது. இந்த சட்ட ஒழுங்கு மீறலை காரணமாக வைத்து போலீஸ் ஆலனை கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது!! பின் ஆலனின் பார்வையில் படம் விரிகிறது.
1939, பிரிட்டன் ஜெர்மனியின் மேல் போர் பிரகடனம் அறிவிக்கிறது. ஜெர்மன் தான் தாக்கப்போகும் இடம், நாள், தாக்கும் வழிமுறை போன்றவற்றை சங்கேத குறியீடுகளாக மாற்றி தன் படைக்கு அனுப்புகிறது. இதனால் பிரிட்டனுக்கு போரில் மிகப்பெரிய இழப்பு ஏற்ப்டுகிறது.
பிரிட்டனால் அவர்கள் அனுப்பும் சங்கேத வார்த்தையை கண்டறிய முடிகிறது ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் BLETCHLEY PARK என்ற இடத்தில் அலாஸ்டர் டென்னிஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்டறிய முயல்கிறார்கள்.
அந்த குழுவில் இணைய BLETCHLEY PARK செல்கிறான் ஆலன். அங்கே HUGH ALEXANDER, JOHN CAIRNCROSS, PETER HILTON, KEITH FURMAN, AND CHARLES RICHARDS போன்றோருடன் சேர்ந்து வேலை செய்கிறான்.
1951, வெளி உலகுக்குத் தெரியாத இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் ஆலன் கூறுகிறான். ஆனாலும் அவன் ஒழுங்கு மீறலுக்கான தண்டனைக்கு ஆளாகிறான். இருவிதமான வாய்ப்புகள் அவனுக்கு தரப்படுகின்றன. ஒன்று, 2 வருட சிறை தண்டனை இரண்டாமவது, 2 ஆண்டுகளுக்கு CHEMICAL CASTRATION எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வது. அவன் இரண்டாமவதை எடுத்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதாலும், தனிமையும் சேர்ந்து அவரது அறிவையும், உடலையும் பாதிப்படைய வைக்கிறது. பல மில்லியன் உயிர்களை காப்பாற்றிய அந்த கணித மேதை 1954-ஆம் ஆண்டு, தன் 41 வயதில், தற்கொலை செய்தி கொள்கிறார் என்ற செய்தியோட படம் நிறைவடைகிறது.
முடிந்தவரை படத்தின் கதையமைப்பை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இது தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் உள்ளன. குறிப்பாக படத்தின் வசனங்கள்!!!! உதாரணமாக, ஆலன் வேலை தேடி BLETCHLEY PARK செல்லும்போது அலாஸ்டர் டென்னிஸுடனுடன் நடக்கும் இன்டெர்வியூ காட்சி, தன் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆலன் நடத்தும் இன்டெர்வியூ காட்சி, இப்படி பல!!!
படத்தில் காண்பிக்கப்படும் ஆலன் டூரிங்கிற்கும் நிஜ ஆலன் டூரிங்கிற்கும் நெறைய வேறுபாடுகள்!!! படத்தில் வருபவன் எதற்கும் சிரிக்க மாட்டான், எப்போதும் சிடு சிடுன்னு இருப்பான், மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் எனவும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் நிஜத்திலோ ஆலன் இயல்பிலே மிகவும் HUMOURUS-ஆனவன். அனைவருடனும் நெருக்கமாகவே பழகவும் செய்தான்.
மிகவும் அருமையான பதிவு. தாங்கள் தேர்வு செய்யும் திரைப்படமும் அதற்கான காரணங்களும் மற்றும் படத்தின் விரிவாக்கமும் தான் என்னை படிக்க தூண்டுகிறது.
மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.