இந்தப்படத்தின் நாயகன் “லியோன்” ஒரு வளரத்துடிக்கும் புகைப்பட கலைஞன்! தனது புகைப்படங்களை எப்படியாவது கண்காட்சிகளாக வைக்க சூசன் என்ற பெண்மணியை அணுகுகிறான். அவளோ, அந்தப்புகைப்படங்கள் எந்த வகையிலும் தன்னை கவரவில்லை என்றும், தனக்குதேவையானது,பார்க்கும்போதே பதறவைக்கும்படியான புகைப்படங்கள் தான் என்றும் சொல்லி அனுப்பிவிடுகிறாள்!!

இவனும், அவ்வகைப்புகைப்படங்களுக்காக இரவில் தன் காமெராவுடன் அலைகிறான்!! அவ்வேளையில் ஆபத்திலிருக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற நேர்கிறது!! அப்போது எடுத்த புகைப்படங்களை சூசனிடம் காண்பிக்க, அது அவளுக்கு பிடித்துபோகிறது!! இன்னமும் இதே மாதிரி படங்கள் இருந்தால் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வதாக சொல்கிறாள்!! இவனும் ஆர்வத்துடன் இரவில் புகைப்படங்குளுக்காக அலைகிறான்!!!

ஓரிரு நாட்கள்  கழித்து, தான் காப்பாற்றிய அந்த பெண்ணை காணவில்லை என செய்தியை பார்க்க நேரிடுகிறது!! போலீஸில் சென்று அன்று நடந்த விஷயங்களை சொல்கிறான் ஆனால் அவனை யாரும் அங்கு நம்பவில்லை!!

மறுபடியும் தன் புகைப்படங்களுக்காக இரவில் அலையும் போது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிவரும் ஒருவனை காண்கிறான்!!! பார்க்கவே வித்யாசமாக இருக்கும் அவனை வித விதமாக புகைப்படம் எடுக்கிறான், அதுவும் ரகசியமாக!! மறுநாள், நேற்று எடுத்த புகைப்படங்களை டெவலப் செய்து பார்க்கும்போது, அம்மனிதனின் கையிலிருக்கும் மோதிரத்தை எங்கேயோ பார்த்ததாக இவன் நினைவிற்கு வர, அதற்குமுன்தான் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அளாசுகிறான்!!

அப்போது அவன் காண்பது, முன்பு காணாமால் போன பெண் ரயில் ஏறுகையில் கதவை திறந்து விட்ட மனிதனின் கையில் இருந்த மோதிரமும் இப்போது எடுத்த புகைப்படத்திலிருக்கும் மனிதனின் மோதிரமும் ஒன்றே என்பது!!! அவனை பற்றி மேலும் பல விபரங்கள் அறிந்து கொள்ள அவனை பின் தொடர்கிறான்….

அதற்கு பின் நடப்பவை அனைத்தும் படத்துல பாருங்க!!

ஆரம்பத்துல இருந்து சும்மா பர… பர…பரன்னு போகும் இந்தப்படம் “CLIVE PARKER” எனும் ஒரு எழுத்தாளரின்  சிறுகதையில்  இருந்து உருவாக்கப்பட்டது!!  இப்படத்தை இயக்கியவர் “Ryuhei Kitamura”எனும் Japanese filmmaker.

இவர் “BOOKS OF BLOOD” எனும் தனது சிறுகதை தொகுப்பை 6- புத்தகங்களாக  வெளியிட்டிருக்கிறார்!!  இந்தப்படம் அவரது முதல் பதிப்பிலிருந்த  ஒரு சிறுகதையில் இருந்து உருவாக்கப்பட்டது!! இதுவரை பலப்படங்களுக்கு இவரது கதை பயன்படுத்தப்பட்டிருக்கிறது!! உதாரணாமாக HELLRAISER SERIES, CANDYMAN, LORD OF ILLUSIONS.

தலையை துண்டாக வெட்டுவது, கண்களை நோண்டுவது, பற்கள் மற்றும் நகங்களை பிடுங்கி எறிவது என  ரத்தம் தெறிக்க… தெறிக்க…. எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தை UNCUT VERSION-ல் பாருங்க!!!

படத்திலிருந்து ஒரு காட்சி உங்கள் பார்வைக்கு,

 

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *